எனது வாக்கு எனது உரிமை கட்டுரை

என் வாக்கு என் உரிமை கட்டுரை

இந்த பதிவில் “எனது வாக்கு எனது உரிமை கட்டுரை” பதிவை காணலாம்.

ஒவ்வொரு வாக்கும் மிக பெறுமதியானவை எனவே அனைவரும் சிந்தித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

எனது வாக்கு எனது உரிமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாக்குரிமை
  3. வாக்கின் அவசியம்
  4. ஜனநாயக கடமை
  5. நாட்டின் வளர்ச்சி
  6. முடிவுரை

முன்னுரை

ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்குரிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த வாக்கின் மூலமாக தான் அந்த நாட்டினுடைய தலைவிதியானது நிர்ணயிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரஜைகளும் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை வாக்களிப்பின் மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு தனி மனிதர்களின் தனிப்பட்ட கருத்துக்களின் வெளிப்பாடாக இருப்பதனால் தான் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகள் தேர்தல்கள் மூலமாக மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடாத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கட்டுரையில் வாக்குரிமையின் அவசியம் தொடர்பாக காண்போம்.

வாக்குரிமை

பிரித்தானிய ஏகாதிபத்யம் ஆட்சி நடாத்தி கொண்டிருந்த காலத்தில் மன்னர் ஆட்சி முறைமையானது ஒழிக்கப்பட்டு தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிக்கும் நடைமுறையானது இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் ஆண்கள் மாத்திரமே வாக்களிக்கும் நடைமுறையானது காணப்பட்டது.

இதனை மாற்றி புதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை வரைந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் ஆகிய இருபாலரும் வாக்களிக்கலாம் என்ற சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். இதுவே இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

வாக்கின் அவசியம்

ஒரு நாட்டில் மக்களின் வாக்குகள் மூலமே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெறுகின்றவர்களே நாட்டின் தலைவர்களாக முடியும்.

எனவே ஒவ்வொரு பிரஜைகளுடைய வாக்குகளும் மிக பெறுமதியானவையாகும். இதனால் மக்கள் சிந்தித்து தமது வாக்குகளை விரயம் செய்யாது சரியான தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஒரு வாக்கு அளிக்கபடாமையினால் ஒரு சிறந்த தலைவர் வெற்றி பெறாமல் போகலாம் அதே சமயம் சில தவறான வாக்குகளால் ஒரு மேசாமான தலைவர் வெற்றி பெறலாம் ஆகவே ஒவ்வொரு வாக்கும் மிக பெறுமதியனவாகும்

ஜனநாயக கடமை

ஒரு நாட்டிலே வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைகளும் தமது நாட்டின் நலன் கருதி பொறுப்புடனும் சமூக அக்கறையுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

அதற்கு முதலில் தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து தமது மிக முக்கியமான அரசியல் கடமையினை நிறைவேற்ற வேண்டும்.

இதனை பணத்துக்காகவோ சுயலாபத்துக்காகவோ வீணடிப்பது தேசத்துரோக செயலாகும். இந்த கடமையை நிறைவேற்றாதவர்கள் அந்த நாட்டின் பிரஜைகளாகவே கருதப்படமாட்டார்கள்.

நாட்டின் வளர்ச்சி

எந்த ஒரு நாடு தமக்கு கிடைக்கின்ற வாக்குரிமையை பயன்படுத்தி அதன் மூலமாக ஆளுமை மிக்க எதிர்காலத்தை சரியாக கணித்து ஆட்சி செய்கின்ற தலைவர்களை தேர்வு செய்கின்றதோ அந்த நாட்டின் வளர்ச்சியானது மிக சிறப்பாக அமையும்.

உதாரணமாக உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தேர்தல்களை ஊழல் இன்றி சிறப்பாக எதிர்கொள்கின்றன.

மாறாக எமது நாடுகள் தேர்தல்களின் பாரிய மோசடிகள் ஊழல்களை மேற்கொள்வதால் தான் நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் தோன்ற காரணமாக அமைகின்றது.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் இளம் சமுதாயத்தினர் அதிகம் அரசியல் நாட்டம் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இதன் காரணமாக தான் பல தவறான அரசியல் சக்திகள் மக்களை ஏமாற்றி தமது நலன்களை அடைந்து கொண்டு நாட்டையும் மக்களையும் படுபாதகமான இலக்கை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.

எனவே இளைஞர்கள் ஒன்றுபட்டு அரசியல் மற்றும் தேர்தல்களின் அதிக ஆர்வத்துடன் செயலாற்றுவதன் மூலமாக எமது நாட்டை வளர்ச்சியடைய செய்ய முடியும்.

You May Also Like :

தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை
மத நல்லிணக்கம் கட்டுரை