மத நல்லிணக்கம் கட்டுரை

Matha Nallinakkam Katturai In Tamil

இந்த பதிவில் “மத நல்லிணக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

மதங்கள் அனைத்தும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின. அனைத்து மதங்களும் ஒற்றுமையையும் அன்பையும் போதிக்கின்றன.

சில சுயநலவாதிகள் தங்கள் நலன்களுக்காக மதத்தினை ஆயுதமாக்கி வன்மத்தினை மக்கள் மத்தியில் விதைக்கின்றனர்.

  • மத நல்லிணக்கம்
  • Matha Nallinakkam Katturai In Tamil
அறம் செய்ய விரும்பு கட்டுரை

மத நல்லிணக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மதங்கள் ஏன் தோன்றின
  3. மனிதத்தின் பின்பே மதங்கள்
  4. மதங்கள் கூறும் விழுமியங்கள்
  5. மதவாதமுடையோரால் உருவாகும் அனர்த்தங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகம் காடுகளில் தோன்றிய காலத்தில் மனிதர்கள் இயல்பாக வாழ்ந்து
வந்தார்கள். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

நாளடைவில் மனிதன் நாகரீகமடைய ஆரம்பித்தான். தனக்கென மொழிகளையும் பாசைகளையும் கற்று கொண்ட மனிதன் அதிகாரங்களுக்காக போட்டியிட ஆரம்பித்தான்.

ஆசை எனும் மோகத்தால் தான் அடைய விரும்பியவற்றை அடைந்து கொள்ள சக மனிதர்களை கொல்லவும் துணிந்தான். மனிதநேயத்தை இழந்து மிருகமாக மாற ஆரம்பித்தான்.

உலகத்தில் மக்கள் நெறி பிறழ்வாக வாழும் காலத்தில் தான் மதங்கள் தோன்றின. மக்களை வழிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் யாவற்றிற்கும் மேலான சக்தியாக கடவுளை உருவகித்து மனிதனை கட்டுக்குள் வைப்பதே மதங்களின் நோக்கமாகவிருந்தது.

இக்கட்டுரையில் மதங்கள் தோன்றியதன் காரணம், மதங்கள் கூறும் விழுமியங்கள், மதநல்லிணக்கமும் அது இல்லாமல் போனால் உருவாகும் அனர்த்தங்கள் தொடர்பாக நோக்கலாம்.

மதங்கள் ஏன் தோன்றின

மனிதனை மனிதனாக்கி நல்வழிப்படுத்துதல் எனும் உயர்ந்த நோக்கில் உருவானவையே மதங்கள் ஆகும்.

அவனது தீய எண்ணங்களை வேரறுக்க கடவுள் எனும் பேராற்றல் உண்டென்பதை மனிதகுலம் நம்புகின்றது.

மனிதன் வாழும் இந்த உலகம் பஞ்சபூதங்கள் இவை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என மனிதர்கள் நம்புகின்றார்கள்.

உலகத்தில் பலகோடி மக்கள் வாழ்கின்றனர். மனிதர்கள் தனிப்பட்ட குணாதிசயங்கள், வெவ்வேறான எண்ணப்பாங்குகள் விருப்பு வெறுப்புக்களை உடையவர்கள் இதில் நல்லவர்களும் தீயவர்களும் அடக்கம்.

இங்கு மனிதர்கள் மனிதர்களை மதித்து நடவாது போகின்ற பிறழ்வு நிலையில் தான் மதங்கள் இறைவன் எனும் ஆற்றல் கொண்டு மனிதர்களை வழிப்படுத்த துவங்கின எனலாம்.

இங்கே இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பௌத்த மதம் என பலவகையான மதங்கள் இருக்கின்றன.

மனிதத்தின் பின்பே மதங்கள்

மதங்கள் பல தோன்றி மனிதர்களை வேறுபடுத்துவது இங்கு நோக்கமல்ல.

ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறான மதங்களை பின்பற்றுகிறார்கள். வேறுபட்ட கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டு காணப்படுகிறார்கள்.

