மரண கவிதைகள்: மரணம் கவிதை வரிகள்

இந்த பதிவில் “மரண கவிதைகள்: மரணம் கவிதை வரிகள்” தொகுப்பை பார்க்கலாம். மரணம் என்பது இறந்தால் மட்டும் தான் அல்ல.

அது வாழும் போதே சில வலிகள் மூலம் அதன் மரணத்தை உணர்த்தி விடும். இந்த மரண கவிதைகள் மூலம் அதன் வலியை பார்க்கலாம்.

மரண கவிதைகள்: மரணம் கவிதை வரிகள்

மரணம் என்பது அனைவருக்கும்
வரும் அதுவும் ஒரு நாள் மட்டும்
தான் வரும் ஆனால் ஒரு சிலருக்கு
மட்டும் தான் தினம் தினம்
வருகின்றது ஒரு
சில உறவுகளால்.

மரணம் கூட ஒரு சில
நொடிகளில் கொன்று
விடும் ஆனால் ஒரு சில
நினைவுகள் என்னை
ஒவ்வொரு நொடியும்
கொல்கிறது.

உன் மரண தருணத்தில்
கூட உன் எதிரியின்
முன்பும் துரோகியின்
முன்பும் அழாதே
அவர்களுக்கு தேவை
உன் மரணம் அல்ல
உன் அழுகை தான்.

சில நினைவுகளையும்
சில உறவுகளையும் மறக்க
மருந்து தேடுகிறேன்
இறுதியில் மரணமே
விடையாக வருகின்றது.

சிலர் மீது நான் கொண்ட
பாசமும் அன்பும் என்
மரணம் வரை
பிரிக்க முடியாது.

உண்மையாக பாசமும்
அன்பும் வைக்கும்
சிலருக்கு மரண வலி
மட்டுமே பரிசாக
கிடைக்கின்றது.

காயப்பட்டது உடல்
என்றால் மருந்து
கொண்டு தீர்க்க
முடியும் காயப்பட்டது
மனம் என்றால் அதை
ஆற்ற இயலாது சில
வலிகள் மரண வலியை
விட கொடுமையாக
இருக்கும்.

உன் மரணம் வரை
நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டியது.
எதுக்காகவும் யாருக்காகவும்
உன் தாய் தந்தையை எந்த
சூழ்நிலையிலும் விட்டுக்
கொடுக்காதே..!

மரணம் என்றால் நான்
பயந்து விடுகிறேன்
நான் இறந்து விடுவேன்
என்பதற்காக அல்ல சில
உறவுகளை பிரிந்து
விடுவேன் என்பதற்காக..!

மரணம் இல்லாமல்
வாழ ஆசை தான் இந்த
உலகில் அல்ல சில
உறவுகளுடன்..!

இதுவும் மறந்து போகும்
என்று தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் ஆனால்
சில காயங்களும்
நினைவுகளையும் மறப்பதற்கு
மரணம் எனும் படுக்கையில்
ஏறினால் தான் முடியும் போல..!

நாம் வெறுத்து ஒதுக்குபவர்கள்
நம் மீது உயிரே வைத்திருக்கார்கள்
என்று பின் நாட்களில்
தெரிய வரும் போது அது
மரண வலியை விட பெரிய
வலிகளை தரக் கூடியது.

என் மனதிற்குள் இருக்கும்
நான் உன் மேல் கொண்ட
நேசம் என் மரணம் வரை
உன்னுடன் பேசும்.

ஒரு உயிருக்கு ஒரு முறை
மட்டும் தான் மரணம்
ஆனால் அந்த உயிரை
நேசித்தவர்களுக்கு
தினம் தினம் மரணம்.

அன்பு ஏமாற்றம் கவிதை இங்கே படியுங்கள்