உண்மை பற்றிய பொன்மொழிகள்

Truth Quotes In Tamil

இந்த பதிவில் “உண்மை பற்றிய பொன்மொழிகள் (Truth Quotes In Tamil)” பார்க்கலாம்.

  • உண்மை பற்றிய பொன்மொழிகள்
  • Truth Quotes In Tamil

உண்மை பற்றிய பொன்மொழிகள்

  • கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும்.
  • பணம் இருக்கும் போது கிடைக்கும் உறவு, பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும் முற்றிலும் போலியானது.. இந்த உண்மையை பணமும் வேலையும் இல்லாதபோது உணர்ந்து கொள்வாய்.!
  • யார் எப்படி இருந்த போதும் நீங்கள் நேர்மையாக இருங்கள் அது தரும் பரிசே உண்மையான கம்பீரம்.
  • காலம் தவறிய உண்மை பொய்யை போல தீயது.
  • எந்த நிலையிலும் உண்மை பேசுங்கள். இனிமையும், எளிமையும் பேச்சில் நிறைந்திருக்கட்டும்.
  • எந்த நிலையிலும் உண்மை பேசத் தயங்காதீர்கள். பிறரிடம் நட்புணர்வுடன் முகம் மலர்ந்து பேசுங்கள்.
  • போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.
  • தேவைப்பட்டால் உண்மையை மட்டும் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
  • உண்மை எங்கு இருக்கிறதோ, அங்கு எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும்.
  • எந்நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதிலும் இனிமை கலந்திருக்கட்டும்.
  • பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை. பலவீனமான எண்ணங்களே நம் உண்மையான எதிரிகள்.
  • நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும் மிகவும் அவசியமானவை.
  • எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் உண்மையும், செயலில் நேர்மையும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை.
  • உண்மையில் சிக்கல் என்பது நமக்குள் உள்ளது. ஆனால், சுற்றுப்புறத்தில் இருப்பதாக நாம் எண்ணுகிறோம்.
  • நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் மிகவும் அவசியமாகும்.
  • உண்மையை பேசுங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். அனைவர்மீதும் அன்புக்கரம் நீட்டுங்கள்.
  • பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் பிரதிபலிக்கட்டும்.
  • யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.
  • நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள். நேர்மை நெஞ்சினராக வாழுங்கள்.
  • உண்மையாய் இருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அனுபவத்தை திரித்தோ, மாற்றியோ பொய் சொல்லாதீர்கள்.
  • எப்போதும் நீ சொல்லுவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்பவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது என்பது அறிவுடமை ஆகாது. நீ பேசும் போது எப்போதும் உண்மையே பேச வேண்டும். ஆனால் சில சமயங்களில் பேசாமல் இருப்பது தான் நல்லது.

Read More Tamil Quotes.

ஒரு வரி பொன்மொழிகள்

Motivational Quotes In Tamil