நேர்மை கவிதைகள் வரிகள் | Nermai Quotes Tamil

நேர்மை கவிதை

இந்த தொகுப்பு “நேர்மை கவிதைகள் வரிகள் | Nermai Quotes Tamil” பற்றியது. மனிதனாக பிறந்த ஒருவனிடம் இருக்க வேண்டிய சிறந்த குணங்களில் ஒன்று தான் நேர்மை.

ஒருவன் வாழும் போது நேர்மை எனும் குணத்தை எப்போதும் தன் வாழ்க்கையுடன் வைத்திருக்க வேண்டும். நேர்மையாக வாழ்பவன் யாருக்கும் பயம் கொள்ள தேவையில்லை.

நேர்மை கவிதைகள் வரிகள் | Nermai Quotes Tamil

ஒரு நேர்மையான மனிதனுக்கு
எல்லாப் பக்கங்களிலும் மிகப்
பெரிய பிரச்சனைகள்
சூழப்பட்டாலும் தொடர்ந்து
நேர்மையாகவே இருப்பான்.

கொள்கைகளில் சிறந்த
கொள்கை நேர்மை
மட்டும் தான்.

கடவுளின் உன்னதமான
படைப்பு நேர்மையான
மனிதன்.

நேர்மையை விட சிறந்த
ஆணவம் எதுவுமில்லை.

நேர்மை இல்லாதது
சூரிய ஒளி இல்லாத
நாள் போன்றது.. இருளாக
தான் இருக்கும்.

நேர்மையான
வாழ்க்கையை நடத்துவது
கடினம்.. ஆனால் நடத்த
முடியாதது அல்ல.

எப்போதும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்,
எல்லோரும் புகழுக்காக
பசியும், நேர்மையான
பாராட்டுக்காக பட்டினியும்
இருக்கிறார்கள்.

நேர்மைக்காக ஒரு
மனிதனுக்கு அபராதம்
விதிக்கப்படும் போது
அவன் பொய் சொல்ல
கற்றுக் கொள்கின்றான்.

ஒரு நேர்மையான
மனிதனின் சிந்தனை
எப்போதும் நியாயமானது.

நேரங்கள் நேர்மையானவை
அதனால் தான் யாருக்கும்
காத்திருப்பதில்லை.

நேர்மையாக இருந்து எதை
சாதித்து விட்டாய்..? என்று
கேட்பவர்களிடம் தைரியமாக
சொல்லுங்கள்.. நேர்மையாக
இருப்பதே பெரிய சாதனை
தான் என்று.

கஷ்டத்திலும் நேர்மையாக
இரு.. நீ ஏமாற்றப்பட்டாலும்
பிறரை ஏமாற்றாதே.. உன்
நம்பிக்கை உன்னை
கை விடாது.

நேர்மையற்றவர்களாக
வாழ்வதை விட ஏழையாக
வாழ்வது சிறந்தது.

அதிகமாக கோபம்
வருகின்றது என்றால்
அவர்கள் நேர்மையானவர்கள்
என்று அர்த்தம். ஏனென்றால்
ஏமாற்றங்களை தாங்கும்
சக்தி நேர்மையானவர்களிடம்
இருப்பதில்லை.

நேர்மை என்பது சிறந்த கொள்கை;
ஆனால் இந்த கொள்கையை
வார்த்தையில் மட்டும்
வைத்திருக்கும் நபர்
நேர்மையான நபர் அல்ல.

நான் நேர்மையானவன் அல்ல
என்று சொல்லுவதே ஒரு
வகை நேர்மை தான்.

நேர்மையற்றவர்கள் தங்கள்
தவறுகளை தங்களிடமிருந்தும்
மற்றவர்களிடமிருந்தும்
மறைக்கிறார்கள்..!
நேர்மையானவர்கள்
தவறுகளை ஒப்புக்
கொள்கிறார்கள்.

நேர்மை என்பது அனைத்து
வெற்றிக்குமான
அத்திவாரமாகும்.

உங்கள் நேர்மை, உங்கள்
அன்பு, உங்கள் இரக்கம்
உங்களுக்குள் இருந்து வர
வேண்டும்.. போதனைகளில்
இருந்து அல்ல.

வாழ்க்கையின் ஒவ்வொரு
துறையிலும் வெற்றி பெற
நேர்மை மிகவும் முக்கியம்.

தவறான வழியில்
செல்பவனை வாழ்த்தியும்,
நேர்மையான வழியில்
சென்று தோற்பவனை
தாழ்த்தியும் பேசும்
சமுதாயம் தான்
குற்றங்களுக்கு காரணம்.

அதிகம் கோபப்படுபவனை
கவனித்து பார்த்தால்
தெரியும்.. அவன்
நேர்மையானவனாகவும்
யாரையும்
ஏமாற்றாதவனாகவும்
இருப்பான்.

முட்டாள் தனம்
நேர்மையுடன்
ஆரம்பிக்கின்றது.

திருட வாய்ப்பில்லாத
திருடன், தான் ஒரு
நேர்மையான மனிதர்
என்று நினைக்கிறார்.

நேரான மரங்கள் முதலில்
வெட்டப்படுகின்றன,
நேர்மையானவர்கள்
முதலில் அவமானம்
செய்யப்படுகிறார்கள்.

நேர்மை என்பது ஆழ்ந்த
கொள்கை மட்டுமல்ல..
மிக உயர்ந்த ஞானமும்
ஆகும்.

உங்கள் சொந்த
பிழைகளை நீங்களே
ஒப்புக் கொள்வதை விட
வேறு என்ன நேர்மை
இருக்கிறது.

மேலும்