நான் ஒரு தொலைக்காட்சி கட்டுரை

Naan Oru Tholaikatchi Katturai

இந்த பதிவில் “நான் ஒரு தொலைக்காட்சி கட்டுரை” என்ற தலைப்பில் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ள இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.

நான் ஒரு தொலைக்காட்சி கட்டுரை – 1

இன்றைய உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த சிறந்த பொழுதுபோக்கு சாதனாமாக நான் திகழ்கின்றேன்.

ஆம் நான் ஒரு தொலைக்காட்சி எத்தனையோ அழகான காட்சிகளையும் கலைவடிவங்களையும் செய்திகளையும் அழகான திரையில் ஒளியும் ஒலியும் சேர்த்து நான் மக்களின் கண்களுக்கு விருந்தாக வழங்குகின்றேன்.

இன்று நான் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. சினிமா என்ற ஊடகம் ஆரம்பித்த நாள் முதல் இந்த மக்களிடையே நான் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளமாகும். பல நல்ல கருத்துக்கள், ஆடல்கள், பாடல்கள், பொழுது போக்குகள் என்று பல கதைகள் சொல்லும் சினிமாக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பங்கு எனக்கு இருக்கின்றது.

ஓய்வு நாட்களில் குடும்பங்களோடு உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற அந்த அழகான நினைவுகள் அனைவருக்கும் இருக்கும். கறுப்பு வெள்ளையில் இருந்து வர்ணம் வரையாக எனது வளர்ச்சி அபரிமிதமானது.

பற்பல சிறந்த திரைப்படங்கள், சிறந்த பாடல்கள், நாடகங்கள், விளையாட்டு நிகழ்வுகள், செய்திகள் என்று அனைத்து விடயங்களையும் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து நான் காண்பிப்பேன்.

வீட்டிலே உள்ள அனைவருக்கும் பிடித்த பல வகையான நிகழ்வுகளையும் நான் காண்பிப்பதனால் என்னை அனைவருக்கும் பிடித்து விடுகின்றது.

உலகம் செல்கின்ற பாதையில் இந்த மனிதர்களும் வளர்ச்சி அடைந்து செல்ல ஒரு உலகளாவிய தொழில்நுட்ப சாதனமாக நான் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இன்று வந்துவிட்டேன்.

மனித குலத்தின் அடுத்த பரிநாமத்தினையும் அவர்களது மனநிலையினையும் மாற்றிய பங்கு நிச்சயமாக எனக்கு உண்டு என்பதை இந்த உலகம் அறியும்.

நான் ஒரு தொலைக்காட்சி கட்டுரை – 2

இன்றைய நாள் ஒன்றில் என்னை பார்க்காமல் தமது வாழ்வை கடக்கும் மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களது வாழ்வில் தொலைக்காட்சி ஆகிய நான் நெருக்கமாக மாறிவிட்டேன்.

எத்தனையோ பல விடயங்களை தினம் தினம் நான் சுமந்து வருகின்றேன். மிகவேகமாக மாறுகின்ற உலக நடப்புக்கள் செய்திகள் போன்றவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்துகின்றேன்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்டூன் மற்றும் திரைப்படங்களை காட்சிப்படுத்தி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றேன். சிறந்த திரைப்படங்களை கொண்டு அவர்களை பிரமிக்க வைக்கின்றேன்.

நல்ல பாடல்களை ஒளிபரப்பி அவர்கள் மனதை மகிழ்விக்கின்றேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகின்ற பல நிகழ்வுகளை அன்றாடம் என் வாயிலாக கண்டு மகிழ முடியும்.

உலகமெங்கும் நடக்கின்ற விளையாட்டு நிகழ்வுகளை நேரலையாக காண கூடிய வசதியினை ஏற்படுத்தியிருக்கின்றேன். இன்றைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த பொழுது போக்கு சாதனமாக அனைவரையும் நான் கவர்ந்துள்ளேன்.

இதனால் சிலர் தமது வாழ்வில் அதிகளவான நேரத்தை என்னோடு செலவழிப்பதனால் உறவுகளோடு நேரம் செலவழிப்பது குறைந்து வருகின்றது. மற்றும் கல்வி கற்கின்ற மாணவர்கள் அதிகளவான நேரத்தை என்னோடு செலவழிப்பதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அதனை தவிர்த்து கொள்ளுங்கள் என்னை பயனுள்ள வகையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள். நான் உங்கள் வாழ்வை சிறப்பாக்கவே உருவாக்கபட்டேனே தவிர உங்கள் வாழ்வை பாழாக்கும் நோக்கமல்ல.

எனவே நீங்கள் என்னிடம் உள்ள நல்ல விடயங்களை உங்கள் வாழ்வில் எடுத்து கொண்டு உங்கள் வாழ்வில் மகிழ்வாக வாழவேண்டும் என்பதுவே எனது விருப்பமாகும்.

You May Also Like:

நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை