ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்: நம்மிடத்தில் உதிக்கும் எண்ணங்கள் நம் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.
நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைத்து வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் வெற்றி நிச்சயம்.
- Tamil Quotes
- Tamil Motivational Quotes
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்
விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..!
கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..!
வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.!
விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பிரமாக நிற்கிறது.. நாம் போராடினால் மட்டும் தான் துன்பங்களை கடந்து தடைகளை உடைத்து கம்பிரமான மனிதராக மிளிர முடியும்.
வாழ்வின் விடை மரணம் எவராலும் மறுக்க முடியாது.. இடையில் வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.!
துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.!
வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.!
நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.!
விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..!
நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்.. அவன் தான் தன்னம்பிக்கை.!
எதை வீசினாலும் மட்கி அழிக்கும் மண்.. விதையை மட்டும் விருட்சமாக மாற்றுகிறது இதுதான் இயற்கை.!
வாழ்க்கையில் சில மனிதர்களிடம் கேள்வியையும்.. சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.!
கிடைக்காத வரை எது பெரிதாக தோன்றுகிறதோ.. அது கிடைத்ததும் அற்பமாக தோன்றும்.. இது தான் வாழ்க்கை.!
மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால்.. புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.!
மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.. கவலைகளை மனதில் சேமித்தால் வாழ்க்கை என்றும் துயரமே.!
கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!
படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!
மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!
உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.
சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!
பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்.. ஆனால் ஒருபோதும் உங்களுடைய மரியாதை.. கௌரவம்.. நேர்மை.. இவற்றை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நேசிக்க நேசிக்க வாழ்வை புதுப்பொலிவாய் புத்தம் புதிதாய் வாழ ஆரம்பிப்பாய்.!
Read More Tamil Quotes.