நான் கண்ட வினோத கனவு கட்டுரை

Naan Kanda Vinotha Kanavu Katturai In Tamil

இந்த பதிவில் “நான் கண்ட வினோத கனவு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

நான் கண்ட வினோத கனவு கட்டுரை – 1

அன்றொரு நாள் இரவு நான் ஒரு கனவு கண்டேன் அதனை நினைக்கையில் என் மனதில் ஒரு விதமான மகிழ்ச்சியை உணர முடிகிறது. நான் ஒரு விமானத்தில் பறந்து கொண்டிருந்தேன். என்னோடு எனக்கு பிடித்த நண்பர்களும் என்னோடு கூடவே வருகின்றனர்.

நாங்கள் ஒரு அழகான சிறிய தீவு ஒன்றில் தரையிறங்கினோம். அந்த தீவு மிகவும் அழகானதாகவும் ஆச்சரியங்கள் நிறைந்தனவாகவும் இருந்தது. அங்கே இருக்கின்ற இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிட நானும் எனது நண்பர்களும் மகிழ்ச்சியோடு ஓடி சென்றோம்.

நாம் பார்த்திராத வகையில் பச்சைபசேல் என்ற காடுகள், அழகான நீர் வீழ்ச்சிகள், பல வினோதமான விலங்குகள், பறவைகள் அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தன. நாங்களும் அந்த தீவினை சுற்றி பார்வையிட்டோம்.

அங்குள்ள அழகிய இடங்களில் புகைப்படங்கள் எடுத்து கொண்டோம். அங்கே பழுத்திருந்த கனிகளை பிடுங்கி உண்டு எமது பசியினை போக்கி கொண்டோம். அங்குள்ள அழகான அருவிகளில் நாம் நீராடி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தோம்.

பார்ப்பதற்கு அழகாக காட்சியழித்த அந்த தீவில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதை நாம் அப்போது அறியவில்லை. தீடிரென ஒரு பேரிரைச்சல் ஒரு பயங்கர தோற்றமுள்ள ஒரு கரடி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதனை கண்ட எமக்கு பயம் தொற்றிக் கொண்டது. அந்த கரடியிடமிருந்து தப்பிக்க நாங்கள் அனைவரும் மிகவேகமாக ஒரு திசையினை நோக்கி கத்தியபடியே ஓடினோம். எங்களை காப்பாற்றி கொள்ள எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அடர்ந்த காட்டுக்குள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தோம்.

பயத்தால் எனக்கு உடல் நடுங்க துவங்கியது வியர்வையும் கண்ணீரும் மேலிட நான் மேலும் வேகமாக ஓட முற்றபடுகையில் அந்த கரடி எமக்கு அருகில் நெருங்கி வருகையில் தீடிரென நான் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தேன்.

அப்பொழுது தான் நான் கண்டது ஒரு கனவு என எனக்கு புரிந்தது. நான் கண்ட அந்த கனவு எனக்கு வாழ்வில் மறக்க முடியாததாக கனவு ஆகும்.

நான் கண்ட வினோத கனவு கட்டுரை – 2

எண்ணி பார்க்கையில் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு கனவொன்று இருக்கிறது. அந்த கனவு நான் ஒரு இராணுவ வீரனாக எல்லையில் எனது நாட்டை காப்பது போன்ற ஒரு கனவாகும்.

வழக்கம் போலவே பனி சூழ்ந்த ஒரு எல்லை பகுதியில் நானும் எனது நண்பர்களும் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். எதிரிகள் எந்த நேரமும் எமது எல்லைக்குள் நுழைந்து விடக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனவே நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தோம். கண் இமைக்கும் நேரம் கூட நாம் கவன குறைவாக இருந்தால் எதிரிகள் எம்மை தாக்கி விட்டு உள்நுளைந்து விடுவார்கள். இந்த இக்கட்டான சூழலில் எம்மையும் எமது நாட்டையும் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாடே நிம்மதியாக உறங்கும் வேளையில் நாம் காவலில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். பனி, காற்று ஒரு புறம் எங்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது. பல சிந்தனைகள் மனதுக்குள் எழுவதுமாக எனது குடும்பத்தின் நினைவுகள் ஓடுவதுமாக நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென எதிரிகளின் எல்லை பகுதியில் இருந்து நகர்வுகள் தென்பட்டன. அவர்கள் எங்களை நோக்கி தாக்கியபடி முன்னேறுவதை அவதானிக்க முடிந்தது. இதனை எதிர்பார்த்த நாமும் பதில் தாக்குதல் நடாத்தினோம்.

துப்பாக்கி குண்டுகள் எம்மை உரசி செல்வதை எம்மால் உணர கூடியதாக இருந்தது. எனது நண்பர்கள் சிலர் காயமடைந்து குருதி சிந்துவதனையும் வலியால் துடிப்பதனையும் காண முடிந்தது.

என்ன செய்வது இவை அனைத்தும் நம் நாட்டிற்கான தியாகம் தான். அவர்கள் முன்னேற முடியாத படி நாங்களும் கடுமையாக எதிர் தாக்குதல் நடாத்தி அவர்களது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினோம்.

பின்பு எனது காயமடைந்த நண்பர்களை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு தூக்கி சென்றோம். திடீரென நான் விழிக்கையில் காலை விடிந்து விட்டது. ஆம் அது ஒரு கனவு. இவ்வாறு ஒரு யுத்தம் நிறைந்த நான் கண்ட கனவை என்னால் வாழ்வில் மறக்க முடியாது.

You May Also Like:

நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை

நான் ஒரு பறவையானால் கட்டுரை