உணவு கலப்படம் கட்டுரை

unavu kalappadam katturai in tamil

இந்த பதிவில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் “உணவு கலப்படம் கட்டுரை” பதிவை காணலாம்.

அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சில வர்த்தகர்கள் உணவு பொருட்களின் தரத்தை குறைக்கும் நோக்கில் கலப்படம் செய்கின்றனர்.

உணவு கலப்படம் கட்டுரை

உணவு கலப்படம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கலப்படம் செய்யப்படும் உணவுகள்
  3. கலப்படத்தின் விளைவுகள்
  4. கலப்பட தடைச்சட்டம்
  5. அடையாளம் காணும் முறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

எமது வாழ்வில் உணவு என்பது தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசிய விடயமாகும். உணவு எந்த அளவு ஆரோக்கியமானது என்பது அதன் தரத்தில் தங்கியுள்ளது. இன்றைய காலத்தில் மனிதர்கள் அதிகம் நோய் வாய்ப்படுவதற்கான பிரதான காரணம் உணவு பொருட்கள் தரமற்றவையாக இருப்பதுவே ஆகும்.

இன்று உணவில் அதிக கலப்படமானது இடம் பெறுவதனால் தான் நாம் இன்று எமது ஆரோக்கியத்தை தொலைத்து வருகின்றோம். அவை தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

கலப்படம் செய்யப்படும் உணவுகள்

இந்தியாவை பொறுத்த வரையில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சில வர்த்தகர்கள் உணவு பொருட்களின் தரத்தை குறைக்கும் நோக்கில் கலப்படம் செய்கின்றனர்.

பிரதானமாக மஞ்சள்தூள், சீரகம், மிளகாய்தூள், ஆப்பிள்கள் மற்றும் பழவகைகள், தேங்காய் எண்ணை, பருப்பு, தேன், நெய், தேனீர், கோப்பி போன்ற நாம் அன்றாடம் எடுத்து கொள்கின்ற பிரதான உணவுகள் அதிகம் கலப்படம் செய்து சந்தையில் விற்கப்படுகின்றன.

இவற்றினை வாங்கி நாம் உண்பதனால் உடலில் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன என விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளன.

கலப்படத்தின் விளைவுகள்

கலப்படம் செய்யப்பட்ட உணவுகளில் அதிகம் தடை செய்ப்பட்ட நிறமூட்டிகள், இரசாயன பதார்த்தங்கள் மற்றும் வாசனை பொடிகள் என்பன கலக்கப்படுவதனால் இவற்றினை உள்ளெடுக்கும் மனிதர்களுக்கு பல நீண்டகால நோய்கள் ஏற்படுகின்றன.

இதயம், ஈரல், சிறுநீரகம், குடல், இரத்தம் சார்ந்த பல நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட இவை நேரடியான காரணங்களாக விளங்குகின்றன. உலகளவில் இந்தியாவில் அதிக கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கலப்பட தடைச்சட்டம்

மக்கள் உண்கின்ற உணவில் ஆபத்தான பொருட்களை கலந்து விற்பனை செய்வது ஒரு சட்டவிரோத செயலாகும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான சட்ட நடைமுறை காணப்படுகின்றது. இதன் படி கலப்படம் செய்பவர்களுக்கு உச்சபட்ட சிறை மற்றும் தண்டம் அறவிடும் சட்டம் நடை முறையில் உள்ளது. இருப்பினும் இந்த ஊழல் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.

அடையாளம் காணும் முறைகள்

உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதனை அடையாளம் காண பல வழி முறைகள் உள்ளன. வாங்கும் பொருட்களை பரிசோதித்து அதை தரமானவையா என பார்த்து நாம் வாங்க வேண்டும்.

உணவு பொருட்களில் காலாவதியாகும் திகிதி மற்றும் தர சான்றிதழ்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நாம் வாங்குதல் வேண்டும். அதனை தவிர எமக்கான உணவுகளை நாமே விளைவித்து கொள்வது மேலும் நன்மை தருவதாக அமையும்.

முடிவுரை

எமது உணவுகளில் உணவு கலப்படமானது நீண்ட காலங்களாகவே இடம்பெற்று வருகின்றது. இது அண்மைக்காலங்களில் மேலும் அதிகரித்து வருகின்றது. உயிரை குடிக்க கூடிய பாதகமான இரசாயனங்களை கூட மனச்சாட்சியின்றி உணவு பொருட்களில் கலந்து வியாபரம் செய்யும் நபர்கள் எமது சமூகத்தில் காணப்படுகின்றனர்.

எனவே நாம் விழிப்பாக இந்த உணவு பொருட்களை வாங்கும் போது இருக்க வேண்டியது அவசியமாகும். அதனை மீறி கலப்படம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவும் வேண்டும்.

You May Also Like:
துரித உணவு துரித முடிவு கட்டுரை
ஆரோக்கியம் பற்றிய கட்டுரை