வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள்

நமக்கு முன் வாழ்ந்த தத்த்துவ ஞானிகளாலும் முன்னோர்களாலும் அனுபவத்தாலும் அறிவாலும் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் இவை எங்கள் வாழ்வை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

இந்த பொன் மொழிகளை நம் வாழ்க்கையில் கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் | வழக்கைக்கு தேவையான தத்துவங்கள்

எந்த சூழ்நிலையிலும்
எதுவாக இருந்தாலும்
உங்களை நம்பி
இருப்பவர்களை
ஏமாற்றாதீர்கள்
ஏமாற்றவும்
நினைக்காதீர்கள்.

பிறருடன் பேசும் போது
உங்களுக்கு தெரிந்த
விடயங்களை மட்டும்
பேசி பழகுங்கள்
உங்களுக்கு தெரியாத
சரியென உறுதி இல்லாத
விடயங்களை பேசாதீர்கள்.
இது கால போக்கில்
உங்கள் மீதான
நம்பிக்கையையும்
அதிகரிக்கும்.

ஒரு மனிதனை ஒரு
பூரணமான ஒருவனாக
மாற்றுவது அவனுக்கு
கிடைக்கும் உதவிகளும்
வசதிகளும் அல்ல.
அவனுக்கு ஏற்படும்
துன்பங்களும்
இடையூறுகளுமே.

ஒவ்வொருவரினதும் முகமூடிகள்
கிழியும் வரை அவர்கள்
நமக்கு நல்லவர்களாக தான்
தெரிவார்கள். யாரையும்
அதிகமாக நம்பாதீர்கள்
அவர்களின் உண்மையான
குணம் வெளிப்படும் போது
மிகுந்த ஏமாற்றமாக இருக்கும்.

நம்மில் பலருக்கு
மற்றவர்களின் துன்பத்தின்
போது ஆறுதல் சொல்லும்
தைரியம் நமக்கு ஒரு துன்பம்
ஏற்படும் போது இருப்பதில்லை.

உங்களை ஒருவர்
வாழ்க்கையில்
ஏமாற்றினால்
அவர்களை மன்னிக்கும்
மனதை வளர்த்துக்
கொள்ளுங்கள் ஆனால்
எந்த சந்தர்ப்பத்திலும்
மறந்தும் கூட அவர்களை
நம்பி விடாதீர்கள்.

உனக்கு உண்மையான
உறவுகள் யார் என்று
அறிய விருப்பினால்
உனக்கு இருக்கும்
செல்வதை விட்டு
ஏழையாக வாழ்ந்த
பார் அப்போது
நீ அறிவாய் யார்
உனக்கு உண்மையான
உறவுகள் என்று.

நீங்கள் கொடுப்பது
சிறிதாக இருக்கின்றது
என நினைத்து ஒரு போதும்
கொடுப்பதற்கு தயங்காதீர்கள்
அது வாங்குபவர்களுக்கு
பெரிதாக இருக்கும்.

எடுப்பது சிறிதாக
இருக்கிறது என
எண்ணி மற்றவர்களிடம்
இருந்து திருடாதீர்கள்.
இழந்தவர்களுக்கு அது
மிகவும் பெரியதாக
இருக்கும்.

வாழ்க்கையில் உயரும்
போது கூட இருக்கும்
உறவுகளை விட
நீ வாழ்க்கையில்
விழும் போது தாங்கி
பிடிக்கும் உறவுகளை
யாருக்காகவும்
இழந்து விடாதே.

அவர்கள் தான்
உண்மையான
உறவுகள்.

அடுத்தவர்களுக்கு
அறிவுரை சொல்லுவது
மிகவும் எளிதான
ஒன்று தான் அதை
கடைபிடிப்பது தான்
கடினமானது.

பிறருக்கு ஆயிரம்
அறிவுரைகள்
சொல்வதை விட்டு விட்டு
அதில் ஒன்றை நீங்கள்
கடைபிடிக்க பழகிக்
கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்