மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை

makkum kuppai makkatha kuppai katturai in tamil

இந்த பதிவில் “மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை” பதிவை காணலாம்.

மக்காத குப்பைகள் இயற்கை சூழலுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்கின்றன. மாறாக மக்கும் குப்பைகள் பூமியை மேலும் வளமடைய செய்கின்றன.

மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை

மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மக்கும் குப்பைகள்
  3. மக்கும் குப்பைகளின் பயன்கள்
  4. மக்காத குப்பைகள்
  5. மக்காத குப்பையின் விளைவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள்” ஆரோக்கியமாக வாழ்வதற்கு தொற்று நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேண வேண்டும்.

சுகாதாரம் என்பது வெறுமனே நம்மை மாத்திரம் சுத்தமாக வைத்திருப்பது அல்ல சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

தற்காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான சவால்களில் ஒன்று சுற்றுப்புற சூழலுக்கு கேடுவிளைவிக்கும் குப்பை ஆகும்.

இவ்வகையான குப்பைபகளில் பிரதானமாக இரண்டு வகையான குப்பைகள் காணப்படுகின்றன. அவையாவன மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகும் இவை தொடர்பாக இக்கட்டுரையில் நாம் நோக்கலாம்.

மக்கும் குப்பைகள்

இயற்கையிலிருந்து எவ்வகையான பொருட்கள் எல்லாம் வருகின்றதோ அதை மீண்டும் இயற்கையே எடுத்துக்கொள்ளும் அவற்றை தான் மக்கும் குப்பை என்று அழைப்பார்கள்.

சிறப்பாக சொல்லின் நுண்ணங்கிகளால் சிதைக்க பட கூடிய குப்பைகளை மக்கும் குப்பைகள் எனலாம்.

நாம் தினமும் உபயோகப்படுத்தும் காய்கறி பழவகைகள் மற்றும் அனைத்துவிதமான உணவு பொருட்களின் கழிவுகள், இலைகள், தேங்காய் நார் சிரட்டை ஓடுகள் போன்றனவே இந்த மக்கும் குப்பைகளாக சொல்லப்படுகின்றன.

சுருங்க கூறின் எவை எல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கி மண்ணாகி விடுமோ அவையாவும் மக்கும் குப்பைகளாகும்.

மக்கும் குப்பைகளின் பயன்கள்

இத்தகைய குப்பைகளை நாம் வீட்டிலேயே மக்க வைத்து வீட்டில் உள்ள செடிகளுக்கு இயற்கையான உரமாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மக்கும் குப்பைகளை நாம் தனியாக பிரித்து கொடுப்பதனால் இதில் இருந்து இயற்கை உரமானது தயாரிக்க முடியும்.

இயற்கை உரங்கள் இடுவதனால் பயிர்கள் நல்ல விளைச்சல் தருகின்றது. இது நாட்டின் இயற்கை விவசாயத்தை மேலும் மேம்படுத்தும். இந்த இயற்கை உணவுகளால் எமது உடல் ஆரோக்கியம் மேலும் மேம்படும்.

மக்காத குப்பைகள்

நுண்ணுயிர்களால் சிதைக்க கூடிய அல்லது சிதைக்க நீண்டகாலம் எடுக்க கூடிய பொருட்கள் அனைத்தும் மக்காத குப்பைகள் என அழைக்கலாம்.

இவற்றில் நெகிழியால் ஆன பொருட்கள் தண்ணீர் போத்தல்கள், பொலித்தீன் பைகள், அட்டைகள், செராமிக்ஸ் பொருட்கள், உலோக குப்பைகள், பொதிசெய்ய பயன்படும் பிளாஸ்டிக் கண்ணாடி பொருட்கள் என்பன அனைத்தும் மக்காத பொருட்களாக உள்ளன.

மக்காத குப்பையின் விளைவுகள்

மக்காத குப்பைகளின் ஒரு பகுதி தான் மறுசுழற்சி என்னும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ளவை தேக்கி வைக்கப்படுகின்றன.

இவை மனித இனத்துக்கு மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள நுண்ணங்கிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றினால் மண்வளமானது பாதிக்கப்படுகின்றது. இவற்றினை எரிப்பதனால் காற்று மாசடைவதோடு நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றன. கடலில் கொட்டுவதன் மூலமாக கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

முடிவுரை

இவ்வாறு மக்காத குப்பைகள் இயற்கை சூழலுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்கின்றன. மாறாக மக்கும் குப்பைகள் பூமியை மேலும் வளமடைய செய்கின்றன.

எனவே மனிதர்களாகிய நாம் குப்பைகளை தரம் பிரித்து அவற்றை முகாமை செய்து குப்பைகள் அற்ற ஒரு தூய்மையான சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இதுவே நமது எதிர்காலத்தை வளமாக மாற்றும்.

You May Also Like :
எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை
நெகிழி குப்பை இல்லாத எதிர்காலம் கட்டுரை