வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை

Vetrumaiyil Otrumai Katturai In Tamil

இந்த பதிவில் வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை பதிவை காணலாம்.

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று கூறுவார்கள். நாம் தனியாக இருக்கும் போது எதிரிகளால் இலகுவில் வீழ்த்தப்படுவோம்.

ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் வாழ்வில் நாமும் உயர்ந்து நம் சமூகத்தையும் உயர்த்த முடியும்.

  • வேற்றுமையில் ஒற்றுமை
  • Vetrumaiyil Otrumai Katturai In Tamil
நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் கட்டுரை

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒற்றுமையின் முக்கியத்துவம்
  3. வரலாறுகளில் வேற்றுமையின் விளைவுகள்
  4. ஒற்றுமையே பலம்
  5. முடிவுரை

முன்னுரை

“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்” என்கிறார் திருவள்ளுவர்

அதாவது வேற்றுமையிலும் ஒற்றுமையாய் இருக்க தலைப்படுபவர்களை யாராலும் வெல்ல முடியாது என்பது தெய்வபுலவர் வாக்கு இது இவ்வுலத்தாரிற்கு சால பொருந்துவதாக அமையும்.

இன்றைக்கு ஒரு சமுதாயமாகட்டும் ஒரு நாடாகட்டும் உயர்ந்த நிலையை அடையவேண்டுமானால் ஒற்றுமையினாலேயே உயரமுடியும்.

மனிதர்களை வேறுபடுத்த பல விடயங்கள் இருக்கின்றன. அவை நிறம், மதம், சாதி, மொழி, பதவிநிலைகள், சமூக அந்தஸ்து, பணம் என வேற்றுமையை உண்டாக்க இங்கு பல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்

மனிதநேயம் என்ற ஒற்றை சொல்லினால் மனிதர்கள் ஒன்றுபடுவார்களே ஆனால் அவர்களது வளர்ச்சி தானாக உண்டாகும்.

இக்கட்டுரையில் ஒற்றுமையின் முக்கியத்துவம், வரலாறுகளில் வேற்றுமையின் விளைவுகள் மற்றும் ஒற்றுமையே பலம் போன்றவற்றை பார்க்கலாம்.

ஒற்றுமையின் முக்கியத்துவம்

ஒற்றுமை உள்ள ஒரு குழு வெற்றி பெறுகிறது ஒற்றுமை இல்லாதவர்கள் தோல்வியினையே தழுவுகின்றனர் இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தியர்களை அவ்வளவு இலகுவில் வெல்வது கடினம் இருந்தாலும் அவர்களிடையே நிறைய வேற்றுமையும் பிரிவினைகளும் இருந்தது இதனை பயன்படுத்தி பிறநாட்டவர்கள் இலகுவாக இந்தியர்களை வீழ்த்திய பல நிகழ்வுகளை வரலாறு கூறுகிறது.

உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்ல கூடிய நாடுகள் ஒற்றுமை மிக்க தேசங்களாக இருக்கின்றன. மேற்குலக நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி, ஜப்பான், சீனா இது போன்ற நாடுகள் இன்று உலகின் முதல் தர நாடுகளாக இருக்க அவர்களது ஒற்றுமையே காரணமாகும்.

சாதாரண விலங்குகள், பறவைகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்து காட்டுகளாகும்.

பல இனங்கள் தமது சுதந்திரத்தை அடையாமல் அடிமைப்பட்டு கிடக்க காரணம் ஒற்றுமை இன்மையே ஆகும்.

வரலாறுகளில் வேற்றுமையின் விளைவுகள்

வரலாறுகளை புரட்டி பார்த்தால் ஒற்றுமையின் வெற்றியும் வேற்றுமையின் தோல்வியையும் அவதானிக்க கூடியதாக இருக்கும்.

மாவீரன் அலெக்ஸான்டர் உலகத்தையே வெல்ல காரணம் அவனது பலம் பொருந்திய ஒற்றுமை மிக்க படைகளே ஆகும். இதனால் ஒற்றுமை அற்ற தேசங்களை இலகுவாக வீழ்த்தினார்கள்.

ஜரோப்பாவில் இருந்து யூதர்கள் அடித்து விரட்டப்பட்டனர், அடிமைகளாக்கப்பட்டனர். வாழ்வதற்கு நாடின்றி நிர்க்கதியாய் நின்றனர்.

ஆனால் அவர்களது ஒற்றுமையை மட்டுமே இஸ்ரேல் என்ற தேசம் உருவாக காரணமாக அமைந்தது. இன்றைக்கு உலகத்தில் பலம் பொருந்திய நாடாக மாறி இருக்கிறது.

என்ன தான் திறமையும் வலிமையும் இருந்தாலும் ஒற்றுமை இல்லாவிடில் அது தோல்வியை தான் கொடுக்கும் என்பதனை நாம் வரலாறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

ஓற்றுமையே பலம்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று கூறுவார்கள். நமது முன்னோர்கள் ஒற்றுமை தான் எமது சமூகத்தை முன்னேற்றும் என பல இடங்களில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் இனம் இன்றைக்கு பல அவலங்களையும் வேதனைகளையும் சந்தித்து இருக்கிறது. அதற்கெதிராய் பல முறை போராடியும் தோற்று போக காரணம் எமது ஒற்றுமை இன்மையே ஆகும்.

மக்களிடையே ஒற்றுமை வளரவேண்டுமாயின் ஒவ்வொரு மனிதர்களும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும். ஓற்றுமையாக அனைவரும் ஒருமித்து செயல்பட்டால் தான் எதனையும் எம்மால் சாதிக்க முடியும்.

முடிவுரை

அனைவரும் ஒன்றுபட்டால் அத்தேசத்தின் வளர்ச்சி விண்ணை தொடும், ஆக்க பூர்வமான விடயங்கள் தானாக நடந்தேறும் இன்றைக்கு எமது நாடுகள் முன்னேறாமல் இருக்க ஒற்றுமையின்மையும் ஊழல்நிறைந்த அரசியலுமே காரணமாகும்.

இந்த நிலையானது மாறவேண்டுமாயின் மக்கள் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதன் மூலம் மக்களிடையே புரிந்துணர்வும் தேசப்பற்றும் மனிதநேயமும் வளரும் அந்தநாடு உலகத்தில் சிறந்த நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

You May Also Like:

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

அன்னை தெரசா பற்றிய கட்டுரை