மகிழ்ச்சி கவிதைகள் வரிகள்

Magizhchi Kavithaigal in Tamil

இந்த தொகுப்பு “மகிழ்ச்சி கவிதைகள் வரிகள் (Magizhchi Kavithaigal in Tamil)” உள்ளடக்கியுள்ளது.

  • மகிழ்ச்சி கவிதைகள் வரிகள்
  • மகிழ்ச்சி கவிதை வரிகள்
  • Magizhchi Kavithaigal in Tamil

மகிழ்ச்சி கவிதைகள் வரிகள் (Magizhchi Kavithaigal in Tamil)

என் மகிழ்ச்சியை பார்த்து
என்னை தீர்மானித்து விடாதீர்கள்..
உங்களால் நினைத்துக் கூட
பார்க்க முடியாத சோகங்கள்
எனக்கும் உண்டு..!

எல்லோரையும் மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்ள நினைப்பவர்கள்..
எப்போதும் மகிழ்ச்சியாக
இருப்பதில்லை.. “மகிழ் வித்து மகிழ்”
என்பது இங்கே
பொய்யாய்ப் போகிறது..!

உன்னுடைய உழைப்பும்
சொற்களும் உனக்கும் பிறருக்கும்
பயன் உள்ளதாக இருந்தால்..
மகிழ்ச்சி தானாக வரும்..!

மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக
மனிதன் தவறாக எண்ணுகிறான்..
அது அவன் மனதில்
தான் இருக்கிறது..!

நேற்று நடந்தவற்றை உங்களால்
மாற்ற முடியாது.. நாளை
நடப்பதை தடுக்க முடியாது..
இன்றைய பொழுதில்..
இக்கணத்தில் மகிழ்ச்சியாக
வாழுங்கள்.. அது தான்
எல்லா துன்பங்களுக்கும்
ஒரே தீர்வு..!

உன்னை யாரும் புகழும்
போது மகிழ்ச்சி அடையாதே..
அதேபோல.. உன்னை
இகழும் போது கவலையும்
கொள்ளாதே.. புகழையும்..
இகழையும்.. சமாக கருதுபவரே
மன அமைதியுடன்
வாழ முடியும்..!

நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி
என்பது இடங்களை பொறுத்து
அமைவது இல்லை.. நம்மோடு
பயணிக்கும் மனிதர்களை
பொறுத்தே அமைகிறது..!

மண் குடிசையில் வாழ்ந்தாலும்
மனதிற்கு மகிழ்ச்சியாக
தான் இருக்கும்.. மனதிற்கு
பிடித்தவருடன் வாழ்ந்தால்..!

உன் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம்
தேடாதே.. அது உனக்கு தனிமையை
மட்டுமே தரும்.. உன் மகிழ்ச்சியை
உனக்குள் தேடு மகிழ்ச்சியாய் இரு..!

எதிர்பார்த்த போது கிடைக்காத
எதுவும்.. அதன் பிறகு எத்தனை
முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியை
கொடுப்பதில்லை..!

மகிழ்ச்சி இருக்கும் இடத்தில்
வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில்
மகிழ்ச்சியை உண்டாக்கு
உன் வாழ்க்கையில்
நிறைவு இருக்கும்.!

உண்மையான மகிழ்ச்சி என்பது..
நம் மகிழ்ச்சி யாரையும்
கவலையடைய
செய்யாதிருப்பதாகும்.!

என்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்
இருப்பதை விட என்னையும்..
என் உணர்வுகளையும்..
மதிக்கிற ஒரு உறவு இருந்தாலே
போதும் நான் மகிழ்ச்சியாக
வாழ்வேன்..!

மகிழ்ச்சியில் கை குலுக்க
மறந்தாலும் சோகத்தில்
கண் துடைக்க வரும்
கரங்கள் தான்
உண்மையான உறவுகள்..!

உயிர் இருக்கும் வரை
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்..
என்பதை விட.. நிம்மதியாக
வாழ வேண்டும் என்பது
தான் முக்கியம்..!

உன் பிரிவால் நீ அதிகம்
நேசித்த ஒருவரின்
வாழ்க்கையில் மகிழ்ச்சி
கிடைக்குமானால் அவரை
விட்டு பிரிந்து செல்வதில்
தவறில்லை..!

வெறுப்பை துன்பத்திடம்
காட்டுங்கள் மகிழ்ச்சி
தானாக வரும்..!

காதலித்து திருமணம்
செய்வது பெரிதல்ல..
அவளை அவள் வீட்டில்
இருந்ததை விட மகிழ்ச்சியாக
வைத்திருப்பதே பெரிது..
அதுவே காதலின் வெற்றி..!

இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க..