கெத்து ஸ்டேட்டஸ் தமிழ் – Geththu Status

Geththu Status Tamil

இந்த “கெத்து ஸ்டேட்டஸ் தமிழ் – Geththu Status” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • Geththu Status Tamil
  • கெத்து ஸ்டேட்டஸ் தமிழ் – Geththu Status
  • Geththu Quotes in Tamil

கெத்து ஸ்டேட்டஸ் தமிழ் – Geththu Status

உன்னை பற்றி முழுமையாக
உனக்கு மட்டுமே தெரியும்
உன் காதில் விழும் கருத்துக்களை
எல்லாம் கவலை கொள்ளாதே..!

கர்வம் தலைக்கேறிய
அறிவாளியாக இருப்பதை விட..
அன்பான முட்டாளாக
இருப்பதே மேலானது..!

வாழ்க்கை என்பது
நடிப்பு கூடாரம் அதில்
தடுமாறும் முட்டாள் நான்..!

எதார்த்தமாக இருந்து விடு
ஏமாற்றங்களை தாங்கும் சக்தி
அதிகமாக கிடைக்கும்..!

விழுந்து விழுந்து சிரியுங்கள்
ஆனால் விழுந்தவனை
பார்த்து சிரிக்காதீர்கள்..!

குத்திக்காட்டும் மனிதர்களுக்கும்
சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும்
இடையில் சிரித்துக் கொண்டு
வாழ்வது தான் சவாலான
வாழ்க்கை..!

எவன் ஒருவன் வாழ்வின்
கஷ்டங்களையும் துன்பங்களையும்
சகித்துக்கொண்டு நகைச்சுவை
உணர்வுடன் வாழ்கிறானோ
அவனே மகிழ்ச்சியான மனிதன்..!

போலியான பேச்சின் மூலம்
நல்லவன் என்ற பெயரை
பெறுவதை விட..
வெளிப்படையான பேச்சின்
மூலம் கெட்டவன் என்ற பெயரை
பெறுவது எனக்கு பெருமை தான்..!

தேவைப்படும் போது மட்டுமே
வந்து பேசுபவர்களின் தேவையை
நாம் பூர்த்தி செய்ய வேண்டும்
என்பது எந்த விதத்திலும்
அவசியம் இல்லை..!

நான் நல்லவன் தான் நீங்கள்
நல்லவர்களாய் இருந்தால்
மட்டுமே..!

கவலைகள் வந்து கொண்டு
தான் இருக்கும்.. ஆனால்
அதற்கு நாற்காலி போட்டு
உட்கார வைக்க கூடாது..!

உன்னை நிராகரித்தவர்களை
உன்னுடன் பேச காத்திருக்கும்
நிலையை உருவாக்கு.. அதுவும்
ஒரு வகை வெற்றி தான்..!

பயன்படுத்தாத திறமை அதன்
ஆற்றலை இழந்து கொண்டே
இருக்கும்..!

எந்த அளவிற்கு சம்பாதித்து
வைத்திருக்கின்றோம் என்பது
பெருமை அல்ல.. உன்
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னோடு இருக்க எத்தனை
பேரை சம்பாதித்து
வைத்திருக்கிறாயோ அதுவே
உன் வாழ்வின் சிறப்பு..!

பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காக
தன்னை கோமாளியாக
மாற்றிக் கொள்பவனும்
இவ்வுலகின் நாயகனே..!

நடந்ததை எண்ணி
அழுது கொண்டிருப்பது
வாழ்க்கை அல்ல.. அதை
மறந்து நம்மை அழ வைத்தவர்கள்
முன்னால் சிரித்த முகத்துடன்
வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை..!

உன்னை கவலைப்படுத்தும்
அளவுக்கு ஒருவனுக்கு துணிச்சல்
இருந்தால் அதையும் தாண்டி
மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு
உன்னிடம் தைரியம்
இருக்க வேண்டும்..!

நீ ஏழையாக இருந்தாலும் மனதில்
பணக்காரனாக இரு..
பணக்காரனாக ஆன பின்னும்
நடத்தையில் ஏழையாக இரு..!

நான் ஏமாளியாக இருப்பது
எனக்கு அவமானமில்லை..
நான் ஏமாற்றப்பட்டாலும்
பிறரை ஏமாற்றாமல் இருப்பதே
எனக்கு பெருமை..!

நம்மை காணமுன்னு தேட
பலர் இருந்தாலும்..
நாம தொலைஞ்சா சந்தோஷமுன்னு
நினைக்கிற சிலர் இருப்பதால் தான்
வாழ்க்கை சுவாரசியமாக இருக்கு..!

சிரித்துக்கொண்டே இரு உன்
துயரங்கள் உன்னை அழவைக்க
முடியாமல் உன்னிடம்
தோற்றுப்போய் ஓடும் வரை..!

உலகம் உனக்கானது..
ஓடிக்கொண்டே இரு.. உன்னை
தடுக்கும் தகுதி எவனுக்கும்
இல்லை.. உன்னை வெறுக்கும்
தகுதியும் எவனுக்கும் இல்லை..!

மேலும் பதிவுகளை படியுங்கள்..