இந்த பதிவில் “நான் ஒரு சமிக்ஞை விளக்கு கட்டுரை” பதிவை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
போக்குவரத்து அதிகாரிகள் செய்யும் பணிக்கு நிகரான வேலையை சமிக்ஞை விளக்குகள் செய்கின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
நான் ஒரு சமிக்ஞை விளக்கு கட்டுரை – 1
ஓய்வே இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் எத்தனை வாகனங்கள் எத்தனை மக்கள் ஒவ்வொரு நாளும் பயணித்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வீதி விதிகளை சரியாக பின்பற்றி விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதற்காக தான் வீதிகளில் என்னை உருவாக்கி இருக்கின்றார்கள்.
ஆம் நான் தான் சமிக்ஞை விளக்கு. நான் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு வழங்கும் சமிக்ஞையை பின்பற்றியே அனைவரும் பயணிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
நான் சிவப்பு நிறத்தை காட்டும் போது அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும். அது போல நான் மஞ்சள் நிறத்தை காட்டும் போது அனைவரும் புறப்பட தயாராக இருக்க வேண்டும். நான் பச்சை நிறத்தை காட்டும் போது அனைவரும் புறப்பட்டு செல்ல முடியும்.
அதே போல தான் வாழ்க்கையில் தடைகளும் சவால்களும் உங்களை சிவப்பு சிறம் போல தடுத்து வைத்திருக்கும். உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் மஞ்சள் நிறம் போல உங்கள் வெற்றிக்கு தயாராக வைத்திருக்கும். பச்சை நிறம் உங்கள் வெற்றிக்கான நேரம் என்பதனை காட்டும்.
எனவே நீங்கள் அனைவரும் சமிக்ஞை விளக்குகள் காட்டும் சமிக்ஞைகளை பின்பற்றி பயணியுங்கள். இதனை பின்பற்றாமல் பயணிப்பதனால் தான் வீதிகள் தோறும் இன்று அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதனால் பல உயிரழப்புக்களும் ஏற்படுகின்றன. வீதிகளில் பயணிக்கின்ற போது ஒவ்வொருவரும் ஒரு இலக்கோடு தான் பயணிப்பார்கள். அத்தோடு அவர்களின் வரவுக்காக பலரும் காத்துகொண்டு இருப்பார்கள்
எனவே நீங்கள் குறித்த இலக்கை சென்றடைய வேண்டுமாக இருந்தால் அவதானத்துடன் சமிக்ஞைகளை பின்பற்றி பயணியுங்கள்.
நான் ஒரு சமிக்ஞை விளக்கு கட்டுரை – 2
வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு சமிக்ஞைகளும் எமக்கு ஒவ்வொரு அறிவித்தல்களை வழங்கும் என்பதனை நாம் அறிவோம். அதுபோல வீதிகளில் உங்களுக்கான பாதுகாப்பு சமிக்ஞைகளை வழங்குவது நான் ஆவேன்.
ஆம் நான் ஒரு சமிக்ஞை விளக்கு. வீதிகளில் முண்டியடித்து கொண்டு அவசர அவசரமாக மிகவேகமாக சிலர் பயணப்படுவார்கள். இதனால் அவர்கள் பல வீதி விபத்துக்களை ஏற்படுத்துவார்கள்.
இதனால் பல உயிரிழப்புக்ள் ஏற்படுவதுடன். பல பேர் அங்கவீனர்களாகவும் அவயங்களை இழக்கவும் நேரிடுகின்றது. ஒரு கண நேரத்தில் நடந்து முடிகின்ற இந்த விபத்துக்கள் கொடூரமானவை பல பேரின் வாழ்வை இது இருளில் ஆழ்த்தி விடுவதனால் இவற்றை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் தான் நான் உருவாக்கப்பட்டிருக்கின்றேன்.
என்னை சரியாக பின்பற்றி வாகனங்களை செலுத்துபவர்கள் பாதுகாப்பாக வீடுகளை சென்றடைவார்கள். மாறாக என்னை மதிக்காமல் விதிகளை மீறி வாகனங்களை செலுத்துபவர்கள் ஆபத்தான விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நிலையானது காணப்படுகின்றது.
மிகவும் வீதி நெரிசல் ஏற்படுகின்ற பெரிய நகரப்பகுதிகளில் என்னை அதிகம் காணலாம். நெரிசலான பகுதிகளில் நாற்புறமும் இருந்து வருகின்ற வாகனங்களை சரியான நேரத்தில் தடுத்து சரியான சமிக்ஞைகளை வழங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் படியாக ஒரு வீதி ஒழுங்கு பார்க்கும் காவல்துறையினர் செய்கின்ற பணிகளை நான் செய்கின்றேன்.
இதனால் விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாது வேகமாக வாகனம் ஓட்டும் சிலரால் தான் விபத்துக்கள் சம்பவிக்கின்றது. இதனை தடுக்கவேண்டுமாயின் நீங்கள் அனைவரும் எனது சமிக்ஞைகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என வேண்டி கொள்கின்றேன்.
You May Also Like: