தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

Desiya Orumaipadu Katturai In Tamil

இதில் தேசிய ஒருமைப்பாடு கட்டுரை பதிவை பார்க்கலாம்.

இந்தியாவில் பல இனமத மக்கள் வாழ்ந்தாலும் இந்தியர்கள் என்ற தேசபக்தியின் ஒருமைப்பாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
  • Desiya Orumaipadu Katturai In Tamil
ஒற்றுமையே உயர்வு கட்டுரை

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்திய அமைப்பு
  3. ஒருமைப்பாடு வளர்ப்போம்
  4. பிரிவினைகளும் பின்னடைவும்
  5. முடிவுரை

முன்னுரை

பாரத தேசம் பண்டை பெரும் புகழ் கொண்ட தேசமாகும். “வந்தே மாதரம்” என்று பாடிய வங்காள கவிஞன் பக்கிம் சந்திர சட்டர்ஜி இந்திய தேசத்து மக்களை ஒன்று பட செய்தான்.

பல கோடி மக்கள் வாழும் இந்திய நாடு உலகின் அதிக இளைஞர்கள் வாழும் நாடாகும். தலை சிறந்த கலை, இலக்கியம், அறிவியல் பண்பாடுகளை கொண்ட இந்திய தேசம் நாட்டுப்பற்று மிக்க பிரஜைகளால் உருவானது.

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பார்கள் அது போல் இந்தியர்கள் தேசபக்கதி எனும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள். அந்நியர்கள் பாரதத்தை ஆக்கிரமித்தாலும் கூட தமது தேச ஒருமைப்பாட்டால் சுதந்திரம் அடைந்தார்கள்.

இக்கட்டுரையில் இந்திய ஒருமைப்பாடு பற்றி பார்க்கலாம்.

ஒருமைப்பாடு வளர்ப்போம்

ஒரு நாடு நல்வழியில் செல்ல வேண்டுமாயின் அந்நாட்டு மக்கள் ஒற்றுமையுடையவர்களாக இருக்கும் போது தான் அது சாத்தியமாகும்.

பிரிவனைகள் உருவாகினால் அந்நாட்டில் சண்டைகள் பிரச்சனைகள் என நாடு அமைதியற்றதாகவும் மக்கள் வாழமுடியாத இடமாக மாறிவிடும்.

இந்தியர்கள் பல மொழிகளை பேசி பல மதங்களை பின்பற்றி பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்டவர்களாக இருப்பதனால் இதனை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகள் மக்களை பிரிவினைப்படுத்த முயல்கின்றனர்.

இவற்றை விடுத்து மக்கள் ஒன்றுபடவேண்டும்.

இப்பரந்த இந்திய தேசத்தில் எல்லா வளங்களும் உள்ளன. ஆனால் இன்றும் இத்தேசத்தில் ஒரு சாரார் வறுமையில் வாடுகிறார்கள். ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகளும் மக்களின் ஒருமைப்பாடற்ற செயல்பாடுகளும் ஆகும்.

நீதியை கொல்பவர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே இம் மக்கள் செய்யும் தவறாகும். மக்கள் ஒருமைப்பட்டு தகுதியான தலைவர்களை தெரிவு செய்வதனால் இந்த நிலை மாறும்.

பிரிவினைகளும் பின்னடைவும்

இந்தியாவில் ஆக சிறந்த அறிவார்ந்த மக்கள் இருக்கின்ற அதே சமயம் முட்டாள்களும் இருக்கவே செய்கின்றனர். உலகின் பெரும் பணக்காரர்கள் இருக்கும் அதேநேரம் அதிக ஏழைகளும் இங்கு தான் உள்ளனர்.

இந்தியாவின் அரசியல் இன்று மோசமாக மாறி போயுள்ளது. கல்வியறிவே இல்லாமல் பண பலத்தால் அரசியலில் உயர் பதவிகளுக்கு சிலர் வருகின்றனர்.

இவர்கள் மக்களை இனம், மதம், மொழி, சாதி என பிரிவனைகளை உருவாக்கி இலவசங்களை கொடுத்து மக்களின் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கலாச்சாரம் இந்தியாவில் உள்ளது.

இவ்வாறான பிரிவினைகளால் உள்நாட்டில் மாநிலங்களுக்கிடையிலான கலவரங்கள் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளில் தவறான தனியார்களின் அதிகாரங்கள் இந்திய மக்களை மோசமாக பாதிக்கின்றது.

திறமை இருந்தும் விரும்பிய கல்வியை கற்கவும் நல்ல மருத்துவ சேவைகளை பெறவும் நீதியை பெற கூட லஞ்சம், பணபலம் என்பன அவசியம் ஆகி விட்டன.

இந்நிலமை இந்தியாவின் அபிவருத்திக்கு பாரிய முட்டுக்கட்டையாகஇருக்கின்றது.

முடிவுரை

அற்புதமான கலை, கலாச்சாரம், அழகியல் போன்றனவற்றுக்கு சொந்தமான இந்திய தேசம் பல பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட இந்தியா உலகளவில் சிறந்த நாடாக வர வேண்டும் என்பது தேசப்பற்று கொண்ட இந்தியர்களின் கனவாகும்.

“டாக்டர் அப்துல்கலாம்” அவர்கள் இந்திய தேசம் இளைஞர்களால் தலைநிமிரும் என்று நம்பினார்.

அதனால் தான் அடுத்த தலைமுறை குழந்தைகளை நாடி சென்று அவர்களுக்கு கல்வி எனும் ஆயுதத்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் மாறும் என மாணவர்களிடம் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் விதைத்தார்.

“தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலை பாயுமே இனிவரும் காலம் இளைஞர்கள் காலம் ஏழ்கடல் மெல்லிசை பாடுதே” என்று உணர்சி பொங்க தேச உணர்வை “கவிப்பேரரசு வைரமுத்து” பாடுகிறார்.

அபூர்வமான இந்திய தேசம் அங்குள்ள மக்களின் ஒருமைப்பட்டால் என்றேனும் ஓர் நாள் தலைநிமிரும் என்பதில் ஜயமில்லை.

You May Also Like :

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை