துரித உணவு துரித முடிவு கட்டுரை

Thuritha Unavu Thuritha Mudivu Katturai

இந்த பதிவில் துரித உணவு துரித முடிவு கட்டுரை பதிவை காணலாம்.

நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டார்கள். அதனால் அவர்களால் நோய்நொடிகள் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

“உணவே மருந்து” இதனால் நமது உணவு முறைகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

  • துரித உணவு துரித முடிவு
  • Thuritha Unavu Thuritha Mudivu Katturai
மருத்துவப் பணி கட்டுரை

துரித உணவு துரித முடிவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. துரித உணவுகள்
  3. துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்
  4. ஆரோக்கியமான உணவுகள்
  5. முடிவுரை

முன்னுரை

இன்றைய நவநாகரீக உலகத்தில் துரித உணவுகள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கின்றன. மக்களால் அதிகம் விரும்பப்பட்டும் வருகின்றன. குழந்தைகளின் உணவில் பிரதான இடத்தை இத்துரித உணவுகள் பெறுகின்றன.

துரித உணவுகள் எனப்படுபவை புரதம், விற்றமின், கனிமச்சத்துக்கள் அளவு குறைவாக உள்ள அல்லது அறவே இல்லாத உணவு பொருட்கள் துரித உணவுகள் எனப்படுகின்றன.

இவை வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் உடலை பாதிக்கும் சுவையூட்டிகள் நிறமூட்டிகளை உள்ளடக்கிய உணவாக இது காணப்படுகின்றன.

இவ்வுணவை உண்பதால் மனிதனுக்கு கேடு என்பதை அறிந்தும் அறியாமலும் அன்றாடம் ஏராளமான துரித உணவுகளை நாமும் உண்ண தான் செய்கிறோம்.

இக்கட்டுரையில் துரித உணவுகள், துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், ஆரோக்கியமான உணவுகள் ஆகிய விடயங்களை நோக்கலாம்.

துரித உணவுகள்

துரித உணவுகள் நாவை கவரும் அதிக சுவையுடையவையாக இருக்கும். குறுகிய நேரத்தில் தயாரிக்கப்பட்டு விரைவாக வாங்கி உண்ண கூடியவகையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

உணவகங்களில் அதிகம் சந்தைப்படுத்தப்படுவதும் உயர்வான விலையும் அதிகம் மக்களால் விரும்பி உண்ணப்படுவதனால் துரித உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் பிரபல்யமான வர்த்தக நாமங்களாக சந்தையில் காணப்படுகின்றன.

துரித உணவுகளுக்கு உதாரணமாக “Fish and Chips, Sandawiches, Hamburgers, Fried Chicken, French Fries, Onion Rings, Pizza, Hot dogs, Tacos” இது போன்ற உணவுகளை துரித உணவுகள் என்று கூற முடியும்.

இவை அதிகம் மேற்கத்தைய நாடுகளில் இருந்து தோன்றி எமது நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டவையாகும். இவ் உணவுகள் நமது தென்னாசிய பிராந்தியத்தில் அதிக கிராக்கி உடையவையாக காணப்படுகிறது.

துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்

துரித உணவுகள் நாவுக்கு சுவையாகவும் இலகுவாக வீடுகளுக்கே தேடி கொண்டுவந்து தரப்படுகின்றன. தொலைபேசி அழைப்புக்கள் அல்லது அலைபேசி செயலிகள் மூலம் வீட்டில் இருந்தே துரித உணவுகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு வளர்ந்துவிட்டது.

சிறப்பாக நாம் நோய்களை இலகுவாக வீட்டுக்கு அழைக்கிறோம் என்பதே உண்மையாகும். துரித உணவுகள் அதிகம் உடல்நல குறைவுகளை ஏற்படுத்த கூடியவையாகும்.

துரித உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக உப்பு, அதிக சீனி மற்றும் உடலுக்கு தகாத வாசனையூட்டிகள், சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பாவிக்கப்படுவதனாலும் ஊட்டசத்துக்கள் குறைவாக காணப்படுவதனாலும் இவற்றை வாங்கி உண்பவர்கள் அதிகம் நோயாளிகளாக மாறுகின்றனர்.

இவ்உணவுகளால் உடல் பருமன் அதிகரித்தல், கொலஸ்ரோல் எனப்படும் குருதி அமுக்க நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு மனிதன் துரிதமாக உயிரிழக்க இத்துரித உணவுகள் காரணமாக அமைகின்றன.

இவ்வுணவுகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதனால் இவ்வுணவுகளே பிரதான உணவாக வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட துரித உணவுகள் வழிவகுக்கின்றன.

ஆரோக்கியமான உணவுகள்

இவ்வகையான துரித உணவுகளை உண்கின்ற பழக்கத்தை தவிர்த்து உடலுக்கு நன்மை தர கூடிய நிறை உணவுகளான பால், முட்டை, இறைச்சி, மீன், காய்கறிகள், தானியங்கள், பழங்கள் இவை அனைத்தும் உள்ளடங்கிய சமைத்த உணவுகளை உண்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாகும்.

இயற்கையான உணவு முறைகள், முறையான உடற்பயிற்சி இவை போன்ற நடவடிக்கைகள் நமது ஆரோக்கியத்துக்கு சிறந்தவையாக காணப்படும்.

நமது குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை சொல்லி கொடுப்பது மிக அவசியமாகும்.

முடிவுரை

நமது முன்னோர்கள் நமக்கென்று ஒரு சிறந்த உணவு பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லி விட்டுசென்றிருக்கின்றனர்.

ஆனால் இன்று நாமோ வெளிநாட்டு கலாச்சார மோகத்துக்கு அடிமையாகி நமது கலாச்சாரங்களை மறந்து துரித உணவு கலாச்சாரத்திற்கு அடிமையாவதால் நோயாளிகளாக மாறுவதுடன் எமது சமுதாயத்தையும் சீரழிக்கின்றோம்.

இவற்றில் இருந்து விடுபட்டு நல்ல உணவுகளை உண்போம் நமது ஆரோக்கியம் காப்போம்.

You May Also Like:

வாய்மையே வெல்லும் கட்டுரை

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை