நல்ல சிந்தனைகள் – Sinthanai Thuligal

sinthanai thuligal in tamil

இந்த “நல்ல சிந்தனைகள் – Sinthanai Thuligal” உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மனதில் சிறு மாறுதலையும் ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம்.

நல்ல சிந்தனைகள் – Sinthanai Thuligal

கால் நனையாமல் கடல்
கடந்தவர்கள் உண்டு..
ஆனால் கண் நனையாமல்
வாழ்க்கையைக் கடந்தவர்கள்
இல்லை.

உள்ளதை எப்போதும்
உளியாக வைத்துக் கொள்..
சிலையாவதும், சிறையாவதும்
நீ செதுக்கும் தன்மையை
பொறுத்தது.

எல்லோரும் பயணிக்கிறார்கள்
என்று நீயும் பின் தொடராதே..
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு.

முட்டாள் பழிவாங்க துடிப்பான்..
புத்திசாலி மன்னித்து
விடுவான்.. அதி புத்திசாலி
அந்த இடத்திலிருந்து
விலகி விடுவான்.

உன்னை விட்டு விலக
நினைப்பவர்களுக்கு பாரமாய்
இருப்பதை விட.. அவர்களை
பாராமல் இருந்து பார்
உன் மதிப்பு அவர்களுக்கு
தெரியும்..!

அலட்சியம் என்பது எத்தனை
பெரிய தவறு என்று இழப்பு
ஏற்படும் வரை தெரிவதில்லை.

மறக்க வேண்டியதை
நினைத்து வருந்துவதும்..
நினைக்க வேண்டியவைகளை
மறந்து விடுவதும் தான்..
இந்த உலகத்தில் தற்போது
இருந்து வரும் துன்பங்கள்
அனைத்திற்கும் காரணம்..!

ஓடி ஓடி உழைத்த போது
ஒட்டாத பணம் ஆடி
அடங்கியவுடன் நெற்றியில்
வந்து ஒட்டிக் கொள்கிறது.

உன் குணத்தைப் பற்றி
சொல்ல ஆள் இல்லை..
குறை சொல்ல ஊரே உள்ளது.

கரையும் மெழுகில் இருளை
கடந்து விட முடியும் என்ற
நம்பிக்கை வாழ்க்கையில்
இருக்கட்டும்..!

எப்போது நம்பிக்கையும்
ஆர்வத்தையும் நீ கை
விடுகிறாயோ.. அப்போது
மரணம் உன்னை
கை பிடிக்கும்.

வெற்றி உன் உருவத்தில்
இல்லை உன் மனதில்
துணிவிருக்கும் வரை
உன் வெற்றியை யாராலும்
தட்டி பறித்திட முடியாது.

பிறர் கூறும் குறைகளைக்
கண்டு வருந்தாதீர்..
நிறையுடையவர்களிடம் என்றும்
குறை கூறும் பழக்கம்
இருந்ததில்லை.

இங்கு தடுமாற்றம் இல்லாமல்
செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது..
அதன் பெயர் சாமர்த்தியம்.

புதிதாய் புண்ணியத்தை
தேடுவதை விட்டுவிட்டு,
செய்த தவறுகளை சரி செய்து
பாவத்தை துடைத்தெறியுங்கள்.

உன் வாழ்வில் யார் வந்தாலும்
போனாலும் இறுதிவரை
உன்னோடு நான் தான்
என்கிறது தனிமை.

முட்களையும் ரசிக்க
கற்றுக் கொள்.. வலிகளும்
மறந்து போகும்.

சூழ்நிலை மாறும் போது..
சிலரது வார்த்தைகள் மாறும்..
பலரது முகங்கள் கூட மாறும்..
இதுவே நிதர்சனம்.

தாங்க முடியா வலியென்றால்
அழுங்கள்.. ஆனால்
அழுதுகொண்டே இருக்காதீர்கள்..
மனதில் எரியும் தன்னம்பிக்கையின்
நெருப்பை கண்ணீர் அணைத்து விடும்.

கையேந்தி நிற்கும் மனிதனை
விடுத்து கல்லாக நிற்கும்
கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்
மனிதன் பணத்தையும் பாசத்தையும்.

எவ்வளவு தான் வளைந்து
கொடுத்தாலும்.. சில நேரங்களில்
மனதை உடைத்து விடுகின்றது
இந்த வாழ்க்கை.

வாழ்க்கையில் ஒவ்வொரு
நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள்..
ஏனெனில் வாழ்க்கை நமக்கு
மறுவாய்ப்பு தரப்போவதில்லை.

உன்னால் முடியும் என்பதை
முதலில் நீ நம்பிட வேண்டும்..
உன் மீது நீ கொண்ட நம்பிக்கையே
மற்றவர்களுக்கு உன் மீது
நம்பிக்கை வர காரணமாக
இருக்கும்.

மேலும் படியுங்கள்..

வாழ்க்கை சிந்தனை துளிகள்

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal