தூய்மைக்கேடு கட்டுரை

Thooimaikedu Katturai In Tamil

இன்று உலகமக்களை பெரிதும் பாதிக்கும் பிரச்சனையாக இருக்கும் “தூய்மைக்கேடு கட்டுரை” பதிவை இதில் பார்க்கலாம்.

ஒரு நாடு எவ்வளவு அபிவிருத்தி அடைந்த நாடாகவும் அதீத செல்வவளம் உடைய நாடக இருந்தாலும் தூய்மையான சூழலை கொண்டிருக்கவில்லை என்றால் அங்கு மக்கள் வாழ விரும்புவதில்லை.

  • தூய்மைக்கேடு
  • Thooimaikedu Katturai In Tamil
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

தூய்மைக்கேடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஏன் தூய்மைக்கேடு உருவாகின்றது
  3. தூய்மையை பேணுதலும் நல வாழ்வும்
  4. தூய்மைக்கேட்டால் பாதிக்கப்படுகின்ற நாடுகள்
  5. மாசடைதலை தடுக்க எடுக்க கூடிய வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பிரச்சனையாக தூய்மைக்கேட்டினால் உருவாகின்ற சூழல் மாசடைதல் சார் பிரச்சனைகள் இருக்கின்றது.

ஏன் என்றால் இயற்கை முன்பை போல் அல்லாமல் இன்று வெகுவாக மாறியுள்ளது. இதற்கு காரணகர்த்தாவாக இருப்பவர்கள் மனிதர்களே ஆவர்.

சுயமாக சிந்திக்க கூடிய மிருகம் மனிதனே என்று அறிவியல் தெரிவிக்கின்றது ஆனால் மனிதன் தான் மிகமோசமாக சூழலை மாசுபடுத்தி அதன் நடுவே தனது வாழ்க்கையை நடாத்தி வருகின்றான்.

தன்வினை தன்னை சுடும்” என்பது போல மனிதன் ஆற்றுகின்ற தூய்மைக்கேடான காரியங்கள் அவனுக்கே எதிரியாக மாறி விட்டது.

இக்கட்டுரையில் தூய்மைக்கேடு எவ்வாறு உருவாகின்றது. அதனால் உருவாகும் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கட்டுக்குள் வைக்கலாம் என்பது பற்றி நோக்கப்படுகிறது.

ஏன் தூய்மைக்கேடு உருவாகின்றது

இங்கே நிகழும் அனைத்தும் ஏதாவதொன்றின் விளைவால் தான் நிகழ்கின்றன. நியூட்டனுடைய மூன்றாம் விதியை போல “எந்தவொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு“.

அதாவது மனிதன் சூழலை மாசுபடுத்துகையில் அது அவனுக்கு ஆரோக்கிய சீர்கேடாக மாறுகிறது. இயற்கையின் படைப்பு அபூர்வமானது. எல்லா வளங்களும் இங்கு உண்டு.

இயற்கையின் நியதியை மனிதன் அனுசரித்து மனிதன் முன்பொரு காலத்தில் வாழ்ந்தான். இயற்கையை பாதுகாத்தான் பூமியை சுத்தமாகவும் வைத்திருந்தான் ஆகவே அந்த வாழ்க்கை அழகாய் இருந்தது.

ஆனால் இன்று அவ்வாறில்லை. எங்கு பார்த்தாலும் அபிவிருத்தி எனும் பெயரில் மனிதன் மோகித்து போய் பணம் பார்ப்பதிலேயே குறியாக உள்ளான்.

இயற்கையும் சூழலும் மாசடைவதை பொறுத்து அவனுக்கு கவலையே இல்லை. இயற்கையை அழித்து விற்று விண்ணை தொடலாம் என முட்டாள் தனமாக செயற்பட்டு வருகின்றான்.

அழகாக சலசலத்து ஒடும் தூய்மையான ஆறு எவ்வளவு அழகானது எத்தனை பேரின் உணவாகவும் குடிநீராகவும் உள்ளது.

இதனை அண்டி தொழிற்சாலைகளை அமைத்து கழிவுகளை கொட்டி அசேதனங்களையும் அமிலங்களையும் சேர்த்து மாசுபடுத்தி பார்பதற்கே அருவருக்கும் வகையில் தூய்மைக்கேடாக மாற்றுவதே மனிதனின் ஆகப்பெரும் சாதனை.

எடுத்துக்காட்டாக இந்தியாவின் புனித நதிகளான “இந்து நதி, கங்கைநதி” இவை தூய்மைக்கேட்டின் ஆக சிறந்த உதாரணங்கள் ஆகும்.

தூய்மையை பேணுதலும் நலவாழ்வும்

இயற்கை சூழலாகட்டும் நாம் வாழும் சூழலாகட்டும் எப்போதும் தூய்மையாக இருக்குமே ஆனால் அங்கு வாழ கூடியவர்களும் நலமாக வாழ முடியும் என்பது நிதர்சனம்.

ஆதலால் தான் எப்பொழுதும் நாம் வாழும் பூமியையும் நமது சூழலையும் தூய்மையாக பேணவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதாவது மாற்றம் என்பது தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்பது போல ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விடங்களில் உள்ள தூய்மையே ஒட்டு மொத்த நாட்டினுடைய தூய்மையாக காணப்படும்.

தூய்மையான வாழ்விடங்கள் அங்கு வாழும் மனிதர்களுடைய நலவாழ்வையும் மனநலத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்த தூய்மை அடிப்படையாக உள்ளது.

உயர்வான வாழ்க்கை தரத்தை உடைய உலகின் தலைசிறந்த நாடுகள் தூய்மை நிறைவாக கொண்ட நாடுகளே ஆகும்.

தூய்மைக்கேகட்டால் பாதிக்கப்படும் நாடுகள்

ஒரு நாடு எவ்வளவு வளங்ளை கொண்டிருக்கட்டும். எவ்வளவு வளர்ச்சி கொண்ட நாடுகளாகட்டும். தூய்மை கேடுடைய நாடுகளாக இருப்பின் அங்கு மனிதர்கள் வாழ விரும்புவதில்லை.

2021 இல் வெளியிடப்பட்ட மாசடைதல் சுட்டெண்ணின் பிரகாரம் உலகில் முன்னணியில் “ஆப்கானிஸ்தான், மொங்கோலியா, மியன்மார், லெபெனான், கானா, நைஜீரியா” போன்ற நாடுகள் அதிகம் மாசடைந்த தூய்மை கேடான நாடுகளாக உள்ளன.

இதில் இந்தியாவுக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது. இவ்வாறு அதிகம் தூய்மைக்கேடான நாடுகளில் வாழும் மக்கள் அதிகம் சுகாதார சீர்கேடுகளால் பாதிக்கபடுவார்கள்.

இங்கு மக்களின் நலவாழ்வு மிகவும் குறைவாகவே இருக்கும்.

மாசடைதலை தடுக்க எடுகக் கூடிய வழிமுறைகள்

மனிதர்களுடைய நடவடிக்கைகளால் தான் அதிகம் தூய்மைக்கேடானது உருவாகின்றது.

கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இதுவே தூய்மையை பேண சிறந்த வழியாக இருக்கும்.

சூழலை மாசாக்கும் “பொலித்தீன்” “பிளாஸ்ரிக்” போன்றவற்றின் பாவனைகளை தடை செய்தல் இயற்கை மூலபொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை பாவித்தல்.

தூய்மைக்கேட்டை உருவாக்கும் மனிதர்களையும் நிறுவனங்களையும் தண்டித்தல் போன்ற நடவடிக்கைளை எடுப்பதன் மூலம் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்த முடியும்.

இதனை வலியுறுத்தும் வகையில் “உலக சூழல் தினம்” ஆனது ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

முடிவுரை

இன்று உலக மக்கள் தூய்மை கேட்டால் பல்வேறான பிர்ச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மனித வாழ்க்கையே இன்று சவாலானதாக மாறியுள்ளது.

உணவு நஞ்சாகி வருகிறது, பஞ்சம், பட்டினி என்பன உருவாகின்றது. காற்று மாசடைந்துள்ளது. நீர் மாசடைகின்றது நிலமும் மாசடைந்துள்ளது. காலநிலைகள் மாறியுள்ளது.

இவ்வாறு மனித வாழ்க்கை பெரும் சவாலாக மாறியுள்ளது. வீட்டை தாண்டி வெளியில் செல்ல முடியாத அளவுக்கு நோய் தொற்றுக்கள் உருவாகின்றன. இவற்றில் இருந்து உலகம் விடுபட தனி நபர் தூய்மையும் ஆரோக்கியமும் அவசியமாக இருக்கின்றது.

தூய்மைக்கேட்டை இல்லாதொழிப்போம். எம்மை நாமே காத்து கொள்வோம்.

You May Also Like:

தூய்மை இந்தியா கட்டுரை

உலக வெப்பமயமாதல் கட்டுரை