நீரின்றி அமையாது உலகு கட்டுரை

Neerindri Amayathu Ulagu Katturai In Tamil

இந்த பதிவில் நீரின்றி அமையாது உலகு கட்டுரை பதிவை பார்க்கலாம்.

நீரின்றி அமையாது உலகு என்னும் தம் கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார் திருவள்ளுவர்.

நீரே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் நீரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

  • நீரின்றி அமையாது உலகு
  • Neerindri Amayathu Ulagu Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை

நீரின்றி அமையாது உலகு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நீரின் சிறப்பு
  3. நீரின் பயன்
  4. நீர் மாசடைதல்
  5. நீர் பாதுகாப்பு
  6. முடிவுரை

முன்னுரை

“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு” நீரின் பெருமையை இவ்வாறு குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.

அதாவது நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழமுடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லாது விடின் இவ்வுலகில் யாருமே ஒழுக்கமான வாழ்வு வாழ இயலாது.

இப் பிரபஞ்சத்தின் மீது பெய்கின்ற மழையானது தொடர்ச்சியாக பெய்யாது விடின் நீர்நிலைகள் வற்றி, பசுமைகள் வரண்டு போய் உலகமே வெறுமையாக மாறிவிடும். இதனால் இறை நம்பிக்கை அற்று போய் மனிதப் பண்புகளும் மறைந்து விடும் என்பது இதன் உட்கருத்தாக கொள்ளப்படுகின்றது.

இவ் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலம் பெற்று வாழ நீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். இக்கட்டுரையில் நீரின்றி அமையாது உலகு என்பதை விரிவாக பார்க்கலாம்.

நீரின் சிறப்பு

இந்த உலகத்தின் 75 வீதம் நீரினாலே சூழப்பட்டுள்ளது. அந்த நீரானது ஆறுகள், கடல்கள், குளங்கள் மற்றும் ஏனைய பல வடிவங்களில் பரந்து காணப்படுகின்றது.

மனிதனது நாகரீகத்தை உற்று நோக்கினோமானால் ஆதிகாலம் தொட்டே மனிதன் தனது வாழ்விடத்தை நீர் நிலைகளை அண்டியே அமைத்து வந்ததை அறிந்து கொள்ளலாம்.

அத்தோடு நமது முன்னோர்கள் நீரை தெய்வமாக போற்றி வந்துள்ளனர். மாரிகாலத்தில் கிடைக்கும் மழைநீரை அணைக்கட்டுகள் குளங்கள் அமைத்து அதனை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்தினார்கள்.

இளங்கோ அடிகளார் “மாமழை போற்றுவம்” என மழையைப் போற்றி வணங்கி தனது காப்பியத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

இதன் மூலம் எமது முன்னோர்கள் நீரிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவே நீரின் சிறப்பு ஆகும்.

நீரின் பயன்

நீரே மனித வாழ்வின் அடித்தளமாக கொள்ளப்படுகின்றது. நீர் இல்லையேல் மனித இனமே அழிந்து விடும். நீரில் அதிகளவான ஒக்சின் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி உடலை மிகவும் வலுவாக மாற்றுகின்றது.

மனிதர்களிற்கு மட்டுமல்ல, இவ் வையகத்தில் உள்ள செடி, கொடி, மரம் போன்ற இயற்கைக்கு பசுமை சேர்க்கின்ற தாவரங்களிற்கும் ஏனைய உயிரினங்களிற்கும் நீர் இன்றியமையாததாக விளங்குகின்றது.

நீரானது குடித்தல், சமைத்தல், போன்ற அன்றாட தேவைகளிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதோடு மின்சக்தி உற்பத்தி, விவசாயம் செய்தல் போன்றனவற்றிற்கும் பயன்பட்டு வருகின்றது.

தற்போதய நவீன சூழலில் விவசாயத்தை மேற்கொள்வது அரிதாகி வருகின்றது. இதற்கான பிரதான காரணம் நீர்வளக் கிடைப்பனவு குறைவடைந்து வருவதாகும்.

தாவரங்களிற்கு உணவு உற்பத்தி செயன்முறைக்கு நீர் மிகவும் அவசியமாகும்.

நீர் மாசடைதல்

அனைத்து உயிரினங்களிற்கும் மிக முக்கியமாக விளங்குகின்ற நீரானது பல்வேறு காரணிகளால் மாசுபட்டு அருகிவரும் நிலமை காணப்பட்டு வருகின்றது.

நீர் மாசடைதலிற்கு பிரதான காரணமாக அமைவது, கைத்தொழில் மயமாதல் ஆகும். அதாவது அதிகளவான தொழிற்சாலைகள் முறையற்ற விதத்தில் அமைக்கும் போது அதன் கழிவுகள் நீர்நிலைகளிலேயே கொட்டப்படுகின்றன.

இதனால் நீர் அதிகளவில் மாசடைகின்றது. எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், புயல் போன்றவற்றினால் நீர் மாசடைந்தாலும் குப்பைகூழங்களை நீர்நிலை மேல் கொட்டுதலே அதிகளவான மாசடைதலை ஏற்படுத்துகின்றது.

மேலும் குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறுஞ்சுதல் நீர்வளத்தை அரிதாக்குகின்றது.

நீர் பாதுகாப்பு

நீரின் அளவு குறைந்து வருதல், நீர் மாசடைதல் போன்ற காரணங்களால் நீர்ப்பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 22ம் திகதி நீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மாத்திரமே எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க முடியும்.

மாரிகாலத்தில் மழைநீரை தேவையற்று கடலில் சேரவிடாது குளங்கள், அணைக்கட்டுக்களை அமைத்து சேகரித்து அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும்.

ஓவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பது நீரை சேமிப்பதற்கான பிரதான வழியாகும்.

மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்குபவை காடுகள். ஆகவே காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியமானது.

முடிவுரை

உலகளாவிய ரீதியில் அதிகளவான பேசுபொருளாக மாறிவருவது அருகிவரும் நீர்வளங்களை பாதுகாத்தல் பற்றியதாகும்.

ஓவ்வொருவரிற்கும் இன்றி அமையாததாக விளங்குகின்ற நீர் வளத்தை பாதுகாத்தல் நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதனை எதிர்கால சந்ததியினரிற்கு கையளிப்பதனூடாக இவ் வையகம் சிறப்பாக விளங்க வழிவகுப்போமாக.

You May Also Like :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

மழைநீர் சேகரிப்பு கட்டுரை