தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal

Tamil Ponmozhigal

நம் வாழ்வில் உற்சாகம் தரும் வரிகளாக இந்த “தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal” இருக்கும். பொன்மொழிகள் வாழ்வை உணர வைக்கும்.

தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal

தோல்விகளை தன்னம்பிக்கையுடன்
எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்..
அது தான் வெற்றிக்கான
மிக முக்கியமான திறமை.

யாராவது தங்கள் வாழ்நாளில்
ஒரு பிழையும் செய்ததில்லை
என்று கூறினால்.. அவர்கள்
தங்கள் வாழ்நாளில் எந்த
புதிய முயற்சியும்
செய்ததில்லை என்று அர்த்தம்.

உங்கள் வாழ்க்கைக்கான
பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு ஒருவரின்
கால்களைக் கொண்டு
உங்களால் நடக்க முடியாது.

வாய்ப்புகள் உன்னைத்
தேடி வரும் என்று
காத்திருக்காதே உனக்கான
வாய்ப்பை நீயே தான்
உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நீ மற்றவரை
ஏமாற்றுவதைக் காட்டிலும்
தொற்றுப் போவது மிகவும்
மரியாதைக்குரியது.

நீ வாழ்க்கையில்
முழுப் படிக்கட்டையும்
கடக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை..
நம்பிக்கையுடன் முதல்
அடியை எடுத்து வை.

வாழ்க்கையில் தேவையான
இடத்தில் முற்றுப்புள்ளி
வைக்காவிட்டால்..
வார்த்தையும்..
வாழ்க்கையும்.. அர்த்தம்
இல்லாமல் போய் விடும்.

துன்பங்கள் அனுபவித்த
காலத்தை மறந்து விடு
ஆனால் அது கற்றுத் தந்த
பாடத்தை எப்போதும்
நினைவில் வைத்துக் கொள்.

செய்து முடிக்கப்பட்ட
மாபெரும் சாதனைகள்
எல்லாம் செய்ய முடியாது
என பலராலும்
நிராகரிக்கப்பட்டவை தான்.

ஒரு அன்பான இதயம்
ஆயிரம் அழகான
முகத்திற்கு சமம்
எப்போதும் அழகான
முகத்தை விட அன்பான
இதயத்தை நேசி உன்
வாழ்க்கை இனிதாக இருக்கும்.

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத பெரிய
சுமையாக மாறிவிடும்.

நல்லவராக இருப்பது
சிறந்தது தான் ஆனால்
நல்லது கெட்டது தெரியாத
நல்லவராக இருப்பது
ஆபத்தானது.

கடலில் மூழ்கினால்
முத்து எடுக்கலாம்..
கடனில் மூழ்கினால்
வாழ்க்கை போய் விடும்.

உங்களை நீங்கள்
மாற்றிக் கொள்வதன்
மூலம் தான் இந்த
உலகத்தை மாற்றுவதற்கான
பாதையை அமைத்துக்
கொள்ள முடியும்.

எவன் ஒருவன் மற்றவர்களின்
நல்ல செயல்களைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளவில்லையோ
அவனால் நல்ல செயல்கள்
எதையும் செய்ய முடியாது.

அறிமுகம் இல்லாத
மனிதர்களின் பார்வையில்
நாம் அனைவரும்
சாதாரண மனிதர்கள் தான்.

மனிதனின் பாவங்களில்
பெரும்பாலானவை
அவனின் நாவில் இருந்து
தான் பிறக்கின்றது.

ஒருவனிடம் உள்ள
மிகப் பெரிய பலவீனம்
தன்னை தானே
மிகப் பெரிய புத்திசாலி
என்று எண்ணுவதே.

நட்பு என்பது நம்
உடலின் ஆரோக்கியத்தைப்
போன்றது அதை இழந்த
பிறகு தான் அதன்
அருமை புரியும்.

உலகில் மிகவும்
உயர்ந்த குணம் சக
மனிதர்களிடம் நீங்கள்
காட்டும் அன்பும்
இரக்கமும் தான்.

ஒரு செயலில் நீங்கள்
விடா முயற்சியுடன்
ஈடுபடும் பொழுது
அதற்கான வெற்றியை
நிச்சயம் அடைவீர்கள்.

சிறு குழந்தை கூட
அழுகை எனும்
போராட்டம் செய்தே
தனது தேவைகளை
நிறைவேற்றிக்
கொள்கின்றது.

ஒரு மனிதனின் நல்ல
குணங்களே அவனை
மனிதனாக இந்த உலகில்
அடையாளப்படுத்துகின்றது.
வாழ்வில் நல்ல குணங்களை
வளர்த்துக்கொள்ள பழகுங்கள்.

புத்தர் பொன்மொழிகள்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.