நான் ஒரு பறவையானால் கட்டுரை

Naan Oru Paravai Aanal Katturai In Tamil

இந்த பதிவில் “நான் ஒரு பறவையானால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.

நான் ஒரு பறவையானால் கட்டுரை – 1

எங்கே துவங்கி எங்கே முடியும் என்றே தெரியாத இந்த ஆச்சரியங்கள் நிறைந்த வானத்தை பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள்.

இந்த வானத்தை தொடவேண்டும். இங்கே அழகிய சிறகுகளை விரித்து பறக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் கற்பனைகள் யாவருக்கும் எழும் வானில் சுதந்திரமாக பறக்கின்ற பறவைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் அதனை போலவே நானும் பறக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

நான் ஒரு பறவையானால் இன்னல்கள் நிறைந்த மனித வாழ்வில் இருந்து விடுபட்டு வானில் பறப்பேன். இந்த வானமே எல்லை என்று உயர உயர பறந்து இந்த கவலைகள் அனைத்தையும் நான் மறப்பேன்.

எல்லோர் மனதுக்குள்ளும் ஏராளம் கனவுகள் இருக்கும் ஆயிரம் கவலைகள் இருக்கும். தன் கனவுகளை அடைந்து கொள்ள பல்வேறு தடைகள் உருவாகும். இவ்வாறான தடைகள் ஏதும் பறவையான எனக்கு இருக்காது.

நாள் முழுவதும் இயற்கையோடு நான் இணைந்து பறப்பேன். அதன் அற்புத அழகை கண்டு மகிழ்வேன் என் மனம் மகிழ கீச்சிட்ட குரலில் பாடுவேன். என் இசை கேட்டு மனிதர்களும் மனம் அமைதி அடைவார்கள்.

எனக்கு பசிக்கும் போதெல்லாம் இந்த இயற்கை வரமாக அளித்த பழங்களையும் தானியங்களையும் பசி தீர உண்பேன் எனக்கு தாகம் எடுத்தால் நீருற்றுக்களிலும் சுனைகளிலும் தண்ணீர் அருந்துவேன்.

வெப்பமோ குளிரோ என் மெல்லிய சிறகுகளை ஒன்றும் செய்து விடாது. அவற்றினை தாண்டி நான் பறந்து செல்வேன். கடல் தாண்டி கண்டம் தாண்டி ஒரு தேசாந்திரி போல இந்த உலகை நான் வலம் வருவேன்.

நான் ஒரு பறவையானால் காலம் உள்ள வரை இந்த காற்றில் மிதந்த படி என் வாழ்வை நான் வாழ்ந்திடுவேன்.

நான் ஒரு பறவையானால் கட்டுரை – 2

மாலை பொழுதொன்றில் மங்கல் வானத்தில் கூட்டம் கூட்டமாக வானத்தை அலங்கரிக்கும் இந்த பறவை கூட்டங்களை என்னால் ரசிக்காமல் இருக்க முடிவதில்லை.

நான் ஒரு பறவையாக மாறி விடக்கூடாதா? இந்த பூமி மொத்தமும் அழகாய் மாறி விடாதா? என்று எனக்குள் நானே ஏங்கி கொள்வேன்.

ஆம் இந்த பறவைகள் போல நானும் ஆனால் எத்தனை நன்மைகள் ஒரு பொறுப்பு இல்லை, ஒரு அழுத்தம் இல்லை, இந்த பணத்தின் பின்னால் ஓடவேண்டியது இல்லை, எவர் அவச்சொல்லையும் கேட்க வேண்டியதில்லை, யாரையும் பகைத்து கொள்ள தேவையில்லை இதை தானே சுதந்திரம் என்பார்கள்.

ஆம் நான் சுதந்திரத்தை விரும்புகின்றேன். இந்த பாழ்பட்ட மனிதர்களின் முட்டாள் தனமான விதிமுறைகளை வெறுக்கின்றேன். அதிகாரத்தையும் ஆபத்து விளைவிக்கும் பேராசையையும் வெறுக்கின்றேன்.

அதனால் தான் பறவையாகி இந்த வானில் பறக்க வேண்டும் என்ற பேராசை கொள்கின்றேன். நான் இங்கு எல்லார் மீதும் அதிக அன்பு காட்டவேண்டும். எல்லோரும் மகிழ்வாக வாழவேண்டும். இங்கே யாரும் கண்ணீர் சிந்தவே கூடாது. என்னை போலவே எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும். இதனால் தான் நான் பறவையாக ஆசை கொள்கின்றேன்.

பறவைகளிடமிருந்து மனிதர்கள் பலவற்றை கற்று கொள்ள முடியும். நான் பசிக்கு உண்பேன் அதற்காக மற்றவர்களின் உணவை நான் பதுக்கி வைப்பதல்லை, நான் சுறுசுறுப்பாக இருப்பேன் அதற்காக அடுத்தவரின் உழைப்பை சுரண்டபோவதில்லை, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் அதற்காக அடுத்தர்களை வேதனைப்படுத்தி நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன், இதனை பறவையாகி என்னிடம் இருந்து மனிதர்கள் கற்று கொள்ளலாம்.

ஒற்றை நொடியில் முடிந்து போகின்ற வாழ்வு ஆதலால் முடிந்த வரை சுதந்திரமாக அடுத்தவர்களையும் வாழ விட்டு நாமும் வாழவேண்டும் என்று சொல்லுகின்ற பறவைகள் போல நானும் வாழ்வேன்.

You May Also Like:

நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை

எனது கனவு நூலகம் கட்டுரை