வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்

Valkai Thathuvangal Ponmoligal

இந்த தொகுப்பு “வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள் (Valkai Thathuvangal Ponmoligal)” உள்ளடக்கியுள்ளது.

  • வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள்
  • வாழ்க்கை பொன்மொழிகள்
  • தமிழ் வாழ்க்கை தத்துவங்கள்
  • Valkai Thathuvangal Ponmoligal

வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள் (Valkai Thathuvangal Ponmoligal)

நாம் எப்போதும் நம்பிக்கையை
தளரவிடாமல்.. மேலும் நல்லதை
செய்ய முயற்சிக்க வேண்டும்..!

திருமண உறவில் தோல்வி
காதலின்மையால் வருவதல்ல..
நட்பின்மையால் வருவது..!

சில சமயங்களில் கண்களுக்கு
தெரியாதது.. இதயத்திற்கு
தெரிகிறது..!

மனசாட்சி உறங்கும்
நேரங்களில் தான் மனக்குரங்கு
ஊர் சுற்றக் கிளம்புகிறது..!

வாழ்க்கையில் ஒரே ஒரு
மகிழ்ச்சி தான் உள்ளது..
அது காதலிப்பதும்
காதலிக்கப்படுவதும் தான்..!

நீங்கள் பெருங்கடலில்
சிறுதுளி அல்ல..
சிறுதுளியில் முழு கடல்..!

பெண்கள் அன்பு செலுத்தப்பட
வேண்டியவர்கள்.. புரிந்து
கொள்ளப்பட வேண்டியவர்கள்
அல்ல..!

கும்பல்களுக்கு இருக்கும்
அளவுக்கு ஒரு தனி நபருக்கு
முட்டாள்தனம் இருக்க முடியாது..
அதனால் தான் வன்முறையின்
போது கும்பல் கொலைகள்
இருக்கின்றதே தவிர தனிநபர்
கொலைகள் இருப்பதில்லை..!

உங்களிடம் காதல் மட்டும் இருந்து
காதலிக்கப்படும் தகுதி
இல்லாதிருந்தால்..
காதல் மிகவும் ஆபத்தானது..!

எதையும் பிரதிபலிக்காமல்
படித்துக் கொண்டே இருப்பது
என்பது.. செரிமானம் இல்லாமல்
சாப்பிட்டுக் கொண்டே
இருப்பதை போன்றது..!

வெற்றிகரமான பொய்யனாக
இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும்
போதுமான அளவு
நினைவாற்றல் இல்லை..!

நேரம் போய்க் கொண்டே தான்
இருக்கும்.. எனவே நீ
செய்ய வேண்டியதை செய்..
அதுவும் இப்போதே செய்..
காத்திருக்காதே..!

நீங்கள் புதிதாக ஒன்றை
முயற்சிக்கும் போது
“நீ ஒரு முட்டாள்” என்ற
வார்த்தையை அதிகம்
எதிர்கொள்ள தயாராகுங்கள்..!

எப்போதும் நீங்கள் நேற்றை
பற்றியே சிந்திப்பீர்கள் என்றால்
உங்களுக்கு நாளை சிறப்பாக
இருக்காது..!

கேள்விகளை கேட்பவன்
ஐந்து நிமிடம் முட்டாள்..
கேள்வியே கேட்காதவன்
வாழ்நாளில் எப்போதுமே
முட்டாளாக இருப்பான்..!

ஒன்று உங்களுக்கு
முக்கியமென்றால்.. தோல்விக்கே
அதிக வாய்ப்பு என தெரிந்தாலும்..
அதை நீங்கள் செய்ய வேண்டும்..!

முயற்சி இல்லாமல்
நம்பிக்கை இல்லை..
நம் நம்பிக்கைகள் மற்றும்
கனவுகளை உணர்ந்து
செயல்படத் தயாராக விட்டால்
நம்பிக்கைக்கு அர்த்தம்
இல்லை..!

உச்சகட்ட போர்க்கலை என்பது..
சண்டையே இல்லாமல் எதிரியை
அடிபணியச் செய்வது ஆகும்..!

மது தான் மனிதனின்
மிக மோசமான எதிரி..!

நாம் காலம் கடத்தும் போது
வாழ்க்கை வேகமாக
பயணிக்கிறது..!

மனிதனின் சிறந்த தியானம்
தூக்கம்..!

நீங்கள் ஒரு முறை மட்டுமே
வாழ்கிறீர்கள் அதை சரியாக
வாழ்ந்தால் செய்தால்..
ஒருமுறை போதும்.!

ஒரு கனவு நனவாகி விட்டால்..
நாம் காண  வேண்டியது
இன்னொரு கனவு..!

 உங்களைப் பற்றிய
பிறரது எண்ணம்
அவர்களின் பிரச்சனை
உங்களுடையது அல்ல..!

வேறு எந்த தகுதியையும் விட
விடாமுயற்சியே வெற்றிக்கு
அவசியம்.. அது அனைத்தையும்
வெல்லும்.. இயற்கையும்
அதற்கு விதிவிலக்கு அல்ல..!

நம்மிடம் உள்ள ஒரே ஒரு
மிகப் பெரிய சொத்து
நமது மனம் மட்டுமே..
அதைச் சரியாக பயிற்றுவித்தால்
அளப்பெரிய செல்வங்களை
அடைய முடியும்..!

மேலும் படியுங்கள்..