மகிழ்ச்சி பொன்மொழிகள்

Happiness Quotes in Tamil

இந்த தொகுப்பு தமிழ் “மகிழ்ச்சி பொன்மொழிகள் ( Happiness Quotes in Tamil ) “உள்ளடக்கியுள்ளது.

  • மகிழ்ச்சி பொன்மொழிகள் (மகிழ்ச்சி பற்றிய பொன்மொழிகள்)
  • Happiness Quotes in Tamil
  • happy ponmoligal in Tamil

மகிழ்ச்சி பொன்மொழிகள் (Happiness Quotes in Tamil)

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக
வையுங்கள்.. கிடைக்கும்
இடத்தில் பெற்றுக்கொண்டு..
கிடைக்காத இடத்தில்
கொடுத்து விட்டு செல்வோம்..!

மகிழ்ச்சி என்பது பெறுவதில்
இல்லை.. பிறருக்கு கொடுப்பதில்
தான் இருக்கிறது..!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது
பிறரை மகிழ வைப்பதில்
தான் இருக்கிறது..!

பிறக்கும் போதே யாரும்
மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்
கொள்ள நீயே முயற்சி செய்..!

ஒரு செயலை செய்வது வெற்றி
அல்ல.. அதை மகிழ்ச்சியாக
செய்வதே வெற்றி.. எதையும்
சிறு புன்னகையுடன்
எதிர்கொள்ளுங்கள்..!

கவலைகள் எங்கிருந்து வரும்
என்று தெரியாது.. ஆனால்
மகிழ்ச்சியும் புன்னகையும்
நம்மிடம் தான் இருக்கிறது..!

மகிழ்ச்சி என்பது நமக்குள்
விளைவது.. மற்றவர்களிடத்தில்
அதை தேட வேண்டியதில்லை..!

மகிழ்ச்சியை தேடிக்கொண்டே
இருந்தால்.. நிம்மதியை கூட
இழந்து விடுவோம்.. வாழ்க்கையை
அப்படியே ஏற்றுக் கொள்ள
கற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சி
தானே தேடி வரும்..!

உனக்கு யாரை பிடிக்கிறதோ
மகிழ்ச்சியுடன் பழகு..
உன்னை யாருக்கு
பிடிக்கவில்லையோ அவர்கள்
மகிழ்ச்சிக்காக விலகு..!

நம் தோல்வியில் சிலருக்கு
மகிழ்ச்சி இலாபமாக இருந்தால்..
நமக்கு அதில் கிடைத்த பாடம் தான்
இலாபமாக இருந்து விட்டு
போகட்டும்..!

நீங்கள் செய்யும் வேலையில்
நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்..!

நம்முடைய நற்பண்புக்கும்..
நம்முடைய அறிவாற்றலுக்கும்..
ஏற்றபடி தான் நாம் அடையும்
மகிழ்ச்சி இருக்கும்..!

வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சி
எது தெரியுமா..? உங்களால்
முடியாது என அடுத்தவர்கள்
கூறியதை முடித்துக் காட்டுவது..!

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால்.. வாழ்க்கை
வாழ முடியாத நரகமாக
மாறி விடும்..!

உன்னைச் சுற்றி உள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால்.. முதலில் நீ
மகிழ்ச்சியாக இரு.. உன்னிடம்
இல்லாத ஒன்றை நீ யாருக்கும்
கொடுக்க முடியாது..!

சூழ்நிலைகளை பிரச்சினைகளை
நினைத்து நினைத்து.. தற்போது
இருக்கும் உண்மையான
அளவை விட பெரிது படுத்தி..
உங்கள் மகிழ்ச்சியை
இழந்து விடாதீர்கள்..!

பிறர் ரசிக்க வாழ்வதை விட..,
உன் மனம் உன்னை ரசிக்க
வாழ்வது தான் உண்மையான
மகிழ்ச்சியை தரும்..!

வாழ்வில் எவ்வளவு தான் மகிழ்ச்சி
இருந்தாலும்.. மனம் ஏங்குவதோ
மற்றவரை போல வாழ வேண்டும்
என்று தான்..!

எதிர்பார்ப்பு இல்லாமல்
மற்றவர்களை பார்த்து புன்னகை
செய்யுங்கள்.. உங்களை விட
அழகானவர்கள் இந்த உலகில்
யாரும் இல்லை..!

நேற்று மற்றும் நாளையை
மறந்து விட்டு.. இந்த நிமிடத்தை
வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி..!

மகிழ்ச்சி எங்கே என்று தேடாமல் இரு..
அதுவே இங்கே பெரிய மகிழ்ச்சி..
தேடலில் தொலைந்து போகாதே
மனமே..!

மேலும் படியுங்கள்…