நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை

நான் மருத்துவர் ஆனால் கட்டுரை

இந்த பதிவில் “நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு காணப்படுகின்றன.

அனைத்து மக்களுக்கும் சிறந்த மருத்துவத்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும்.

நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை – 1

இந்த மனித வாழ்க்கை என்பது குறுகியது அதற்குள் விபத்துக்கள், நோய்கள் என்று மனிதர்களது வாழ்வு எவ்வளவு வேதனைகள் நிரம்பியது. நான் ஒரு வைத்தியரானால் என்னை நோக்கி வருகின்ற மக்களை நலமடைய செய்து ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ வைப்பேன்.

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் அவர்களது இயல்பு வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதனை நான் நன்கறிவேன். எனவே நான் அவர்களது நோய்களை குணப்படுத்த முழுமனதுடன் சேவை செய்வேன்.

தினம் தினம் பல நோய்களோடு தமது உயிருக்காக போராடுகின்ற மனிதர்களை குணப்படுத்த நான் எனது வாழ்நாளை அர்ப்பணிக்க ஆசைப்படுகின்றேன்.

உயிர்காக்கின்ற இந்த மருத்துவ துறையில் இருப்பதனை நான் எப்போதும் மிகவும் பெருமையாக கருதுகின்றேன். என்னால் முடிந்த வரை ஒரு சிறந்த வைத்தியாக எனது கடமையை நான் செய்வேன்.

துன்பத்தினால் துவள்கின்ற மக்களுக்கு சேவை செய்து அவர்களது வாழ்வை மீட்டு கொடுப்பதனை விடவும் ஒரு வைத்தியனுக்கு என்ன பெருமை இருந்து விடப்போகின்றது. என்னை நாடி வரும் மக்களை எந்த உயர்வு தாழ்வுகள் இன்றி அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இவ்வாறு நான் சேவையாற்றுவதன் மூலமாக இங்கே வீணாக இழக்கப்படுகின்ற பல உயிர்களை என்னால் காப்பாற்ற முடியும் அத்துடன் பல குடும்பங்களின் கண்ணீரை என்னால் தடுத்து விட முடியும் என நான் நம்புகின்றேன்.

ஒரு நோய் என்று வருகின்ற போது அவர்கள் உடனடியாக என்னிடம் நம்பிக்கையுடன் வரும்படியான சிறந்த வைத்தியனாக இருப்பேன்.

நான் மருத்துவர் ஆனால் கட்டுரை – 2

எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் அது போல எனக்கும் ஒரு கனவு இருக்கின்றது. ஒரு சிறந்த மருத்தவராக வந்து இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதாகும்.

இன்று வசதி படைத்த மக்கள் மிகவும் வசதியாக வாழ்கின்றார்கள். ஆனால் ஏழை மக்களோ மிகவும் இன்னல்கள் நிறைந்த வாழ்வை வாழ்கின்றனர். வசதி படைத்தவர்கள் மாத்திரமே சிறந்த மருத்துவ சேவைகளினை தனியார் வைத்தியசாலைகள் மூலமாக பெறுவதனை நான் அவதானித்திருக்கின்றேன்.

ஆனால் ஏழை மக்களின் வசதி இன்மையால் காப்பாற்றப்பட வேண்டிய பல உயிர்கள் இழக்கப்படுவதனை கண்டு நான் வேதனையடைந்திருக்கின்றேன். மருத்துவம் என்ற உயரிய சேவை வியாபாரமாக மாறி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

இதனை விடுத்து ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவ சேவையினை இலவசமாக வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

உலகத்தில் எத்தனையோ மருத்துவ வசதிகள் குறைவான மக்கள் வாழும் நாடுகள் உள்ளன. அந்த நாடுகளுக்கு சென்று எனது மருத்துவ சேவையினை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

மக்களால் கடவுளின் மறு உருவமாக பார்க்கப்படும் வைத்திய சேவைக்கு என்னால் முடிந்த சேவைகளினை செய்து பெருமை சேர்ப்பேன்.

நான் மக்களுக்கு நோய்களுக்கு வைத்தியம் செய்வதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு நோய் வராமல் தடுக்க எவ்வாறான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்கி மக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்க முயற்சிப்பேன்.

அனைத்து மக்களுக்கும் சிறந்த மருத்துவத்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்ற எனது கனவை அடைய தொடர்ந்து போராடுவேன்.

You May Also Like:

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை