சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal

Thathuvangal

இந்த “சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • சிந்தனை தத்துவங்கள்
  • Thathuvangal

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal

தோல்வியை கண்டு அஞ்சினால்
வெற்றியை தழுவ முடியாது..
அச்சம் தவிர்..!

தைரியம் என்ற ஒற்றை
மந்திரம் உள்ளத்தில்
இருக்கும் வரை..
வாழ்க்கைப் பயணத்தில்
பயமும் இல்லை..
பாரமும் இல்லை..!

பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்..
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும் சிரித்துக்
கொண்டே இருங்கள்..!

உன்னிடம் என்ன
இருக்கிறதோ.. அதற்கு
நன்றியுடன் இரு.. ஏனெனில்
இங்கு பலர் எதுவுமே இல்லாமல்
வாழ்க்கையை கழிக்கிறார்கள்..!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
இரண்டே வழிகள் தான்..
ஒன்று சூழ்நிலையை
மாற்றுங்கள்.. இல்லையனில்
சூழ்நிலைக்கேற்ப நீங்கள்
மாறி விடுங்கள்..!

வெற்றி பெரும் வரை குதிரை
வேகத்தில் ஓடு.. வெற்றி
வந்த பிறகு குதிரையை விட
வேகமாக ஓடு.. அப்பொழுது
தான் வெற்றி உன்னிடம்
நிலைத்திருக்கும்..!

நீ வெற்றி பெற்றால்
சாதனையாளன் பெறாவிட்டால்
பிறருக்கு போட்டியாளனே தவிர
தோல்வியாளன் இல்லை..!

வெறும் பெருமைக்காக எதையும்
செய்யாதே.. உன்
மனநிறைவுக்காக உனக்கு
பிடித்ததை பெருமையோடு
செய்..!

நடப்பதை மாற்ற முடியாது..
ஆனால் நினைப்பதை
மாற்றிக் கொள்ளலாம்
நடக்காது என்று
தெரியும் போது..!

பிறரை பற்றி அதிகம்
தெரிந்து கொள்ளவும்
வேண்டாம்.. உன்னைப் பற்றி
அதிகம் பிறருடன் பகிர்ந்து
கொள்ளவும் வேண்டாம்..
இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு
கேடு விளைவிக்கும்..!

என்றும் நீங்கள் நீங்களாக
இருங்கள்.. விரும்பினால்
பழகட்டும்.. வெறுத்தால்
விலகட்டும்..!

போராடு… இவனால் இதை
செய்ய முடியாது என்று
சொன்னவர்கள்.. இதை
எப்படி செய்தாய்
என சொல்லும் வரை..!

இல்லையே என்று ஒருபோதும்
வருந்தாதீர்கள்.. இருந்து
இருப்பதை விட.. இல்லாமல்
இருப்பதின் வலி குறைவு தான்..!

அனைவருக்கும் வரலாற்றில்
ஓர் தனி பக்கம் உண்டு..
அந்த பக்கத்தை நிரப்புவதும்
காலியாக வைத்திருப்பதும்
அவரவர் முயற்சியில்
தான் உள்ளது..!

நிறைய துன்பங்களை
சுமந்தாலும் புன்னகைக்க
மறந்து விடாதீர்கள்..
ஒரு நாளிலே வாடிவிடும்
பூக்கள் கூட அழுவதில்லை..!

நீந்த முடியாத மீன்களை
நதி ஒதுக்கி விடும்..
விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதனை
வெற்றி ஒதுக்கிவிடும்..!

உன் கடந்த காலத்தை
நினைத்து வருந்தாதே..
அந்த காலத்திற்கு
நீ செல்ல போவதில்லை..!

நீ சரியாக இருந்தால்
கோவப்படுவதிற்கு அவசியம்
இல்லை.. நீ தவறாக இருந்தால்
கோவப்படுவதில் அர்த்தம்
இல்லை..!

இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்..
சிந்தித்து செயல்படு..!

விரைந்து வந்தேன் என்பதில்
இல்லை.. வீழ்ந்தாலும்
எழுந்து வந்தேன் என்பதில்
தான் உள்ளது நம் பெருமை..!

உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்.. நேர்மை
இருக்கும் இடத்தில் நல்ல
நடத்தை இருக்கும்.. அதிக
அன்பு இருக்கும் இடத்தில்
கோபம் இருக்கும்..!

தவறான பாதையில்
வேகமாக செல்வதை விட..
சரியான பாதையில்
மெதுவாக செல்..!

உன்னை எவர் புரிந்து
கொள்ளாவிட்டாலும்
பரவாயில்லை.. உன்
வழிகளில் நீ
உண்மையாக இரு..!

மேலும் படியுங்கள்…