அன்னை தெரசா பற்றிய கட்டுரை

Annai Teresa Katturai In Tamil

இந்த பதிவில் அன்னை தெரசா பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

பலகோடி மனிதர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் ஒரு சிலரை மட்டும் வரலாறு இன்றும் நினைவில் வைத்திருக்கின்றது. பெரும்பாலானோர் வாழ்ந்து மறைக்கின்றனர் ஒரு சிலர்தான் மறைந்தும் வாழ்கின்றனர்.

அன்பு, இரக்கம், கருணை அத்தனைக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் “அன்னை தெரசா”.

  • அன்னை தெரசா கட்டுரை
  • Annai Teresa Katturai In Tamil
வாய்மையே வெல்லும் கட்டுரை

அன்னை தெரசா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறை
  3. ஆற்றிய சேவைகள்
  4. உலகத்தின் மனதை உருக்கிய தாய்மை
  5. முடிவுரை

முன்னுரை

இந்த உலகை மாற்ற நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல

அன்பும் நேசமும் பாசமும் கருணையும் தான் என இத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாக வாழ்ந்து கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரேசா ஆவார்.

இவரது வாழ்க்கை உலகில் பலபேருக்கு முன்னுதாரணமாகும். அநாதைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தாயாக இருந்து தனது வாழ்வை மகாஉன்னதமாக மாற்றியவர் ஆவார்.

பலபேரின் மனதை உருக செய்தவருடைய பிறப்பு மற்றும் வாழ்க்கை முறை, ஆற்றிய சேவைகள் பணிகள் மற்றும் இவர் இவ்வுலக மக்களின் மனதை அன்பால் மாற்றிய விதம் போன்றவற்றை இக்கட்டுரை நோக்குகிறது.

பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறை

இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி யூகோஸ்லாவியா நாட்டில் “அக்கினீஸ்” என்ற பெயருடன் பிறந்தார். பிற்காலத்தில் குழந்தைகளின் அன்பின் முகவரியாக விளங்குவார் என்பதை அன்று எவருமே அறியவில்லை.

இவர் ரோமன் கத்தோலிக்க ஆலயத்தில் கன்னியாஸ்த்திரியாக சகோதரி “தெரேசா” என்று இவர் பெயர்மாற்றி கொண்டார்.

1929 இல் இவர் தனது 19 ஆவது வயதில் இந்தியாவின் கல்கத்தாவிற்கு புறப்பட்டார். சுமார் 68 ஆண்டுகள் இந்திய தேசத்துக்கு சேவையாற்றினார்.

17 ஆண்டுகளாக இவர் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இக்காலப்பகுதியில் கல்கத்தாவில் புறநகர் பகுதிகளில் வாழ்ந்து வந்த ஆதரவற்ற குழந்தைகளை பார்த்து மனம் நெகிழ்ந்தார். பின் அக்குழந்தைகளுக்கு சேவை செய்வதை தனது வாழ்நாள் பணியாக கொண்டு செயற்பட்டார்.

ஆற்றிய பணிகள்

1950 ஆம் ஆண்டு “மிசனரி ஆப் சாரிட்டி” என்ற அமைப்பினை உருவாக்கி ஆதரவற்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். 1952 இல் “நிர்மல் றீடி” என்ற இல்லத்தை திறந்தார்.

இதுவே பல ஆதரவற்றோரை பராமரிக்கும் கருணை இல்லமாக தொழிற்பட்டது. 48000 ஆதரவற்ற மக்கள் இவ்இல்லத்தில் வைத்து காப்பாற்றப்பட்டனர்.

சகமனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அடைக்கலம் தந்தவர் ஆவார்.

இவரது வாழ்வில் ஒரு சந்தர்ப்பம் இவர் ஒருமுறை ஒரு செல்வந்தரிடம் தனது சேவைக்காக உதவி கேட்க சென்றிருந்தார் அப்போது அந்த செல்வந்தர் அன்னை தெரேசாவின் கைகளில் காறி உமிழ்ந்தாராம்

கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள் மூடிக்கொண்டு எனக்கு இந்த எச்சில் போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். இதனை கண்டு மனம் கலங்கிய செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

இவ்வாறு பிற உயிர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மிகச்சிறந்த பெண்மணியாவார். 1933 இல் அன்னை இல்லத்தையும் 1957 இல் தொழுநோயாழிகளுக்கான ஒரு இல்லத்தையும் உருவாக்கினார்.

பலரும் வெறுத்து ஒதுக்கிய தொழுநோயாளர்களுக்கு அன்பையும் ஆதரவையும் இவர் வழங்கினார்.

12 கன்னியாஸ்திரிகளோடு ஆரம்பித்த இவரது “மிசனரி ஆப் சாரிட்டி” அமைப்பு இன்றைக்கு 500 க்கு மேற்பட்ட நிலையங்கள் 131 நாடுகளில் இயங்கி வருகிறது.

இவரது சேவைக்கு பாராட்டுக்களும் பட்டங்களும் விருதுகளும் தேடிவந்தன. 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைத்தது.

1980 இல் இந்தியாவின் பாரத ரத்னா விருது கிடைத்தது. 1985 இல் அமெரிக்க அதிபரின் தங்க பதக்கம் என இவரது சேவைக்கு பரிசாக கிடைத்தது.

அன்பினால் இவ்வுலகத்தை அரவணைத்த இவர் 1997 இல் இவ்வுலகை விட்டு நீங்கினார்.

முடிவுரை

இவரது இழப்பை கண்டு கலங்காத கண்களும் கலங்கின. இவர் வாழும் காலத்தில் இவருக்கென இருந்த சொத்துக்களாக 3 வெள்ளை சேலைகளும் ஒரு சிலுவை ஜெபமாலையும் மட்டும் தான்.

ஆனால் விலை மதிப்பற்ற அன்பை ஏழைகளுக்கு வழங்கி சென்றவர். “அன்பிற்கு அன்னை தெரேசா” என்று சொல்லும் அளவிற்கு அன்பினால் இவ்வுலகம் தளைக்கும் என்ற உண்மையை சொல்லி சென்றவர் ஆவார்.

சகமனிதர்களிடமும் ஏழை எளியவர்களிடமும் அன்பு செலுத்த எம் அனைவருக்கும் அவர் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

டெங்கு ஒழிப்பு கட்டுரை