விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

Vinveli Yum Kalpana Chawla Vum Katturai In Tamil

இந்த பதிவில் விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை பதிவை காணலாம்.

இன்றைய உலகில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. விண்வெளி துறையில் பல சாதனைகளை செய்த கல்பனா சாவ்லா பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்.

விண்வெளி துறை சாதனையாளர்கள் பட்டியலில் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லாவிற்கு தனி இடம் உண்டு.

  • Vinveli Yum Kalpana Chawla Vum Katturai In Tamil
Tamil Kamarajar Katturai – காமராஜர் கட்டுரை

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்க்கையும்
  3. விண்வெளியில் தடம் பதித்தல்
  4. சாதனைபெண்களின் முன்னுதாரணம்
  5. முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய ஆக சிறந்த அறிவியல் சாதனை என்றால் அது விண்வெளி பயணங்களாக தான் இருக்க முடியும். அந்த துறையில் இந்தியாவின் முதல் விண்வெளி மங்கை என்று பெயர் பெற்றவர் “கல்பனா சாவ்லா” ஆவார்.

பல பெண்களுக்கு முன்மாதிரயாக இவர் திகழ்கிறார். ஒரு சாதராண சமூகத்தில் பிறந்து உலகபுகழ் பெற்ற நாசாவின் விண்வெளித்துறை வரை சென்று விண்வெளிக்கு சென்று சாதனை படைத்தவராவார்.

இவரது வாழ்க்கை முன்னேற துடிக்கும் பல பேருக்கு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.

இக்கட்டுரையில் அவர்களது பிறப்பு, வாழ்க்கைமுறை, அவரது சாதனை பயணம், தொடர்பாக நோக்குகிறது.

பிறப்பும் வாழ்க்கையும்

கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார்.

இவருக்கு சுனிதா தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தார்கள்.

இவர் தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள ஆரம்ப பள்ளியில் துவங்கினார்.1982 இல் சண்டிகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் விமானஊர்தியியல் துறையில் கல்வி பயின்று இளங்கலை பட்டமும் பெற்றார்.

பின்னர் 1984 இல் அமெரிக்கா சென்று ரெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

1986 இல் பௌல்தேரில் உள்ள கொலரோடா பல்கலைகழகத்தில் இரண்டாவது முதுகலை பட்டமும் 1988 இல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விண்வெளியில் தடம் பதித்தல்

இவ்வாறு விண்வெளிதுறையில் கடும் ஆர்வமும் தான் ஒரு விண்வெளி வீராங்கனையாக வரவேண்டும் என்ற கனவும் அவரை வழிநடத்தி சென்றது.

1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.

1995 இல் அமெரிக்க விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்த அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொலம்பிய விண்கலமான SDS 87 இல் பயணம் செய்ய இவர் தெரிவு செய்யப்பட்டார்.

1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த இவர் அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்த பயணத்துக்காக தயார் ஆனார். 2000 மற்றும் 2002 இல் மேற்கொள்ளப்பட்ட பயணம் பல இடையூறுகளால் பின் தள்ளப்பட்டது.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.

இதனால் இவர்கள் ஏழுபேரும் பலியாகியமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவ்வாறு பல சாதனைகளை நிகழ்த்தி வாழ்ந்து காட்டிய கல்பனா சாவ்லாவின் வரலாறு பெருமை மிக்கதாகும்.

சாதனை பெண்களின் முன்னுதாரணம்

உலகமெங்கும் இன்றைக்கு சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகும் ஒரு சாதாரண பள்ளியில் படித்து பலர் வியக்கும் படி தனது கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா.

பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய இவர். இந்தியாவிற்கும் புகழ்சேர்த்தவர் ஆவார். இளம் பெண்களை ஊக்குவிக்க கர்நாடகா அரசாங்கம் கல்பனா சாவ்லா விருது எனும் விருதை வழங்கி பல பெண்களை ஊக்கபடுத்தி அவரையும் கௌரவிக்கின்றது.

முடிவுரை

இந்தியாவில் வாழும் பலகோடி பெண்களின் உந்து சக்தியாக இவர் திகழ்கிறார். இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களுக்கு மற்றும் அரசாங்க பொது நிறுவனங்களுக்கு இவரின் நினைவை பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.

You May Also Like:

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை