வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்

வாழ்க்கையில் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது இந்த தத்துவங்களை நினைவில் வைத்துக்கொண்டால் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

ஊக்கம் ஊட்டும் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் என்ற இந்த தொகுப்பில் பத்து தத்துவங்களை பார்க்கலாம்.

வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் தொகுப்பு

வாழ்க்கையில் காயப்பட்ட
பின்பு தான் சிலரின்
உண்மையான சுயரூபத்தை
புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களிடம் ஆறுதல்
தேடுவதை நிறுத்திக்
கொண்டால் பெரும்பாலும்
அடிமையாவதை
நிறுத்திக் கொள்ளலாம்.

உன்னால் தாக்கப்பட்ட
ஒருவன் உன்னை
திருப்பி தாக்கவில்லை
என்றால் அவனிடம்
எச்சரிக்கையாக இரு
ஏனென்றால் அவன்
மறக்கவும் மாட்டான்
மன்னிக்கவும் மாட்டான்.

நம்மை அவர்களின்
வாழ்க்கையில் இருந்து
ஒதுக்கியவர்கள் கூட
ஒரு நாள் நம்மை தேடி
வருவார்கள் நமது தேவை
அவர்களுக்கு
இருக்கும் போது.

அனைத்து இடத்திலும்
சகித்துக் கொண்டே
சென்றால் நமக்கான
மரியாதை கிடைக்காமல்
போய் விடும்.
பேச வேண்டிய
இடங்களில் கட்டாயம்
பேசி விடுங்கள்.
உங்களுக்கான
மரியாதையை
தேடி வரும்.

புதிதாக பலரை
காணும் போது
பலருக்கு பழைய
முகங்கள் தெரியாமல்
போய் விடும்.

துன்பங்கள், இடையூறுகள்,
இழப்புகள் என்பற்றை
ஒருவன் தன் வாழ்நாளில்
அடைந்த பிறகே ஒருவன்
அதிக அடக்கத்தையும்
பணிவையும்
கற்றுக் கொள்கிறான்.

வாழ்க்கையில் ஏற்படும்
துன்பங்களை கடந்து
போக கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் மறந்து
போய் விடாதீர்கள்
அது தான் உங்கள்
வழிகாட்டியாக
இருக்கும்.

கடந்த காலத்தில்
நடந்த துன்பங்களை
நினைத்து வருந்திக்
கொண்டு இருந்தால்
வரும் காலமும்
துன்பமாக தான்
இருக்கும்.

கடந்த காலம்
கற்றுத் தந்த
பாடத்தை வழிகாட்டியாக
எடுத்துக்கொண்டு
வரும் காலத்திற்கான
பாதையை சிறப்பானதாக
எடுத்துச் செல்லுங்கள்.

வாழ்க்கையில் நீங்கள்
தொலைத்த உறவுகளை
மட்டும் தேடிச்
செல்லுங்கள்
விலகிச் சென்ற
உறவுகளை தேடி
செல்லாதீர்கள்.