மரம் வளர்ப்போம் கட்டுரை

Maram Valarpom Katturai In Tamil

இதில் மரம் வளர்ப்போம் கட்டுரை பதிவை காணலாம்.

மரங்கள் இயற்கையின் வரங்கள். மனிதனின்றி மரங்கள் வாழும். மரங்களின்றி மனிதனால் வாழ முடியாது என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • மரம் வளர்ப்போம் கட்டுரை
  • Maram Valarpom Katturai In Tamil
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

மரம் வளர்ப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மரங்களின் முக்கியத்துவம்
  3. மரங்களை அழிக்கும் மனிதனின் மடமைத்தனம்
  4. மரங்களின் அழிவும் மனிதவாழ்க்கையின் சவாலும்
  5. மரம் நடுதல் தொடர்பான முயற்சிகள்
  6. முடிவுரை

முன்னுரை

“வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்” அந்தளவிற்கு மரங்கள் மனிதர்களுக்கு நன்மையையே செய்கின்றன.

ஆனால் மனிதனோ அதை உணர்ந்தபாடில்லை இன்றைக்கு பூமிக்கு ஒட்சிசனை கொடையாக தரும் மரங்களை அழித்து விட்டு செயற்கையாக ஒட்சிசன் தேடி அலைகிறான்.

காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வெளிவிடும் உலகின் நுரையீரல் காடுகள் என்பதனை மனிதர்களில் சிலர் இன்னமும் உணரவில்லை.

இக்கட்டுரையில் மரங்களின் முக்கியத்துவம், மரங்களை அழிக்கும் மனிதனின் முட்டாள்தனம், மரங்களின் அழிவும் மனிதவாழ்க்கையின் சவாலும், மரம்நடுதல் தொடர்பான முயற்சிகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

மரங்களின் முக்கியத்துவம்

ஏனைய கோள்கள் எதிலும் இல்லாத தனி சிறப்பே பூமியில் நீர் இருப்பதும் மழை பொழிவதும் தாவரங்கள் வளரக்கூடிய சூழ்நிலை இருப்பது தான். மரங்கள் பூமிக்கும் மனிதர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கின்றன.

மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையை பொழிவிக்கின்றன. அத்துடன் வேகமான காற்று மோசமான சூரிய கதிர்வீச்சு போன்றனவற்றை உறிஞ்சி மனிதர்களை பாதுகாக்கின்றன. மனிதர்கள் இழைப்பாற நிழல் கொடுக்கின்றன.

பூகோளவெப்பமயமாதல் போன்ற நிலமைகள் உருவாக மரங்கள் அழிவடைவது தான் காரணமாகும்.

மரங்கள் சுவாசிக்க காற்று தருகின்றன. பொழிகின்ற மழையை தேக்கி வைக்கின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன. உண்பதற்கு காய்கனிகளை கிழங்கு தானியங்களையும் தருகின்றன.

அழகான பூக்களை தந்து இப்பூமியை அழகாக்கின்றன. மன அழுத்தம் நிறைந்த இவ்வாழ்க்கையில் பலபேரின் மன அமைதிக்கு இவ்வியற்கையே காரணாகும்.

காய்ந்து விறகாக எரிபொருளாகவும் மருந்து மூலிகைகளாகவும் வாழ்விடங்களை அமைக்க மரங்களாகவும் உதவுகின்றன.

மனிதர்கள் மாத்திரம் அன்றி பலகோடி பூச்சிகளும் ஊர்வனவும் பாலூட்டி விலங்குகளும் பறவைகளும் வாழ்விடம் கொடுத்து உணவளிக்கும் பூமியின் மிகப்பெரும் உயிர்ப்பெருந்திணிவு காடுகளாகும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவம் எண்ணற்றவையாகும்.

மரங்களை அழிக்கும் மனிதனின் முட்டாள்தனம்

இன்றைய காலத்தில் மனிதன் மரங்களின் முக்கியத்துவத்தினை அறியாது அவற்றினை அபிவிருத்தி நடவடிக்கை எனும் பெயரில் அழித்து வருகின்றமையானது ஒரு இழி செயலாகும்.

