வாழ்க்கை தத்துவம் | Valkai Thathuvam

இந்த பதிவிலுள்ள வாழ்க்கை தத்துவம் | Valkai Thathuvam என்ற தொகுப்பினுடாக வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை நீங்கள் காண முடியும்.

வாழ்க்கை தத்துவம் | Valkai Thathuvam

இருக்கும் போது அன்பாய்
சில வார்த்தைகள்
பேசாதவர்கள் இறக்கும்
போது அழ தகுதியற்றவர்கள்.

உடலை கட்டழகாக
வைத்திருப்பதால் ஆணின்
அழகு வெளிப்படுவதில்லை..
இதயத்தை அன்பாக
வைத்திருப்பதில் தான்
ஆணின் உண்மையான
அழகு வெளிப்படுகின்றது.

ஒரு விடயத்தை ஆயிரம்
தடவை சரியாக செய்தாலும்..
நீ செய்யும் ஒரு தவறை
வைத்து உன்னை எடை
போடுவது மனித இயல்பு..

பிரச்சனையே இல்லாத
ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றால் அது மரணம் தான்..!
தடைகளை எதிர் கொண்டு
அவற்றை அடக்கி அவற்றின்
மீது சவாரி செய்வது தான்
ஒருவனுக்கு பெருமை..!

உப்பாக இருந்தாலும் சரி
உறவாக இருந்தாலும் சரி
அதிகம் எடுத்துக் கொண்டால்
உணவும் உறவும்
கசந்து விடும்..!

பயத்திற்கு முக்கியத்துவம்
அளிக்காமல் முயற்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
வெற்றி என்பது நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்..!

உன்னை விட்டு விலகி
செல்பவை எதுவாக
இருந்தாலும் சந்தோசமாக
வழி அனுப்பி வை..
நீ இழந்ததை விட
சிறப்பாக தர வாழ்க்கை
காத்துக் கொண்டிருக்கிறது..!

பேசி எந்த பயனும் இல்லை
என்று தெரிந்தால் மௌனம்
சிறந்தது.. பேசி எந்த
அர்த்தமும் இல்லை என்றால்
பிரிவே சிறந்தது..!

வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே..!

தேவையற்ற உறவுகளிடம்
நீ காட்டும் அன்பையும்
உபசரிப்பையும் உன்
அன்பிற்காக ஏங்கும்
உறவுகளிடம் காட்டி பார்..
உன் வாழ்வின் அன்பின்
உருவத்தினை உணர்வாய்..!

உனக்கான இடத்தை
யாரும் தட்டிப் பறிப்பதில்லை
நீ தான் உன் இடத்தை
தவற விடுகிறாய்..!

பிறரை குறைத்து பேசி
உன் மதிப்பைக் கூட்ட
எண்ணாதே.. அப்படி
செய்வதால் கூடுவது
உன் தலைக்கணம் தான்
உன் மதிப்பு அல்ல..!

தைரியம் இல்லாமல் ஒரு
மனிதனால் எதுவும்
செய்ய முடியாது. ஒருவனின்
சிறந்த பண்புகளில்
இதுவும் ஒன்று.

நம் மீது நமக்கு நம்பிக்கை
இருக்கும் வரை வாழ்க்கை
நம் கையில் தான் இருக்கும்.

உன்னை நிராகரித்தவர்களை
உன்னுடன் பேச காத்திருக்கும்
நிலமையை உருவாக்கு
அது தான் உன்
மிகப் பெரிய வெற்றி..!

எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம் என்ற துணிச்சல்
நாளை வரும் துன்பங்களைக்
கூட துரத்தி அடிக்கும் என்பதை
என்றும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்..!

பாதை இலகுவா கஷ்டமா
என்று பார்க்காதீர்கள் நீங்கள்
செல்லும் பாதை சரியானதா
என்று மட்டும் பாருங்கள்..
போகும் இடத்தை
அடைந்து விடலாம்..!

உலகில் ஒருவனுக்கு
கிடைக்கும் உயர்ந்த வரம்
திருப்தியான மனம்.

அடைவதற்கு
ஆசைப்படுகிறவன் நிச்சயம்
இழப்பதற்கும் தயாராக
இருக்க வேண்டும்.

வாழ்க்கை தத்துவம் (Valkai Thathuvam) என்பது அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதால் இது உங்களுக்கு சிறந்த பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

இந்த வாழ்க்கை தத்துவம் (Valkai Thathuvam) உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக கட்டியமைக்க சிறு படிப்பினையை கற்றுக் கொடுக்கும்.

உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள்