வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

வாழ்க்கை தத்துவம் கவிதை

இந்த தொகுப்பு வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் பற்றியது. இந்த தத்துவங்கள் வாழ்க்கைக்கு தேவையான சிறந்த வரிகளாக இருக்கும்.

  • வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
  • சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை
  • Valkai Thathuvam Kavithaigal

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.

மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!

வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!

முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!

இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!

யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!

வாய்ப்பு என்பது
பறித்துக் கொள்வதில்லை,
திறமையால் நாம்
தேடிக்கொள்வது..!
திறமையில் கவனம்
செலுத்து வாய்ப்பு
உன்னைத் தேடி வரும்..!

கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!

எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!

உன் தவறை நீ
உணர்ந்து கொண்டு..
நீ அமைதியாகும் போது
தாழ்வதில்லை..
உயருகிறாய்..!

பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!

என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!

நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!

தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!

ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!

கண்ணீரின் மொழி அழுத
கண்களை உடையவனும்
மட்டுமே தெளிவாக
புரியும்..!

நீ தேவைப்படும் போது
தேடப்படுவாய் அது வரை
அமைதியாக காத்திரு..!

மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!

நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!

போராடிக் கிடைக்கும்
தோல்வி கூட கொண்டாட
வேண்டிய வெற்றி தான்
என்பதை என்றும்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!

எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் அது தான்
வாழ்க்கையில்
சந்தோசத்தை
உருவாக்கும்..!

மேலும் படியுங்கள்..