நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை

Naan Oru Vignani Aanal Katturai

இந்த பதிவில் “நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு காணப்படுகின்றன.

நான் ஒரு விஞ்ஞானியானால் என்னால் முடிந்த சேவையை இந்த உலகத்துக்கு சிறப்பாக வழங்குவேன்.

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை – 1

இந்த உலகம் இன்று பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. பெரும் வளர்ச்சி கண்டிருக்கின்றது இதற்கெல்லாம் காரணம் யாது? என வினாவினால் விஞ்ஞானத்தினுடைய அபரிமிதமான வளர்ச்சி தான் காரணம் என்று கூறலாம்.

இதனால் தான் நானும் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற ஆசை கொள்கின்றேன். நான் விஞ்ஞானியானால் இந்த சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்காத பல புதிய கண்டுபிடிப்புக்களை நான் செய்வேன்.

இன்று பல நவீன கண்டுபிடிப்புக்கள் பல நன்மைகளை தருகின்றதென மனிதன் நம்புகின்றான். ஆனால் அது மனிதனுக்கு மறைமுகமாக பல தீமைகளை தந்து கொண்டிருப்பதை மனிதர்கள் உணரவில்லை ஆனால் காலபோக்கில் நிச்சயமாக உணர்வார்கள்.

இயற்கையினை மறந்து விட்டு பல பல கண்டுபிடிப்புக்களை செய்வதனால் மனிதர்களுக்கு தீமை தான் விளையும். சூழல் மற்றும் நமது பூமி மிகவும் மோசமாக பாதிக்கப்பட மனிதர்களுடைய நடவடிக்கைகளே காரணமாக உள்ளன.

இவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இயற்கையை பாதுகாக்க பல கண்டுபிடிப்புக்களை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

இந்த சூழலை அழகில்லாமலாக்கும் கழிவுகளான நெகிழிகள், இலத்திரனியல் நச்சு பதார்த்தங்கள் போன்றவற்றை பூமிக்கு பாதிப்பில்லாமல் வெளியேற்றும் இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டும். எரிபொருள் செலவில்லாமல் இயங்கும் வாகனங்களை உருவாக்க வேண்டும்.

நான் ஒரு விஞ்ஞானியானால் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் பெரும் புகழ் அடையவேண்டும் என்பதற்காக தவறான கண்டுபிடிப்புக்களை செய்ய போவதில்லை. இந்த இயற்கையும் இந்த மக்களும் அதே உறவோடு வாழ்வதற்காக கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என விரும்புகின்றேன்.

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை – 2

இன்று எமது உலகம் எவ்வளவு தூரம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் இன்னும் கூட பல நாடுகளில் பல மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுக்கு காரணம் யாது? அங்குள்ள பொருளாதாரம், மருத்துவம், வசதிவாய்ப்புகள் குறைவாக உள்ளமை தான்.

மனிதர்களை அழிக்கின்ற ஆபத்தான ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக மக்களது பசியினை போக்க நல்ல உணவை அதிகளவில் உற்பத்தி செய்ய கூடிய பயிர்ச்செய்கைக்கு உதவும் கண்டுபிடிப்புக்களை நான் செய்ய விரும்புகின்றேன்.

வேற்று கிரகங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றதனை விடுத்து எமது பூமியை முதலில் பாதுகாக்கவும் அதன் சூழல் சமநிலையை பேணுவதற்கும் தேவையான ஆய்வுகளை நான் செய்வேன்.

இங்கே அழிந்து போகின்ற பறவைகள், உயிரினங்கள், தாவரங்கள் போன்ற அருகி செல்லும் இனங்களை காக்க பெரிய முயற்சியில் ஈடுபடவேண்டும்.

மருந்து கண்டு பிடிக்கப்படாத பல நோய்களால் பல மனிதர்கள் எமது கண்முன்னே இறந்து போவதனை நாம் பார்க்கின்றோம்.

எவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் இன்று இந்த கொரோனா வைரஸ்ல் இருந்து இந்த உலகத்தால் முழுமையாக விடுபட முடியவில்லை. நான் ஒரு விஞ்ஞானியானால் இதற்கு ஒரு தீர்வினை கண்டு பிடிப்பேன்.

அதன் பின்னாவது எமது உலகம் வழமைக்கு திரும்பும் என நம்புகின்றேன். எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் சில மனிதர்களுக்கு எமது பூமி எதிர்கொள்ளும் பேராபத்து நிலை விளங்குவதேயில்லை. அவ்வாறு இயற்கையினை நாசமடைய செய்யும் மனிதர்களுக்கு உரிய கல்வி அறிவினை வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

இவ்வாறு நான் ஒரு விஞ்ஞானியானால் என்னால் முடிந்த சேவையை இந்த உலகத்துக்கு வழங்குவேன்.

You May Also Like:

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை

நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை