காலை வணக்கம் கவிதை வரிகள்

இந்த காலை வணக்கம் கவிதை வரிகள் மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் காதலுக்கு காலை வணக்க வாழ்த்தை சொல்ல முடியும்.

காலை வணக்கம் கவிதை வரிகள்

எத்தனை தடவை ஒரு
இதயம் காயப்பட்டாலும்
மனதிற்கு பிடித்தவரை
ஒரு போதும் வெறுக்காது.
இதயம் வெறுப்பது போல
நடிக்க மட்டுமே செய்யும்
இனிய காலை வணக்கம்.

எனக்கு எல்லாம் தெரியும்
என்று குழப்பத்தோடு
இருப்பதற்கு பதிலாக எனக்கு
எதுவும் தெரியாது என்று
தெளிவோடு இருப்பது சிறந்தது
இனிமையான
காலை வணக்கம்.

ஒருவன் அமைதியாக
இருந்தால் அவனை மடையன்
ஒன்றுக்கும் ஆகாதவன் என்று
எண்ணி விடாதே..
பேசுபவனை விட
கவனிப்பவனே புத்திசாலி.
இனிய விடியல் பொழுது வணக்கம்.

எதுவும் இல்லாமல் நீ
வாழலாம் ஆனால் நம்பிக்கை
இல்லாமல்
நீ வாழ கூடாது.
இன்றைய நாள்
நம்பிக்கையான நாளாக
அமையட்டும்
காலை வணக்கம்.

விடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ முடியும்
என்ற நம்பிக்கையில்
எழுந்திரு அனைத்தையும்
சாதிக்கலாம். என் அன்பான
உறவுகளுக்கு காலை வணக்கம்.

இல்லாதவனுக்கு கொடுத்து
உதவினால் நீ செல்லும்
பாதை வெளிச்சமாக
அமையும் உதவி செய்யும்
மனதை வளர்த்துக் கொள்வோம்.
காலை வணக்கம்
நண்பர்களே.

உலகிற்கு நீ அரசனாக
இருக்க வேண்டும் என்றால்
முதலில் உன் மனதிற்கு
நீ சேவகனாக
இருக்க வேண்டும்.
அனைவருக்கும் என்
காலை வணக்கங்கள்.

இந்த உலகில் யாரும்
நமக்கு உண்மையாக
இல்லை என்று நீங்கள்
கவலைப்பட்டால்..
கண்ணாடியை பார்த்துக்
கொள்ளுங்கள் நமக்கு
உண்மையாக இருப்பவர்கள்
நாம் மட்டும் தான்
இனிய காலை வணக்கம்.

அன்பு என்பது மனிதனின்
பலவீனம் ஏமாற்றப்படும்
அன்பு மனிதனை
மிருகமாக்கும்..
ஏமாற்றமில்லாத அன்பு
மிருகத்தை மனிதன் ஆக்கும்..
காலை வணக்கம்.

உன்னை நம்பு..
உன் உழைப்பை நம்பு..
உன் முயற்சியை நம்பு..
உனக்காக உதவி செய்வார்கள்
என்று யாரையும் நம்பி விடாதே
உன் கையே உனக்கு உதவி
காலை வணக்கம்..

தோல்வி என்பது இழிவு
அல்ல.. தோல்வி வந்து விடும்
என்று அஞ்சி பின் வாங்குவது
தான் இழிவு.. தோல்வியை
கண்டு அஞ்சாதீர்கள்..
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்.

அன்பு இருந்தும்
அதை காட்ட மறுக்கிறது
ஒரு இதயம்.. அன்பு
கிடைக்காது என்று
தெரிந்தும் அதற்காக
ஏங்கி தவிக்கிறது
இன்னொரு இதயம்..
அன்பு நிறைந்த
இனிய காலை வணக்கம்..!

எத்தனை கைகள் உன்னை
கீழே தள்ளி விட்டாலும்
நம்பிக்கை எனும் கை
உன்னை உயரத்திற்கு
கொண்டு செல்லும்..
இந்த நாள் நம்பிக்கை
மிக்க நாளாக அமையட்டும்
அனைவருக்கும்
காலை வணக்கம்..!

சூரியன் சிரித்தாள் பூமி
பிரகாசமாக தெரியும்
உங்கள் சிரிப்பில்
மற்றவர்கள் மனம்
குளிரட்டும்
காலை வணக்கம்
நண்பர்களே..

இந்த காலை வணக்கம் கவிதை வரிகள் உங்களுக்கு காலை பொழுதை இனிமையாக தொடங்க ஒரு உற்சாகத்தை தரும்.

மேலும் இது போன்ற காலை வணக்கம் கவிதை இங்கே படியுங்கள்.