பழைய புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை

Palaya Puthagathin Suyasarithai Katturai

இந்த பதிவில் “பழைய புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.

முதுமை என்பது அனைவருக்கும் பொதுவானது அதே போன்றுதான் அதிக பாவனையால் புத்தகங்களும் சேதமடைந்து முதுமை அடைகின்றன.

பழைய புத்தகத்தின் சுயசரிதை

பழைய புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 1

ஒரு நூலகத்தில் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்ட இராமாயணம் என்கின்ற ஒரு இதிகாச புத்தகம் நான் ஆவேன். என்னை வாசிக்க விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் அந்தளவிற்கு நான் வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானவன் ஆவேன்.

சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் என்னை மிகவும் பிடிக்கும். இந்து சமயத்தில் காணப்படுகின்ற ஒரு சிறந்த இலக்கியமான என்னுள் இராமன், இலக்குவணன், சீதை, இராவணன், அனுமன் போன்ற பல சிறந்த பாத்திரங்களை கொண்ட மிகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதையை கொண்டுள்ளேன்.

இந்த கதையினை உடைய புத்தகம் ஆதலால் தான் எனக்கு ஒரு அதிக வரவேற்பு அனைவரிடமும் இருக்கின்றது. என்னை ஒரு தடைவ கூட வாசிக்காமலோ கேள்வி படாமலோ இங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

இத்தகைய என்னை வாசிப்பதற்காக பல குழந்தைகள் போட்டி போட்டு கொள்வார்கள். இவ்வாறு என்னை எடுத்து சென்று மிகவும் ஆர்வத்தோடு பலரும் வாசிப்பதனால் தானோ என்னவோ. எனது உடலில் சில தளர்வுகள் ஏற்பட துவங்கயது.

சில பக்கங்கள் சிறிது சிறிதாக சேதமடைய துவங்கியது. பாவிக்க பாவிக்க பொருட்கள் பழுதடைவது இயல்பு தானே அது போல எனது நிலையும் பழுதடைய துவங்கி விட்டது.

இதனை அவதானித்த நூலகர் எனக்கு பதிலாக புதிய பதிப்பு புத்தகங்களை வாங்கி அடுக்கி விட்டு என்னை பழைய புத்தகங்களோடு சேர்த்து விட்டார். ஒரு காலத்தில் பலராலும் ஆர்வத்தோடு தேடப்பட்ட நான் இன்று யாராலும் கண்டு கொள்ளப்படாதவனாக ஒரு ஓரமாக கிடக்கின்றேன்.

எல்லோரது வாழ்வும் இது போன்று தான் என்றெண்ணி நானே என்னை சமாதானப்படுத்தி கொள்கின்றேன். இருந்தாலும் அனைவரின் மனதிலும் எனது கதை ஆழமாக பதிந்திருக்கும் என்று பெருமை கொள்கின்றேன்.

பழைய புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 2

பிறப்பிலே துவங்கி இறப்பிலே முடிவது தான் இந்த மனிதர்களின் வாழ்வு என்பதனை போலவே எனது வாழ்க்கையும். இதில் யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது என்பது யாவரும் அறிந்தவிடயம் ஆகும்.

எல்லோருக்கும் வேண்டிய ஒரு ஆரம்பகல்வியை தருகின்ற ஒரு தமிழ் புத்தகம் நானாவேன். முதன் முதலாக தனது கல்வியை ஆரம்பிக்க வருகின்ற ஒரு குழந்தை தனது தாய்மொழியான தமிழையே ஆர்வத்தோடு கற்கும் அந்த தமிழ் பாட புத்தகம் என்பதனால் அவர்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான அங்கமாக நான் இருப்பேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஏனென்றால் சிறுவயதில் அவர்கள் கற்கின்ற பாடங்கள் அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல ஆழமாக பதிந்து விடும் என்பதனால். என்னை அழகான கவர்ச்சியான வண்ண படங்கள், சிறந்த கதைகள், பாடல்கள் என்று ஒரு இரசனையோடு என்னை உருவாக்கினார்கள்.

பெரிய கனவுகளை சுமந்து வருகின்ற குழந்தைகளின் கைகளில் என்னை கொடுத்து அழகு பார்த்தார்கள். அந்த குழந்தைகள் என்னை வாங்கி கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக தமது கல்வியை கற்க துவங்கினர்.

இதை விடவும் ஒரு பெருமையும் ஆனந்தமும் ஒரு புத்தகத்துக்கு கிடைத்து விடுமா? இவ்வாறு நான் எனது பயணத்தை மகிழ்ச்சியோடு ஆரம்பித்தேன். காலங்கள் கடந்து செல்ல செல்ல அந்த குறும்பு சிறுவர்களின் கைவண்ணத்தால் எனது நிலையும் தளர்ந்து ஒரு பழைய புத்தகமாக மாற துவங்கியது.

இளமையில் திடமாகவும் முதுமையில் தளர்ந்து போவதும் உலக வழக்கம் தான் என்பதனை நான் நன்கறிவேன். இன்று நான் ஒரு பழைய புத்தகமாக அந்த குழந்தைகளின் வீட்டிலே ஒரு ஞாபக சின்னம் போல ஒரு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றேன்.

என்னுடைய கடந்த காலங்களை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்த படி எனது காலத்தை நான் கடந்து கொண்டிருக்கின்றேன்.

You May Also Like:

கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை

நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை