வெற்றியாளர்களின் பொன்மொழிகள்

Vetri Ponmozhigal in Tamil

இந்த தொகுப்பு “வெற்றியாளர்களின் பொன்மொழிகள் (Vetri Ponmozhigal in Tamil)” உள்ளடக்கியுள்ளது.

  • வெற்றியாளர்களின் பொன்மொழிகள்
  • வெற்றி பொன்மொழிகள்
  • Vetri Ponmozhigal in Tamil
  • Vetri Ponmozhigal

வெற்றியாளர்களின் பொன்மொழிகள் – Vetri Ponmozhigal

முன்னோக்கி செல்வதற்கு
பல வழிகள் இருக்கின்றன..
ஆனால் இங்கேயே நிற்பதற்கு
ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது..!

சிறந்த யோசனைகள்
வேடிக்கையான சிந்தனைகளில்
இருந்தே வரும்.. முடிந்த வரை
வேடிக்கையாகவே சிந்தியுங்கள்..!

படைப்பாற்றல் என்பது
தவறுகள் செய்ய உங்களை
அனுமதித்துக் கொள்ளுவது..
படைப்பு என்பது எந்த தவறை
வைத்துக் கொள்ளுவது என்பதை
தெரிந்து கொள்ளுவது..!

சிரமங்களை எதிர்கொள்ள
தயாராக இருந்தால் யாராலும்
எதுவும் கற்க முடியும்..!

தினசரி பயிற்சி.. அனைத்து
ஆரோக்கியமற்ற
மனப்பான்மைகளில் இருந்தும்
உங்கள் மனதை விடுவிக்கும்..!

செய்த கடின உழைப்பு
சோர்வடையச் செய்த பிறகும்..
கடின உழைப்பை தொடர்வதன்
பெயர் தான் “விடாமுயற்சி”..!

ஒரு படைப்பாற்றல் மிக்க
மனிதன் சாதிக்கும்
எண்ணத்தினால் மட்டுமே
தூண்டப்படுகிறான்.. பிறரை
வெல்லும் ஆசையினால் அல்ல..!

வெற்றியாளர்கள் அசாதாரணமாக
மாற முயற்சிப்பதில்லை..
மாறாக.. அசாதாரணமான
காரியங்களை செய்ய அவர்கள்
முயற்சிக்கிறார்கள்..!

முதலில் நாம் பழக்கங்களை
உருவாக்கிறோம்.. பின்னர்
அவை தான் நம்மை
உருவாக்கின்றன..!

எப்போதும் மிகச் சிறப்பான
முயற்சியையும்.. உழைப்பையும்
கொடுங்கள் இன்று எதை நீங்கள்
விதைக்கிறீர்களோ.. அதையே
நாளை அறுவடை செய்ய முடியும்..!

வலிமை வெற்றியால் வருவதல்ல
வெற்றிக்கான போராட்டத்தால்
வருவது..!

முடிவை மனதில் கொண்டு
ஒவ்வொரு நாளும் அதை
நோக்கி நகர்வதை
உறுதி செய்யுங்கள்..!

ஒரு முயற்சி உங்களை
பதட்டம் அடைய செய்தால்..
பெரும்பாலும் நீங்கள் அதை
சரியாகத் தான் செய்கிறீர்கள்..!

பிறர் முடியாது என்பதை
ஒரே ஒரு முறை முடித்துவிடுங்கள்..
அவர்களின் எல்லைகள் பிறகு
எப்போதும் உங்களை
கட்டுப்படுத்தாது..!

உன் எண்ணங்களை
மாறுவதன் மூலம்..
நீ உன் உலகத்தையே
மாற்றலாம்..!

எப்போதாவது முயற்சித்து
தோல்வி அடைந்து இருக்கிறீர்களா..?
பரவாயில்லை.. மறுபடியும்
முயற்சியுங்கள்.. மறுபடியும்
தோல்வி அடையுங்கள்..
இன்னும் சிறப்பாக..!

இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர்
யாருமில்லை.. அனைவரும்
சமமும் இல்லை.. ஒவ்வொருவரும்
தனித்தன்மை உடைய ஒப்பீடு
இல்லாதவர்கள்..
நீங்கள் நீங்கள் தான்..
நான் நான் தான்..!

எவர் ஒருவர் குறிக்கோளுடன்
போராடுகிறாரோ.. அவரே
வெற்றி பெறுகிறார்.. ஏனெனில்
தாம் எங்கு செல்கிறோம் என்று
அவருக்கு தெரியும்..!

தோல்வி அடைந்தாலும்
தொடர் முயற்சியை
மேற்கொள்பவர்களுக்கே
வெற்றி சாத்தியம்..!

உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும்
ஒரே இடம்.. உங்கள் எண்ணங்களில்
மட்டுமே..!

மொத்த உலகமும் முடியாது என்று
சொல்லும் போது..
“ஒரு வேளை முடியலாம்”
என்று
மெல்லியதாக உங்களுக்கு கேட்கும்
குரலே நம்பிக்கை..!

தவறு என்று ஒன்று இல்லை..
பாடங்கள் மட்டுமே.. தவறு செய்து
திருத்திக் கொள்ளும்
செயலே வளர்ச்சி..!

புதிய குறிக்கோளை அமைத்து
கொள்ளவும்.. புதிய கனவுகளை
காணவும் எப்போதும் வயது
ஒரு தடையில்லை..!

மேலும் படியுங்கள்…