சாதனை பொன்மொழிகள்

Sathanai Quotes in Tamil

இந்த தொகுப்பு “சாதனை பொன்மொழிகள் (Sathanai Quotes in Tamil)” உள்ளடக்கியுள்ளது.

  • சாதனை பொன்மொழிகள்
  • தமிழ் பொன்மொழிகள்
  • Sathanai Quotes in Tamil
  • Ponmozhigal in Tamil

சாதனை பொன்மொழிகள் (Sathanai Quotes in Tamil)

செயல்கள் விதியின் விதைகள்..
அவை தான் இலக்குகள் என்ற
விருட்சங்களாக வளர்கின்றன..!

தனியாக நடக்க தயாராக இருங்கள்..
உங்களுடன் தொடங்கும் பலர்
நீங்கள் முடிக்கும் போது
உங்களுடன் இருக்க மாட்டார்கள்.!

நம் திறன்களை திறப்பதற்கான
சாவி தொடர் முயற்சி தானே
தவிர.. வலிமையோ
அறிவு கூர்மையோ அல்ல..!

உங்கள் இலக்குகளை
அதிபயங்கர உயரத்தில்
வையுங்கள்.. தோல்வி
அடைந்தாலும் உங்களின்
தோல்வி மற்றவர்களின்
வெற்றியை விட உயரத்தில்
இருக்கும்..!

போரார்வம் இல்லாமல்
பெரிதாக யாரும் இந்த
உலகில் சாதித்தது இல்லை..!

வெற்றியாளர்கள்
பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல..
அவர்கள் கடினமான
உழைப்பால் வெற்றியை
பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்..!

எப்போதும் வலிமையானவர்கள்
சாதனையாளர்கள் ஆவது
கிடையாது.. தோல்வியிலும்
நம்பிக்கையை இழக்காதவர்களே
சாதனையாளர்கள்..!

வலிமை உடல் பலத்தால்
வருவது இல்லை..
வெல்ல முடியாத
வேட்கையினால் வருவது..!

வெற்றியின் வாசல் தேடி
வந்தவர்கள்.. நிச்சயம்
ஆயிரம் தோல்விகளிடம்
விலாசம் கேட்டு இருப்பார்கள்..!

வெற்றி என்பது புத்திசாலிகள
சொத்தல்ல.. அது முன்னேற
துடிக்கும் உழைப்பாளிக்கும்..
தன்னம்பிக்கைக்குமே
சொந்தம்..!

வெற்றி என்பது திடீரென
நிகழ்வது அல்ல..
வெற்றி என்பது நாம்
கற்றுக்கொண்டது..
பயிற்சி செய்தது மற்றும்
பகிர்ந்து கொண்டது..!

நேற்று வெற்றி பெற்றவர்
இன்றும் வெற்றி பெறலாம்..
ஆனால் நேற்று தோற்றவர்
தினமும் தோற்பதில்லை..!

கடினமான செயலின்
சரியான பெயர்தான் சாதனை..
சாதனையின் தவறான
விளக்கம் தான் கடினம்..!

வெற்றி பெற்ற பின் தன்னை
அடக்கி வைத்துக் கொள்பவன்..
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்..!

வாய்ப்புக்கள் உங்கள்
கதவை தட்டாத போது..
புது கதவை தயாரியுங்கள்..
உங்களது தோல்வியிலிருந்து
நீங்கள் எவ்வளவு கற்றுக்
கொள்கின்கிறீர்களோ..
அந்தளவு உங்கள் வெற்றி
தீர்மானிக்கப்படும்..!

தன்னம்பிக்கை பெற
என்ன வழி என்று ஆராய்வதன்
முதல்படி நமது பயத்தின்
காரணத்தைப் புரிந்து
கொள்ளுவது தான்..!

முடிந்த பிரச்சனைகளுக்காக
வருந்தாமல்.. வரும் காலத்தை
துணிந்து எதிர்கொள்..!

ஒரு காரியத்தில் வெற்றி
தோல்வியை கருதாது
தொடர்ந்து ஈடுபட
மனப்பக்குவமும்
மனஉறுதியும் தேவை..!

தொடங்குவதற்கு
மிகச் சரியான தருணம் என்று
எதுவும் கிடையாது..
இப்பொழுதே தொடங்குங்கள்
செய்யும் போது தான்
கற்றுக் கொள்ள முடியும்..!

தைரியமாக இருங்கள்
ஆபத்துக்களை விட்டு
விலகி ஓடாதீர்கள்.. அவற்றை
எதிர்கொள்ளுங்கள் ஏனெனில்
அனுபவத்துக்கு மாற்று என்று
ஒன்று இல்லவே இல்லை..!

தினமும் ஒரு சதவீதம்
உங்களை மேம்படுத்தினால் போதும்..
சிந்தியுங்கள் 100 நாட்களில்
முழுமையாய் மேம்பட்டவர்
ஆகிவிடுவீர்கள்..!

துணிவுமிக்கவர்களின்
அருகிலேயே எப்போதும்
அதிஷ்டம் நிற்கிறது..!

திறமை உப்பை விட மலிவானது..
ஆனால் திறமையானவர்களிடம்
இருந்து வெற்றியாளர்களை
பிரிப்பது கடின உழைப்பு மட்டுமே..!

மேலும் பதிவுகளை படியுங்கள்…