இயற்கை பேரிடர் கட்டுரை

Iyarkai Peridar Katturai In Tamil

இந்த பதிவில் “இயற்கை பேரிடர் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கை எவ்வளவோ நலன்களை பூமிக்கு நல்கியிருந்தாலும் அதன் கோரமான முகம் ஒன்று உள்ளது. அதனையே இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உணர்த்தி செல்கின்றது.

இந்த இயற்கை பேரிடர்களில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  • இயற்கை பேரிடர்
  • Iyarkai Peridar Katturai In Tamil
தூய்மைக்கேடு கட்டுரை

இயற்கை பேரிடர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கை பேரிடர்கள் எனப்படுபவை
  3. உலகம் கண்ட பேரிடர்கள்
  4. இயற்கை இடர்களில் இருந்து பாதுகாக்கும் வழிகள்
  5. முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய இயல்பு வாழ்க்கையில் திடிரென இயற்கையால் உண்டாகின்ற குழப்பமான இடர்நிலைகளை அனர்த்தம் எனலாம்.

இயற்கை எவ்வளவோ நலன்களை பூமிக்கு நல்கியிருந்தாலும் அதன் கோரமான முகம் ஒன்று உள்ளது. அதனையே இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உணர்த்தி செல்கின்றது.

இந்த சந்தர்ப்பங்களில் தான் மனிதன் இயற்கையின் முன் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொள்கின்றான்.

இயற்கை அனர்த்தங்கள் மனிதனுடைய உடமைகள், வளங்களை அழித்து உயிர்களையும் காவுகொள்ள வல்லது.

இக்கட்டுரையில் இயற்கை பேரிடர்கள் எவை, உலகம் சந்தித்த இயற்கை அனர்த்தங்கள், அதனால் உண்டாகும் அழிவுகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

இயற்கை பேரிடர்கள் எனப்படுபவை

இயற்கை அனரத்தங்கள் என்பவை மனித நடவடிக்கை அன்றி இயற்கையாகவே உருவாகும்.

உதாரணமாக “சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, நிலநடுக்கம், காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு” போன்றனவற்றை குறிப்பிட்டலாம்.

இவை யாரும் எதிர்பாராத நேரத்தில் உருவாகி சர்வநாசத்தை உண்டு பண்ணகூடியனவாகும்.

இன்று வரைக்கும் உலகில் இயற்கை அனர்த்தங்களால் இறந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

இவை தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதைதவிர வேறு வழிகள் இல்லை. இங்கே நிகழும் இயற்கை விதிகளுக்கு மனிதர்கள் கட்டுப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகும்.

உலகம் கண்ட பேரிடர்கள்

இதுவரைக்கும் உலகில் தோன்றி அதிகளவில் சேதங்களை உண்டாக்கி வரலாற்றில் பதியப்பட்ட அனர்த்தங்கள் பற்றி இங்கே காணலாம்.

ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் டாலர்கள் அழிவை ஏற்படுத்தும் நிலச்சரிவுகள் ஐக்கிய அமெரிக்காவில் நிகழ்கின்றன. கடுமையான மழைவீழ்ச்சி, நிலநடுக்கம் போன்றவற்றால் இவ்வனர்த்தம் நிகழ்கிறது.

உலகத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் ஒரு செக்கனுக்கு 100 மின்னல் தாக்கங்கள் நிகழ்கின்றன. மின்னல் தாக்கங்களால் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர்.

1839 இல் இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் நிகழ்ந்த புயலால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். பலர் உடமைகளை இழந்து சுத்தமான குடிநீர் இன்றி போராடினர்.

மேலும் 1737 இல் கல்கத்தாவில் நிகழ்ந்த பெரும் புயல் அனர்த்தம் 300000 மக்களை பலிகொண்டது.

2010 இல் வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள “கெய்ட்டி” நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2004 இல் இந்துசமுத்திர பிராந்தியத்தை தாக்கிய சுனாமி அனர்த்தமானது 227,898 மக்களை கொன்று பலரில் வாழ்விடங்களை அழித்து சென்றது.

2019 இல் நிகழ்ந்த அமேசன் காட்டுத்தீயினால் 90,600 கெக்டயர் காடு தீக்கிரையானது பல உயிரினங்கள் அழிந்து போயின.

இவ்வாறு ஆயிரகணக்கான இயற்கை பேரிடர்களை உலகம் சந்தித்த வண்ணமே இருக்கின்றது.

இயற்கை இடர்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

இயற்கை பேரிடர்கள் மனித வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றி விடுவதனால் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதனால் தான் இவற்றில் இருந்து மீண்டு மனிதனால் வாழமுடியும்.

அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள வானிலை, காலநிலை அவதானிப்பு அனர்த்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை வேகமாக கிடைக்க செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனர்தங்கள் தொடர்பான தெளிவான அறிவும் விரைவான முன்னாயத்த நடவடிக்கைகளும் தான் சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.

ஜப்பான் சுனாமி நிலநடுக்கங்களில் இருந்து பாதுகாக்க நெகிழும் தன்மையிலான கட்டடங்களை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு வளர்ந்த நாடுகள் அனர்த்த முகாமைத்துவத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு தம்மை பாதுகாத்து கொள்கின்றன. அவற்றை எமது நாடுகளும் பின்பற்றுதல் வேண்டும்.

முடிவுரை

“எத்தனை கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும் அத்தனை கண்டபின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்” என்பதனை போல எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர்கள் தோன்றினாலும் அவற்றோடு போராடி மீண்டும் மீண்டும் மனிதன் தன்னை தகவமைத்து கொண்டுதான் இருக்கிறான்.

இவற்றுக்கெல்லாம் அவனது அறிவும் தொழில்நுட்பமும் மனிதனின் ஒற்றுமையும்தான் கைகொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஆற்றல் மனிதனிடத்தே இயற்கையாகவே உண்டு. எனவே இயற்கை பேரிடர்களில் எம்மை முன்கூட்டியே பாதுகாத்து கொள்ள நாம் எப்போதும் தயாராக இருத்தல் நன்று.

You May Also Like:

தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை