Tamil தத்துவங்கள் – தத்துவம்

தமிழ் தத்துவங்கள்

இந்த தொகுப்பில் “Tamil தத்துவங்கள் – தத்துவம்” காணலாம்.

  • Tamil தத்துவங்கள் (தமிழ் தத்துவங்கள்)
  • தமிழ் தத்துவம் (Tamil தத்துவம்)

Tamil தத்துவங்கள் – தத்துவம்

மனநிலை சமநிலையில்
இருப்பவர்களால் மட்டுமே
என்றுமே உயர்நிலையை
அடைய இயலும்..!

உணரும் வரை உண்மையும்
ஒரு பொய் தான்.. புரிகின்ற வரை
வாழ்க்கையும் ஒரு புதிர் தான்..!

நீ எதை வேண்டுமானாலும்
இழக்கலாம் வலி கொடியது..
தன்னம்பிக்கையை மட்டும்
இழக்காதே வாழ்க்கை பெரியது..!

பதிலுக்கு பதில் பேசுபவர்கள்
அறிவாளியும் அல்ல.. மௌனமாய்
விலகி நிற்பவர்கள்
முட்டாளும் அல்ல..!

நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கின்றது என்பதை விட
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்..!

மரம் செடியாய் இருக்கும் போது
ஆடு அதனை கடிக்கும்.. அதே செடி
மரமானதும் கடித்த ஆடு
அம்மரத்தின் நிழலில் வந்து படுத்து
உறங்கும்.. இதன் பெயர் தான்
வெற்றி..!

இருளை நேசி விடியல் தெரியும்..
தோல்வியை நேசி..
வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..
உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..
உலகம் உனக்கு புரியும்..!

துன்பம் இல்லாத இன்பமும்..
முயற்சி இல்லாத வெற்றியும்
அதிக நாள் நிலைப்பதில்லை..!

இறப்பதற்கு விஷம் குடிப்பவன்
பிழைத்துக் கொள்கிறான்..
வாழ்வதற்கு மருந்து குடிப்பவன்
இறந்து போகிறான்.. எதுவுமே
நம்ம கையில் இல்லை..
நம்பிக்கையில் தான் உள்ளது..!

வாழ்க்கை என்றால் ஆயிரம்
துயர் வரும்.. அதை எதையும்
பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்..!

எதுவுமே சரியில்லாத போதும்..
எல்லாம் சரி ஆகிவிடும் என்று
நம்புவது தான் வாழ்க்கை..!

எல்லாவற்றையும் இழந்து விட்டோம்
என்று நினைக்கும் போது.. ஒன்றை
மறக்காதீர்கள்.. எதிர்காலம்
என்ற ஒன்று உண்டு..!

வருவது வரட்டும் போவது
போகட்டும் என்று இருந்தால்
நிம்மதி நிச்சயம்..!

குறை இல்லாதவன் மனிதன்
இல்லை.. அதை குறைக்கத்
தெரியாதவன் மனிதனே இல்லை..!

நோய் இல்லை என்று மனதில்
உறுதி செய்.. மனம் போல்
அமையும் உடல்..!

நிகழ்காலத்தை சரியாக
பயன்படுத்திக் கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்..!

உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்..
மனக்காயத்திற்கு அனைத்தையும்
மறந்திடுங்கள்..!

ஒரு வெற்றி ஒரு தோல்வியை
மறக்க செய்யும்.. ஒரு தோல்வி
பல வெற்றிகளை பெற செய்யும்..
முயற்சித்துப் பார்.. முடியாதது
என்று ஒன்றும் இல்லை..!

போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத
பாடத்தை.. பாதிக்கும் போது
கற்றுக்கொள்கிறோம்..!

இல்லாத ஒன்றை நினைத்து
ஏங்குவதன் பெயர் தான் கனவு..
ஏங்கியது கிடைத்ததும் மீண்டும்
வேறு எதற்காவது ஏங்கத்
தொடங்குவதே நிஜம்..!

நோயை விட அச்சமே
அதிகம் கொல்லும்..!

அவமானங்களை நினைத்து
அழாதீர்கள்.. உங்கள் அழகான
வாழ்க்கைக்கு அடித்தளமே
அவமானங்கள் தான்..!

கடந்து போக கற்றுக் கொள்..
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்..!

வல்லவனுக்கு வல்லவன்
உலகில் உண்டு என்றாலும்..
அந்த வல்லவனையும் மிஞ்சும்
ஆற்றலும் பலமும் நம்மிடம் உள்ளது
என நினைத்தால் எதையும்
நம்மால் வெல்ல முடியும்..!

இது போன்ற பதிவுகளை மேலும் படியுங்கள்..