முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

pasumpon muthuramalinga thevar ponmoligal

இந்த பதிவில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள் நம் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை கொடுப்பவையாக இருக்கும்.

  • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
  • முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
  • pasumpon muthuramalinga thevar ponmoligal

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

இனப்பற்று என்பது
எல்லோருக்கும் தேவை.
அதை நல்ல காரியங்களுக்கு
பயன்படுத்துவது உத்தமம்
கெட்ட காரியங்களுக்கு
பயன்படுத்துபவன் மகாபாவி.!

தவறுகள் நடப்பது
கெட்டவர்களால்இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.

மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால் மட்டம்.

பெண்களை தாயாகவும்
தங்கையாகவும்
நினைப்பவர்களை தான்
மனிதன் எனலாம்.

தனியாக இருக்கும் போது
சிந்தனை செய்வதில் கவனம்
செலுத்துங்கள்.. கூட்டத்தோடு
இருக்கும் போது வார்த்தைகளில்
கவனமாக இருங்கள்.

ஞானிகள் அடக்கமாக
இருப்பார்கள் அவர்களின்
நிலையை சோம்பேறிகள்
நிலை என்று எண்ணுவது
தவறு.

மனிதன் ஆபாசங்களில்
எளிதில் சிக்கி விடுகிறான்.
அது அவனை குலைத்து
குன்றி விடுகிறது.

வீரம் அற்ற அகிம்சை
கபடம் எனும் மோசமான
நிலையை அடைந்து விடும்.

ஒழுக்கத்திற்கு என வைத்த
கட்டுப்பாடுகள் வயிற்றுப்
பிழைப்பிற்கென கைவிடப்பட்டன.
அதிக பணம் திரட்டும் ஆசையில்
ஒழுக்கம் அழிந்து விட்டது.

கடவுளை தொழ வேண்டிய
விதம்.. தொழ நினைப்பவனுடைய
பக்குவத்திற்கு ஏற்றவாறு
பல வகைப்படும்.

நாகரிகத்தின் பெயரால்
ஒழுக்கத்தை கை விட்டதனால்
நாடெங்கும் கேடுகள்
பரவி விட்டன.

எல்லோரிடத்திலும்
தெய்வம் உண்டு.. ஆனால்
எல்லோரும் தெய்வத்துடன்
இல்லை.

நூறு ஏழைகள் ஒரு
பணக்காரனை உண்டாக்குகிறார்கள்.
ஒரு பணக்காரன் ஆயிரம்
ஏழைகளை உண்டாக்குகிறான்.

சாவுக்கு பயம் இல்லாதவனே
சாதிக்கும் சக்தியினை
பெறுகிறான்.

மனிதனை உயர்ந்தவர்
தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின்
பெயரால் மட்டுமே மரியாதை
கொடுக்க வேண்டுமே தவிர
சாதியை வைத்து அல்ல.

வீரம் என்ற குணம் தான்
எதிரியும் பாராட்டும்
நிலையை ஏற்படுத்தும்.
கோழைத்தனம்
அவ்வாறு செய்யாது.

அரசியல்

பதவி ஆசை பிடித்தவனுக்கு
அவனுடைய கை.. கால்கள்..
கூட எதிரியாய் மாறும்.

இன்றைய சட்டத்தால்
நீதி கொலை
செய்யப்படுகிறது.

பெண் ஆசை மற்றும்
மண் ஆசை இவ்விரு
ஆசைகளையும்
அறுத்துக் கொள்ளாதவன்
சரியான தொண்டனோ..
சரியான தலைவனோ
கிடையாது.

அரசியல் என்பது மக்கள்
மீது அதிகாரத்தை
செலுத்துவது இல்லை..
அரசியல் என்பது மக்களுக்காக
சேவை செய்வது.

நன்மைக்கு புறம்பானவற்றை
ஒழிப்பதில் அரசு ஆண்மையை
பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள்
எல்லோரும் அரசியல்
தலைவர்களாக இல்லை. அரசியல்
வியாபாரிகள் ஆக மாறி விட்டார்கள்.

நீதியை நிலை நிறுத்துவதற்கான
சட்டங்கள் ஆதிகாலத்தில்
உற்பத்தி செய்யப்பட்டன.
இன்றைய நீதியானது சட்டத்திற்காக
கை நழுவ விடப்படுகிறது.

அடுத்த தலைமுறையை
சிந்திப்பவன் தேசியவாதி
அடுத்த தேர்தலை சிந்திப்பவன்
அரசியல்வாதி.

பணத்திற்கு மயங்கி வியாபார
அரசியலுக்கு வழி
செய்து விடக்கூடாது.

வியாபாரிகள் ஆக்கிரமிக்க
முயலும் அரசியலுக்கு
இடங்கொடுத்து விடாமல்..
விவசாய அரசியலை அமைத்து
நாட்டின் பண்பாட்டையும்
ஏழைகளின் நல்வாழ்வையும்
காக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்து படியுங்கள்..

நற்சிந்தனை துளிகள்

வெற்றியாளர்களின் பொன்மொழிகள்