Thathuvangal: நான்கு வரி தத்துவங்கள்

Thathuvangal In Tamil

இந்த பதிவிலுள்ள “Thathuvangal: நான்கு வரி தத்துவங்கள்” உங்கள் மனதில் நல்ல எண்ணங்களையும் தன்னம்பிக்கையும் விதைக்க உதவும்.

  • Thathuvangal: நான்கு வரி தத்துவங்கள்
  • Thathuvangal In Tamil

நான்கு வரி தத்துவங்கள்

1. துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்.

2. தீயவர்களிடமும் நல்லது இருக்கிறது. ஒழுக்க சீலரிடமும் தவறு இருக்கிறது. இதில் வியப்பதற்கோ, திகைப்பதற்கோ ஏதுமில்லை.

3. அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற முடியும். அவை தனித்தனியே இருந்தால் உலகைக் காப்பாற்ற முடியாது.

4. புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடுவதில்லை.

5. மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம் தான். அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை.

6. உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை, எல்லாமே அழகானதுதான். அதைப்பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.

7. குணம், பொறுப்பு, திடநம்பிக்கை, மரியாதை, தைரியம் இருந்தால் போதும், படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும்.

8. வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் சாதாரண வேலையைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர்.

9. வெற்றியும், சந்தோஷமும் ஒன்றாக இணைந்தே இருக்கும். நீங்கள் விரும்புவதை அடைவது வெற்றியாகும். நீங்கள் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும்.

10. கற்பது என்பது உணவு உண்பது போன்றது. நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. நீங்கள் எவ்வளவு ஜீரணிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

11. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும்.

12. முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள். அதன்பின் பொதுசேவையில் ஈடுபடுங்கள்.

13. பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

14. துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.

15. பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.

16. இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.

17. துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.

18. வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.

19. போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மை உலகிற்கு தெரியவரும்.

20. எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.

21. உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.

22. உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.

23. இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும்.

Read More Tamil Quotes.

ஒரு வரி பொன்மொழிகள்

விடுகதைகள் மற்றும் விடைகள்