புயலிலே ஒரு தோணி கட்டுரை

Puyalile Oru Thoni

இந்த பதிவில் “புயலிலே ஒரு தோணி கட்டுரை” பதிவை காணலாம்.

மிகச் சிறந்த புதின எழுத்தாளராகிய ப.சிங்காரம் அவர்களால் படைக்கப்பட்ட நாவலான “புயலிலே ஒரு தோணி” என்ற நூல் சிறந்த புதின நூலாக விளங்குகின்றது.

புயலிலே ஒரு தோணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ப.சிங்காரம்
  3. கடற்கூத்து
  4. கடலருவி
  5. தலைமை மாலுமி கப்பித்தான்
  6. பயன்படுத்தப்பட்ட அடுக்குத் தொடர்கள்
  7. முடிவுரை

முன்னுரை

இயற்கையானது அழகாகவும்⸴ மென்மையாகவும்⸴ மனதை மயக்குவதாகவும் இருக்கும். அதே இயற்கை அசைவு சீற்றமாக மாறும் போது அதை எதிர்கொண்டு வெல்வது கடினம்.

புயலிலே ஒரு தோணி ஒரு புதினம் என்னும் நூலை எழுதிய ஆசிரியர் ப.சிங்காரம் ஆவார். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினார்கள்.

அவர்களில் ப.சிங்காரமும் ஒருவராவார். இவரின் அனுபவமும் கற்பனையும் கலந்ததே இந்நூலாகும்.

வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்ததாகும் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம் என்ற சிறப்பினை இது பெறுகின்றது. புயலிலே ஒரு தோணி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ப.சிங்காரம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவராவர். கு.பழனிவேல் நாடார் மற்றும் உண்ணாமலை அம்மாளுக்கு 3வது மகனாகப் பிறந்தார். இவர் எழுதியது “கடலுக்கு அப்பால்”, “புயலிலே ஒரு தோணி” என இரண்டு நாவல்கள் தான்.

ஆனால், அந்த இரு நாவல்களும் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்பவை. எழுதிய போது பெரிதாகப் போற்றப்படாமல் இருந்தாலும், இப்போது வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்படுகின்றன.

கடற்கூத்து

வெயில் சட்டென்று காணாமல் போனது. இதனால் கப்பல் முழுவதிலும் புழுக்கம் நிறைந்தது. வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மாலுமிகள் உட்பட அனைவரும் பரபரப்பாக இருந்தனர். பாய்மரங்கள் கட்டப்பட்டன. இடி இடித்து மின்னல் மின்னி வானைப் பிளந்தது. ஓங்கி அடித்த அந்த அலையில் கப்பல் சுழன்றது.

கடலருவி

வானம் பிளந்து மழை பொழிந்தது. பேய் மழை கொட்டியது. தலைக்கு மேல் கடலாய் மழை பொழிந்தது. எங்கும் நீர் சூழ்ந்தது. வானமும் தென்படவில்லை⸴ கடலும் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் உப்பு நீர் நிறைந்திருந்தது.

தலைமை மாலுமி கப்பித்தான்

கப்பலின் தலைமை மாலுமி கப்பித்தான் ஆவார். கப்பித்தானுடன் மாலுமிகள் அனைவரும் பரபரப்பாகினர். தலைமை மாலுமியின் குரல் கேட்டு அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

கப்பலில் நீர் இறைக்கின்றார்கள். கப்பல் எங்கும் காணப்பட்ட பொத்தான்களை அடைகின்றார்கள். நீர்க் களத்தில் நின்று அனைவரும் போராடுகின்றனர்.

பயன்படுத்தப்பட்ட அடுக்குத் தொடர்கள்

புதினம் முழுவதிலும் பல அடுக்கு தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன தொங்கான் எலும்புகள் முறிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒளியுடன் தத்தளித்தது⸴ இருளிருட்டு இருட்டிருட்டு⸴ கும்மிருட்டு குருட்டிருட்டு⸴ தலைக்குமேல் காணப்பட்டது⸴ நடுநடுங்கித் தாவதித் தாவி குதித்து குதித்து விழுந்து விழுந்து நொறு நொறு நொறுங்குகிறது⸴ சூரியன் சூரியன்.. கரை கரை.. கடலலைகள் மொத்து மொத்தென்று மோதின.

முடிவுரை

புயலிலே ஒரு தோணி புத்தகமானது ஆசிரியரால் மிகவும் சிறப்பான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சொல்லாடல்கள்⸴ மொழித் திறமை என்பனவும் சிறப்புற அமையப் பெற்றுள்ளது.

தனது அனுபவத்தை கற்பனையுடன் கூடிய வகையில் வெளிப்படுத்திய விதம் புதினத்தை மேலும் சிறப்பிக்கின்றது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று கூறி இதனை மேலும் சிறப்பித்துள்ளனர்.

You May Also Like:

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

பேரிடர் மேலாண்மை கட்டுரை