எனது பாடசாலை அழகானது கட்டுரை

Enathu Padasalai Alaganathu Katturai

இந்த பதிவில் “எனது பாடசாலை அழகானது கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

பாடசாலைகள் தான் மாணவர்களுடைய வாழ்வையும் அழகாக மாற்றி வாழ்வில் உயர்ந்த இடங்களை நோக்கி கொண்டு செல்லப்போகின்றது

எனது பாடசாலை அழகானது கட்டுரை – 1

மறக்க முடியாத நண்பர்கள் அழியாத நினைவுகள் என அனைத்தையும் தந்தது எனது பாடசாலை தான். என்னுடைய பாடசாலை மிகவும் அழகானது. அதனுடைய சூழல் கல்வி கற்க செல்கின்ற எங்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்தது.

அங்கே அழகிய மரங்களின் நிழல் எம்மை மகிழ்விக்கின்றன. அதன் கீழ் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடுவோம். நாங்கள் விளையாட அழகிய மைதானம் அமைந்திருக்கின்றது. அது பச்சை பசேலென்ற அழகான மைதானம் ஆகும்.

அழகான முறையில் கட்டங்கள் வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றன. அங்கே தான் எமது வகுப்பறை காணப்படுகின்றது. எமது வகுப்பறைகள் தூய்மையாகவும் அழகாகவும் காட்சி தரும். காலையில் பாடசாலைக்கு சென்று அங்கே அமருகின்ற போது அந்த மகிழ்ச்சியை எம்மால் உணர முடியும்.

பின்பு நாங்கள் ஓய்வு நேரங்களில் சென்று பார்க்க அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் அங்கே சென்று நண்பர்களோடு உரையாடுவோம்.

மற்றும் காலை பிரார்த்தனை செய்வதற்கெனவே அழகான வழிபாட்டு மண்டபம் மற்றும் ஒரு ஆலயம் எமது பாடசாலை வளாகத்தினுள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் நாம் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்கவென அழகான ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

விஞ்ஞான ஆய்வு கூடம், தகவல் தொழில்நுட்பகூடம் என எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு அழகான பாடசாலையாக எனது பாடசாலை விளங்குகிறது.

எனது பாடசாலைக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் அழகான மரங்கள் நேராக நடப்பட்டிருப்பதனை பார்க்க மிகவும் அழகாய் இருக்கும் இவ்வாறு எனது பாடசாலையினுடைய அழகை சொல்லி கொண்டே செல்லலாம் அது நீண்டு கொண்டே இருக்கும்.

எனது பாடசாலை அழகானது கட்டுரை – 2

பாடசாலை வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் பொக்கிசம் போன்றதாகும். அந்த வகையில் எனது பாடசாலை எனக்கு பெரிய வரமாகும். அதுமட்டுமின்றி எனது பாடசாலை மிகவும் அழகானதாகும்.

எனது அழகிய பாடசாலை வாசலை தாண்டி உள்ளே செல்லும் போது இரு பக்கத்திலும் பூக்கள் நிறைந்த மரங்கள், வெள்ளை நிறம் பூசப்பட்ட நீண்ட கட்டங்கள், ஓடி ஓடி விளையாட மைதானங்கள், ஓய்வெடுக்க மரநிழல் இருக்கைகள், தாகத்தோடு ஓடி சென்று தண்ணீர் குடிக்க நீர் குழாய்கள் என்பன அழகிற்கு மேலும் மெருகேற்றுகின்றன.

இடைவேளை நேரத்து விளையாட்டுக்கள், வெண்கட்டிகள் படிந்த கரும்பலகைகள், சொந்தம் கொண்டாடிய கதிரை மேசைகள், சிறப்பாய் கொண்டாடிய வெள்ளி கிழமை பூசைகள், தவறு செய்து வாங்கிய அடிகள் என்று வீட்டை மறந்து மகிழ்ச்சியாக நான் வாழும் இடம் எனது பாடசாலை தான்.

அங்கு இயற்கையின் அழகு போலவே கற்பிக்கும் ஆசிரியர்களும் அழகாககவே தெரிவார்கள் எம் மீது அன்பாகவும் அக்கறையாகவும் கண்டிப்பாகவும் இருப்பார்கள். அது போலவே என்னோடு படிக்கும் சக நண்பர்களும் கள்ளம் கபடம் இன்றி அன்பாக பழகுவார்கள்,

இதனையெல்லாம் எனக்கு தந்த எனது பாடசாலையினை விட அழகான இடம் வேறு எங்கு இருக்க போகின்றது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் அதன் அழகு மென்மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த அழகான பாடசாலை தான் என்னை போன்ற பல மாணவர்களுடைய வாழ்வையும் அழகாக மாற்றி வாழ்வில் உயர்ந்த இடங்களை நோக்கி கொண்டு செல்லப்போகின்றது என்றால் மிகையல்ல.

You May Also Like:

எங்கள் ஊர் கட்டுரை

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை