தாய்மொழி பற்றிய கட்டுரை

Thai Mozhi Katturai In Tamil

இந்த பதிவில் “தாய்மொழி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

உலகில் பல மொழிகள் இருந்தாலும் ஒருவருக்கு அவரின் தாய்மொழி என்பது பின்னிப்பிணைந்த ஒன்றாகும். மற்றைய மொழிகளை காட்டிலும் தாய்மொழி மீதான பற்று அனைவருக்கும் அதிகமாகவே இருக்கும்.

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்
பாரதியார் தமிழ் பற்று

தாய்மொழி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உலகத் தாய்மொழி தினம்
  3. தாய்மொழியின் முக்கியத்துவம்
  4. தாய் மொழிக் கல்வியின் அவசியம்
  5. தாய்மொழிப் பற்று
  6. முடிவுரை

முன்னுரை

மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியும் நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும். பேச்சை போல் அதில் உள்நுழைந்து வாழ்வின் வழியை நமக்குக் காட்டும் தாய்மொழி அதைவிட முக்கியம். மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும்.

உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழி என் தாய்மொழி என்று கூறும் போது அதன் பெருமைக்கு அளவே இல்லை எனலாம். தொன்மை⸴ இனிமை⸴ எளிமை போன்ற பல சிறப்புகளைக் கொண்ட நம் தமிழ் மொழியான தாய்மொழி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உலகத் தாய்மொழி தினம்

உலக அளவில் ஆண்டுதோறும் பல்வேறு விடயங்களை நினைவு கூறும் வகையில் பல தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த தினத்தை கொண்டாடுவதன் நோக்கத்தின் மேன்மையும் வெளிப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் மனிதகுலத்தின் மூச்சாக விளங்குவது தாய்மொழி ஆகும். இத்தகைய தாய் மொழிக்கு ஒரு தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று சர்வதேச தாய்மொழி தினம் நினைவு கூறப்படுகின்றது.

தாய்மொழியின் முக்கியத்துவம்

எழுத்தறிவிற்கு தாய்மொழி மிகவும் முக்கியமானதாகும். தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் அதிகமாக எழுத்தறிவு உள்ளவர்களாக உள்ளனர். மனிதன் தனது தாய் மொழியை முதலில் கற்றுக் கொள்கின்றான்.

பிறருடன் பேசிப் பழகவும் தனது உணர்வுகளை மொழியின் மூலம் விவரிக்கவும் தாய்மொழி மிகவும் அவசியமாகும். மனிதனது சிந்தனை ஆற்றலுக்கு முதலில் துணை நிற்பது தாய் மொழியாகும்.

நாகரீக வளர்ச்சிக்கும் தனது பண்பாடு கலாச்சார மரபுகளை அறிந்துகொண்டு அதன்படி ஒழுக தாய்மொழி முக்கியமாகத் திகழ்கின்றது.

தாய்மொழிக் கல்வியின் அவசியம்

தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆக்கபூர்வமான சிந்தனைகளை குழந்தைகள் மத்தியில் கொண்டு வரலாம். சிந்தனை அவனது தாய்மொழியிலேயே தொடங்குகின்றது அந்த வகையில் சிந்தனைக்கு தாய்மொழியே தேவைப்படுகின்றது எனவே தாய்மொழிக்கல்வி மிக அவசியமாகும்.

தாய்மொழிப் பற்று

உலகில் எத்தனையோ மொழிகள் காணப்படினும் அது தாய்மொழிக்கு ஈடில்லை. தாய்மொழி மீது கொண்ட அளவு கடந்த அன்பே தாய்மொழிப்பற்று ஆகும். தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அந்த உணர்வைத் தரும்.

தாய்மொழி மீதான பற்று அனைவரிடத்திலும் காணப்பட வேண்டும். அந்த வகையில் எமது தமிழ் மொழியின் மீது நாம் மட்டுமல்ல⸴ சான்றோரும் பற்றுக்கொண்டு நமது தாய்மொழியின் சிறப்பை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களுள் திருவள்ளுவர்⸴ ஒளவையார்⸴ கம்பர்⸴ சேக்கிழார்⸴ பாரதியார்⸴ பாரதிதாசன் போன்ற சான்றோர்களை குறிப்பிடலாம்.

முடிவுரை

அறமொழி⸴ பக்தி மொழி⸴ செம்மொழி⸴ அறிவியல் மொழி⸴ முத்தமிழ் மொழி என்று எத்தனையோ புகழ் மொழியாக அழைக்கப்படும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை போற்றுவது நமது கடமையாகும்.

தாய் மொழியை வளப்படுத்தும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்ந்து தாய் மொழியைக் காப்போம்.

You May Also Like :

தாய்மொழி பற்றி கட்டுரை
தமிழ் மொழியின் தனித்தன்மை