தத்துவ கவிதைகள் | தத்துவம் Quotes

இந்த தொகுப்பு “தத்துவ கவிதைகள் | தத்துவம் Quotes” பற்றியது. இந்த தத்துவங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

  • தத்துவ கவிதைகள்
  • தத்துவம் Quotes
  • வாழ்க்கை தத்துவம் status
  • வாழ்க்கை தத்துவங்கள்

தத்துவ கவிதைகள் | தத்துவம் Quotes

தொட முடியாத தூரத்தில்
உன் கனவு இருந்தாலும்
தொட்டு விடலாம் என்ற
நம்பிக்கையில் நீ இரு..!

வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு வருவதில்லை
ஆனால் வந்த எதுவும் எதையும்
சொல்லிக் கொடுக்காமல்
விடுவதில்லை..!

எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!

உன்னுடைய தன்மானத்தை
யாரிடத்திலும் விட்டுக்
கொடுக்காதே உன்னை விட
சிறந்தவன் இந்த உலகில்
ஒருவனுமில்லை..!

வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரும்.. நமக்கு ஏதோ
ஒன்றை கற்பித்து விட்டு
தான் செல்கிறார்கள்..!

வாழ்க்கையில் நிறைய
பிரச்சனைகளை சந்தித்த
பின் அறிவையும் சில
இழப்புக்களை பார்த்த
பின் அதிக அடக்கத்தையும்
உணர்கிறோம்..!

நீ இழந்ததை நினைத்து
வருந்தினால் இருப்பதையும்
இழந்து விடுவாய்..! நீ
இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் இழந்ததையும்
அடைந்து விடுவாய்..!

அடுத்தவன் பாதையைப்
பின்பற்றாதே ஏனெனில் 
அவனுடைய பாதை
உன்னுடைய பாதையை
கண்டுபிடி..!

இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
போதும் ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல்
வேண்டும்..!

உலகத்தில் மிகவும்
அழகானவர்கள்
மற்றவர்கள் சந்தோசத்தை
பார்த்து தானும்
சந்தோசப்படுபவர்கள்..!

உன் சந்தோஷத்தில்
உன்னுடன் இருந்தவர்களை
விட..! உன் கஷ்டத்தில்
உனக்கு தோள்
கொடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே..!

யாரும் தானாக
மாறுவதில்லை யாரோ
ஒருவரால் மாறுகிறோம்
நல்லவராக கெட்டவராக
ஏமாளியாக அறிவாளியாக
முட்டாளாக..!

சிலரிடம் சில
விடயங்களை புரிய
வைக்க கஷ்டப்படுவதை
விட சிரித்துவிட்டு கடந்து
செல்வதே சிறந்தது..!

வாழ்க்கையில் ஆயிரம்
வலிகள் உண்டு அதே
சமயம் வழிகளும் உண்டு
தைரியமாக முதல் படியை
எடுத்து வை..!

உன்னை தாழ்த்துபவர்கள்
முன்பு உயர்ந்து நில்..!
உன்னை உயர்த்துபவர்கள்
முன்பு பணிந்து நில்..!

வாழ்க்கை என்பது நீ
எதிர்பார்ப்பது போல்
இருப்பதில்லை ஆனால்
நீ நினைத்தபடி மாற்ற
முடியும்.. நீ
முயற்சித்தால் மட்டுமே..!

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும்
வழிகள் எப்போதும்
சிறந்ததாகவே இருக்கும்..!

தோல்வியின் அடையாளம்
தயக்கம்..! வெற்றியின்
அடையாளம் துணிச்சல்..!

நெருப்பு தான் தங்கத்தை
உருக்கி அழகாக்கிறது
அதே போல துயரம் தான்
மனிதனை செதுக்கி
உயர்வாக்குகிறது..!

பிறரை வார்த்தையால்
காயப்படுதுவதற்கு முன்
ஒரு நிமிடம் யோசித்து
பாருங்கள் அதே நிலமையை
அவர்கள் திருப்பி தந்தால்
நம்மால் தாங்கிக் கொள்ள
முடியுமா என்று..!

குத்து விளக்கு எவ்வளவு
பிரகாசமா எரிந்தாலும்
அதன் அடியில் எப்போதும்
சிறிது இருள் இருக்க தான்
செய்கிறது..!

காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை..
புரிதலற்ற வார்த்தைகளே
போதும் வலிக்க வலிக்க
நின்று கொல்லும்..!

இழப்பின் வலி
இழந்தவர்களுக்கு மட்டும்
தான் தெரியும்..!

மேலும்

இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.