சிறந்த பொன்மொழிகள் (Sirantha Ponmozhigal)

மிகச் சிறந்த பொன்மொழிகள்

இந்த பதிவு மிகச் சிறந்த பொன்மொழிகள் (Sirantha Ponmozhigal) தொகுப்பை கொண்டது. இந்த பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த ஊக்குவிப்பை கொடுக்கும்.

சிறந்த பொன்மொழிகள் (Sirantha Ponmozhigal)

செய்ய முடிந்தவன்
சாதிக்கிறான்.. செய்ய
முடியாதவன்
அடுத்தவர்களுக்கு
போதிக்கிறான்.

கீழ்த்தரமான
தந்திரங்களாலும்
செயல்களாலும்
இந்த உலகின் மகத்தான
செயல்கள் எதையும்
சாதித்து விட முடியாது.

ஒரு முட்டாள்
தன் நண்பர்களை
பயன்படுத்துவதை விட
ஒரு அறிவாளி தன்
எதிரிகளை நன்றாக
பயன்படுத்திக் கொள்வான்.

நீ யாருக்கும் அடிமை
கிடையாது.. அதே போல
உனக்கும் யாரும்
அடிமை இல்லை.

குறைந்த ஞாபக
சக்தியும் நல்ல
ஆரோக்கியமும்
இருப்பவர்களிடம் தான்
மகிழ்ச்சி அதிகமாக
இருக்கின்றது.

உன் மனம் தான்
எல்லாமே.. நீ எதை
மனதாராக
எண்ணுகிறாயோ
அதுவாகவே
நீ மாறுகின்றாய்.

ஒரு கதவு மூடப்படும்
போது இன்னொரு
கதவு திறக்கிறது.
ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின்
நினைவிலேயே
இருப்பதனால்..
திறந்த கதவுகள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை.

சாதனையாளர்கள்
எல்லாரும் சாதாரண
மனிதர்களே..ஆனால்
அவர்கள் தாங்கள்
கற்ற கல்வியைப் பற்றி
அதிகம் கவலை
கொள்ளாதவர்கள்.

நாம் எதை தொடர்ந்து
செய்கிறமோ அதுவாகவே
மாறுகின்றோம்.. எனவே
திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்.

தன்னம்பிக்கை கொண்டவர்கள்
ஒவ்வொரு பிரச்சனையிலும்
உள்ள வாய்ப்பை
பார்க்கின்றார்கள்.. நம்பிக்கை
இல்லாதவர்கள் ஒவ்வொரு
வாய்ப்பிலும் உள்ள
பிரச்சனையை பார்க்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கை காலத்தினால்
வரையறைக்கு உட்பட்டது..
அதை மற்றவர்களை
குறை சொல்வதில்
வாழ்ந்து வீணாக்காதீர்கள்.

ஒவ்வொரு நிமிடமும்
நல்ல பண்புடன் வாழ்வதில்
அக்கறையாக இருந்தாலே..
இந்த உலகில் எந்நேரமும்
மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இன்றைய தினத்தை
புதிய நாளாக மாற்றுங்கள்..
நாளைய தினம்
ஆக்கப்பூர்வமான
பொழுதாக விடியும்.

உங்களுக்கு மற்றவர்கள்
என்ன செய்யக் கூடாது
என்று நீங்கள்
எண்ணுகிறீர்களோ..
அதை மற்றவர்களுக்கு
செய்யாதீர்கள்.

நல்லது எது கெட்டது
எது என சிந்திக்க தெரியாத
மனிதன் தனக்கு மட்டுமல்ல..
மற்றவர்களுக்கும்
துரோகம் செய்கிறான்.

நீங்கள் மற்றவர்களால்
நேசிக்கப்பட வேண்டும்
என்றால்.. நேசிக்கப்படும்
தன்மையோடு இருங்கள்.

தன்னை கையாள்வதில்
உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த
செயல்கள் ஒன்றையும்
உருவாக்க முடியாது.

ஒருவனின் தெளிவான
குறிக்கோளே.. வெற்றியின்
முதல் ஆரம்பம்.

ஆயிரம் அறிவுரைகளை
விட ஒரு அனுபவம்
சிறந்த பாடத்தை
கற்றுத்தரும்.

நேரத்தை வீணாக
தள்ளிப்போடாதே..
தாமதங்கள் அபாயகரமான
முடிவை தரக் கூடியவை.

மற்றவர்களின் பாராட்டுக்கும்
பழிக்கும் செவிசாய்த்தால்..
நல்ல காரியங்கள் எதையும்
உன்னால் செய்ய முடியாது.

பகை மற்றும் பொறாமை
போன்ற தீய குணங்களை
நீ வெளியிட்டால்.. அது
வட்டியுடன் மீண்டும்
உன்னை வந்து சேரும்.

விதி என்றும் இயற்கை
என்றும் எதுவும் கிடையாது..
உன் எண்ணத்தின்
அடிப்படையிலே
அனைத்தும் நடக்கும்.

மனம் நிறைந்த அன்புடன்
செய்யப்படும் ஒவ்வொரு
செயலும் சந்தோசத்தை
கொண்டு வந்தே தீரும்.

நீ செய்த தவறுகளை
வாழ்வில் எப்போதும்
மறந்து விடாதே..
அவை தான் உனக்கு
வழிகாட்டும் வழிகாட்டி.

பொறாமை என்பது
அடிமைகளின் குணம்..
வாழ்வில் உயர
வேண்டுமானால்
அந்த குணத்தை
முதலில் அழித்துவிடு.


இந்த மிகச் சிறந்த பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் வரிகளாக இருக்கும்.