இச்செயல்ப்பாடு அதிகம் அபிவருத்தியடையந்து வரும் நாடுகளில் உயர்வாக காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் மரங்களின் முக்கியம் அறிந்து அதனை அழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி மரங்களை பாதுகாத்து வருகிறது.

தென்னாசியா போன்ற வளர்முக பிராந்தியங்கள் நகராக்கம், அபிவிருத்தி, வேலைத்திட்டம் என்ற பெயரில் இருக்கின்ற காடுகளை அழித்து நாசமாக்கி வருகின்றனர்.

காடுகளில் வேட்டையாடல் பெறுமதியான மரங்களை விற்று பணம் பார்த்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மரங்களின் அழிவும் மனித வாழ்க்கையின் சவால்களும்

இன்றைக்கு முன்பைபோல் அல்லாது மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பயிர்செய்யும் நேரத்தில் வறட்சியும் அறுவடைநாட்களில் வெள்ளமும் புயலும் காட்டுத்தீயும் என்று இயற்கை மனிதனுக்கெதிராய் தனது சீற்றத்தை காட்டுகிறது.

பயிர் நிலங்கள் பாலைவனமாகி தரிசுநிலங்களாக மாறிகிடக்கின்றன. தினம் தினம் வெப்பநிலை உச்சம் தொடுகிறது. வான் மழையின்றி ஆறுகள் குளங்கள் வரண்டு விலங்குகளும் பறவைகளும் தவிக்கின்றன.

தரைக்கீழ் நீரும் வரண்டுபோக இன்று குடிநீர் பாரிய சந்தை பொருளாகமாறி நிற்கிறது. இதற்கெல்லாம் நேரடியானதும் மறைமுகமானதுமான காரணம் மரங்களின் அழிவேயாகும்.

இன்னும் மடைமை மிகுந்த சிலருக்கு மரங்களின் அருமை புரியவேயில்லை.

மரம் நடுதல் தொடர்பான முயற்சிகள்

மரங்களே எம் மண்ணின் வரங்கள் இவற்றை எம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். அவர்கள் பாதுகாத்த மரங்கள் தான் இன்று எமக்கு நிழலாகி பயன் தந்து கொண்டிருக்கிறது.

நாமும் மரங்கள் நடவேண்டும் அண்மையில் காலமான தென்னிந்திய திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் நினைவாக ஒரு கோடி மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தை அமுல்படுத்திய மகத்தான பணியை ஆற்றி சென்றார்.

அவர் விட்டு சென்ற பணியை நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டும். இன்றைக்கு உருவாகும் நகரங்கள் அதிகம் பசுமை நகரங்களாகவே உருவாக்கப்பட்டுவருவது சிறப்பான ஒன்றாகும்.

முடிவுரை

சராசரியாக ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை என்று கணித்திருக்கிறார்கள். உலகமக்கள் சனத்தொகையிலும் அதிகமாக மரங்கள் இப்பூமியில் காணப்படவேண்டும் ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும்.

காடுகளை நாம் செயற்கையாக உருவாக்க வேண்டிய சூழலை இங்கு உருவாக்கியது யார்? நாம் தான்.

இயற்கையாக உருவாகியவை தான் இந்த பெரும் விருட்சங்கள் நிறைந்த இக்காடுகள் இவற்றை அழிப்பதை நிறுத்தி பாதுகாப்போம்.

எல்லா வளங்களையும் அழித்து நாமும் அழிந்து எமது வருங்கால சந்ததியினரின் அழிவுக்கு நாமே வித்திடாமல் மரங்களை காப்போம் எம் வாழ்வை காப்போம்.

You May Also Like :

உடல் நலம் காப்போம் கட்டுரை

ஒற்றுமையே உயர்வு கட்டுரை