இருப்பினும் அவர்கள் சக மனிதர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனையே கணியன் பூங்குன்றனார் “யாதுமூரே யாவரும் கேளீர்” என்று பாடுகின்றார்.

இங்கே மனிதர்களுக்கிடையே இனம், மதம், மொழி, சாதி என பல வேறுபாடுகளை நாம் ஒழத்துவிட வேண்டும். மனிதநேயம் என்ற ஒன்றினால் பிறமனிதர்களோடு அன்பு பாரட்டுதல் தான் சிறப்பானது.

மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி ஒரு சிலர் அதில் குளிர்காய்வார்கள்.

பிறப்பினால் இங்கே அனைவரும் சமம் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு பிரிவினைகளை விடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை தான் மதங்களும் கற்பிக்கின்றன.

மதங்கள் கூறும் விழுமியங்கள்

அனைத்து மதங்களும் இங்கே அன்பை தான் போதிக்கின்றன.

அன்பே சிவம்” என்கிறது இந்து சமயம். பிற மனிதர்கள் மீதும் உயிர்கள் மீதும் கருணைகொள்ள வேண்டும் என்கிறது. ஏழைகளுக்கும் இல்லாதவருக்கும் உணவழித்தல் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று இந்து மதம் போதிக்கின்றது.

உன்னை போல் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும் என்கிறார் “இயேசு கிறிஸ்து” கிறிஸ்தவ மதமும் பிறர் மீது கொள்ளும் உயர்ந்த கருணையே இறைவனுக்கு செய்யும் உயர்ந்த சேவை என்று போதிக்கிறது. அன்பு, கருணை, சகிப்பு, ஒற்றுமை போன்ற விடயங்களை கிறிஸ்தவ மதம் கற்பிக்கிறது.

அது போல பௌத்த மதத்தின் கௌதம புத்தர் அன்பையும் அமைதியையும் கொண்டு வாழ்பவனே பௌத்தன் என்கிறார்.

அது போல இஸ்லாமின் புனித நபி அவர்கள் மனிதம் காத்து வாழ்வதுவே இஸ்லாமியர்களின் உயர்ந்த அறம் என்கிறார்.

இவ்வாறு உலகின் அனைத்து மதங்களும் நல்வழியை தான் போதிக்கின்றது.

ஆனால் அதனை புரிந்து கொள்ளாத சில மனிதமிருகங்கள் மதங்களின் பெயரில் பிரிவினைகளை உண்டாக்கி மோதல்களையும் பிரச்சனைகளையும் உலகில் தோற்றுவிப்பது கண்ணடனத்துக்குரியது.

மதவாதம் உடையோரால் நிகழும் அனர்த்தங்கள்

மதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில மனிதநேயமற்ற மனிதர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் அவர்களை நம்பியுள்ள மக்களையும் நாட்டையும் பிழவுபடுத்துகின்றனர்.

மதவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் தேடுவதும். தீவிரவாத அமைப்புக்களை உருவாக்குதல் போன்ற இழி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் உலகத்தின் அமைதியை இன்று கெடுத்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கிடையே மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை இருக்குமானால் இவ்வுலகம் அமைதி பெறும்.

முடிவுரை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பது நம் முன்னோரின் பொன்மொழி. நாம் மனிதர்கள் என்ற உயர்திணைக்குரியவர்கள்.

சாதாரண ஜந்தறிவு விலங்குகள் கூட ஒற்றுமையாக தமது கூட்டங்களோடு வாழ்வதை நாம் அவதானித்திருப்போம்.

ஆனால் இந்த மனிதர்கள் மாத்திரம் ஏன் இவ்வாறு முட்டாள்கள் போல சக மனிதர்களையே கொன்றும் கொடுமைப்படுத்தியும் வாழ்கிறார்கள்.

இது மாறவேண்டும் மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை மனிதம் என்ற ஒன்றை தான் போதிக்கின்றன. ஆகவே மனிதம் பேணினால் இவ்வுலகம் அன்பில் திழைக்கும் என்பது திண்ணம்.

You May Also Like:

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை

மனிதநேயம் பற்றிய கட்டுரை