இந்த உறவுகளின் கவிதைகள் உங்களுக்கு உறவுகளின் வெளிப்பாட்டை வரிகளாக வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.
- உறவுகளின் கவிதைகள்
- uravugal kavithai
- uravugal kavithaigal
உறவுகளின் கவிதைகள் – uravugal kavithai
உலகில் உறவு என்பது
புத்தகம்.. தவறு என்பது
ஒரு பக்கம்.. ஒரு பக்கத்திற்காக
ஒரு புத்தகத்தை
இழந்து விடாதீர்கள்..!
கோபத்திலும் உங்களை
சபிக்காத உறவு கிடைத்தால்
அவர்களை விட்டு விடாதீர்கள்
நீங்கள் சேர்த்து வைக்காத
சொத்து அவர்கள்.
வாழ்க்கையில் உயரும்
வரை காதை மூடிக் கொள்ளுங்கள்..
உயர்ந்த பிறகு வாயை
மூடிக் கொள்ளுங்கள்..!
நிறம் மாறும் பச்சோந்திகளை
விட அடிக்கடி மனம் மாறும்
மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை.
அன்பாக இரு அனைவரிடமும்..
அடிமையாக இருக்காதே
யாரிடமும்.
சில நாள் பேசாமல்
இருந்து பார்.. பல பேர்
காணாமல் போய் விடுவார்கள்..!
உரிமை இருப்பதாக நினைத்து
பேசி வருந்துவதை விட..
உன் எல்லை அறிந்து
தொல்லை தராமல் தொலைவில்
இருப்பது நல்லது.
கிடைக்காதென தெரிந்தும்
நிம்மதியைத் தேடுகின்றோம்..
நிலைக்காதென தெரிந்தும்
உறவுகளைத் தேடுகின்றோம்..
தேடல் வாழ்க்கையென தெரிவதற்குள்
பலமுறை விழுந்து
எழ வேண்டியிருக்கின்றது.
வாழத் தெரிந்தவனிடம்
வாழ்க்கை இருப்பதில்லை..
பாசம் தெரிந்தவனிடம் உறவுகள்
இருப்பதில்லை.. உழைக்க
தெரிந்தவனிடம் காசு
இருப்பதில்லை.
பணத்தை சரியான இடத்தில்
முதலீடு செய்து
ஏமாந்தவர்களை விட.. அன்பை
சரியான இடத்தில் காட்டாமல்
ஏமாந்தவர்களே அதிகம்..!
சில குற்றங்களை மன்னிப்பதாலும்
சில குறைகளை மறப்பதாலும் தான்
இன்னும் உறவுகள் நீடிக்கின்றன.
கேட்டு பெறப்படும் அன்பில்
உண்மை இருக்காது.. கேட்காமல்
கொட்டப்படும் அன்பிற்கு
மதிப்பு இருக்காது..!
நமக்கு பிடித்தவர்களிடம்
உண்மையாக இருக்க வேண்டும்
என்பதில் வென்று விடுகின்றோம்..
ஆனால் அதே உண்மையை
அவர்களிடம் எதிர்பார்க்கும்
போதுதான் தோற்று விடுகிறோம்.
uravugal kavithaigal in Tamil
தேவை இல்லாமல்
பேசுவதை விட.. அமைதியாக
இருந்து விடலாம்.. நம் மனது
புரியாத யாருக்கும் நம்
வார்த்தைகளும் புரியாது.
சுய நலத்திற்காக உன்னோடு
சிரித்து பழகும் உறவுகளை விட..
ஏதோ ஒரு மூலையில் உனக்காக
கண்ணீர் சிந்தும் உறவை நேசி..!
என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும்
தேடியதில்லை..!
என் சந்தோஷத்தை கொன்று
போட நானே தேடிக்கொண்ட
சாபம் தான் சில
பொய்யான உறவுகள்.
மதிக்காத உறவுகளின் வீட்டில்
மரமாய் நிற்பதை விட..
உந்தன் சொந்த வீட்டில்
வரவேற்கும் கால்மிதியாய்
இருப்பதே மேல்..!
தாகம் தீரும் வரை தான் நீருக்கு
மதிப்பு இருக்கும்.. சில
உறவுகளுக்கு தேவை
இருக்கும் வரை தான்
பாசம் இருக்கும்.
வலியில் பெரிய வலி
எது தெரியுமா நம் கூடவே
இருந்து சிரித்து பேசி பின்
நம் முதுகில் குத்தியது
மட்டுமல்லாமல் ஒன்னும்
செய்யாததை போல்
நடித்துக் கொண்டிருக்கும்
போலி உறவின் நெருக்கமே..!
நிரந்தரம் இல்லா உலகில்
உறவுகள் நிரந்தரம் என்று
எண்ணுவதே வலியின்
தொடக்கம்..!
ஒரே வார்த்தையில் எந்த
உறவும் முறியலாம்.. ஆனால்
ஓராயிரம் முறை மன்னிப்பு
கேட்டாலும் மீண்டும் பழைய
நிலைமைக்கு வராது.
அவசியம் இருந்தால் மட்டும்
பேசும் உறவுகளுக்கு மத்தியில்
அன்புக்காக பேசும் “சிலர்”
கிடைத்தது நான் பெற்ற வரம்.
மேலும் படியுங்கள்..