தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

Thavarangal Mukkiyathuvam Katturai In Tamil

இந்த பதிவில் தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

உணவு சங்கிலியின் ஆரம்பமாக தாவரங்களே இருக்கின்றன. இதிலிருந்தே உயிரினங்கள் உலகில் வாழ தாவரங்கள் இந்த பூமிக்கு எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ளலாம்.

  • தாவரங்களின் முக்கியத்துவம்
  • Thavarangal Mukkiyathuvam Katturai In Tamil
காடுகளின் பயன்கள் கட்டுரை

தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தாவரங்கள் ஏன் முக்கியமானவை
  3. தாவரங்களின் பயன்கள்
  4. தாவரங்கள் அழிக்கப்படுதலும் அதன் தீமைகளும்
  5. முடிவுரை

முன்னுரை

பூமியில் தோன்றிய முதலாவது வாழும் உயிரி தாவரங்கள் ஆகும். தாவரங்கள் இல்லாமல் இந்த பூமியும் மனித வாழ்க்கையும் சாத்தியம் இல்லை.

தாவரங்கள் அந்தளவிற்கு மனித வாழ்க்கைக்கும் ஏனைய உயிரினங்களின் வாழ்க்கைக்கும் அவசியமானதாக உள்ளது.

உணவு, வாழ்விடம், வாழ்வாதாரம் என பலவழிகளிலும் மனிதனுடைய ஜீவ நாடியாக தாவரங்களே உள்ளன.

பூமியினுடைய எல்லா வகையான இயக்க சமநிலைகளையும் தாவரங்களே பேணுகிறது. தாவரங்களே இல்லாத ஒரு பாலைவனத்தில் மனித வாழ்க்கையை எம்மால் சிந்தித்து பார்க்க முடியுமா?

இக்கட்டுரையில் தாவரங்களின் முக்கியத்துவம் அவற்றின் அழிவால் ஏற்படும் தீமைகள், அவற்றை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

தாவரங்கள் ஏன் முக்கியமானவை

தாவரங்கள் இயற்கையாகவே பல நன்மைகளை தன்னகத்தே கொண்டவை. மனிதர்கள் இல்லாமல் தாவரங்கள் வாழும் ஆனால் தாவரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது.

மனிதர்கள் சுவாசிக்க ஒட்சிசன் வாயுவானது தேவை இவற்றினை தாவரங்களே வெளிவிடுகின்றன. தாவரங்கள் காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசன் வாயுவை வெளிவிடுகின்றன.

பூமியில் பாதிப்பை விளைவிக்கும் காபன் வாயுக்களை உறிஞ்சி பூமியை குளிர்ச்சியாக வைக்க தாவரங்களே உதவுகின்றன. மனிதனுக்கு உணவை தாவரங்களே வழங்குகின்றன.

நெல்லும், காய்கறிகளும், பழங்களும், பூக்களும், தானியங்களும் தாவரங்களின் மூலமே விளைகின்றன.

மற்றும் மனிதன் வளர்க்கும் கால்நடைகளாகட்டும் வேட்டையாடும் காட்டு விலங்குகளாகட்டும் அனைத்தையும் போசிப்பது தாவரங்களே.

எனவே தான் உணவு சங்கிலியின் உடைய உற்பத்தியாக்கிகள் தாவரங்களாகும். மழையை பொழிவிப்பதும் மண்ணின் வளத்தை பேணுவதும் தாவரங்கள் தான்.

இவ்வாறு பல முக்கியத்துவம் மிக்கதாக தாவரங்கள் விளங்குவதனால் பூமியில் இன்றியமையாதவையாக இவை திகழ்கின்றன.

தாவரங்களின் பயன்கள்

தாவரங்களின் பயன்கள் ஏராளமானவை. அவை இருக்கும் காலத்தில் இருப்பதற்கு நிழல் தரும், உண்பதற்கு உணவழிக்கும், சுவாசிக்க காற்றினை கொடுக்கும்,

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வாழ்விடமாகும், தன் வேரினால் மண்ணை வளமாக்கும், வேரினால் பற்றி வைத்து மண்ணரிப்பை தடுக்கும், தரைக்கீழ் நீரை பாதுகாக்கும், தன் இலைகளை கொண்டு பயிர்களுக்கு பசளையாகும்,

தன் பூக்களை கொண்டு பூமியை அழகாக்கும், தேன் கொடுக்கும், ஆவியுயிர்ப்பின் மூலமாய் மழையை உருவாக்கி மண்ணுக்கு வரவழைப்பவை மரங்களே ஆகும்.

வேர், பட்டை, இலை, பூ என மருந்து மூலிகைகளாகி மனிதர்களின் நோய்களை போக்கும்.

மரத்தை அறுத்தாலும் பலகையாகி நமக்கு வீடாகவும் கைவினை பொருட்களாகவும் விறகாகவும் தன் வாழ்நாள் முழுவதும் பயனுடையவையாகவே இருக்கும்.

தாவரங்கள் அழக்கப்படுதலும் அதன் தீமைகளும்

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் தாவரங்கள் அதிகம் மனிதனுடைய அபிவிருத்தி மற்றும் வியாபார நோக்கங்களுக்காக மிகவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

பல மனிதர்களுக்கும் தாவரங்களின் அருமை புரிவதில்லை. முட்டாள் தனமாக இயற்கையாக உருவான காடுகளை அழித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

காட்டு வளம் மிகவும் பெறுமதியானது. இது மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இதனை அழிப்பதால் எதிர்காலத்தில் மனிதர்கள் பூமியில் வாழ்வது சாத்தியமற்றதாய் மாறிவிடும்.

காடுகளை அதிகம் அழிப்பதனால் பூமி பாலைவனமயமாதல் அரங்கேறி வருகிறது.

காலநிலை மாற்றத்தினால் இயற்கை அனர்த்தங்களாக வெள்ளம், வறட்சி என்பவற்றினால் விவசாய நடவடிக்கைகளும் மனித வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளன.

பூகோள வெப்பமயமாதல் செயற்பாடுகளால் துருங்களில் உள்ள பனி உருகி கடல் மட்டம் உயர்வதனால் உலகில் உள்ள தீவுகள் கடலில் மூழ்கும் அபாயமானது உருவாகியுள்ளது.

இவ்வாறு பூமியில்உள்ள அனைத்து இயற்கை சார் பிரச்சனைகளுக்கும் தாவரங்களின் அழிவே காரணமாகும்.

முடிவுரை

இவ்வாறு எல்லா வகையிலும் எமக்கு ஆதாரமாய் விளங்கும் தாவரங்களை பாதுகாக்க வேண்டியது மனிதர்களாகிய எம் அனைவரதும் கடமையாகும்.

ஒரு சில மனிதர்கள் மனசாட்சி இல்லாது சட்டவிரோதமாக மரங்களை அழிக்க முனைந்து நின்றாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளை பெற்று கொடுத்து மரங்களை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

நாம் இவ்வாறு செய்ய தவறுவோமாயின் இந்த பூமியே அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

You May Also Like:

உலக வெப்பமயமாதல் கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை