இந்த பதிவு “தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Quotes in Tamil” உள்ளடக்கியுள்ளது.
- தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Quotes in Tamil
- Motivational Quotes in Tamil
- தமிழ் Motivational Quotes
- Tamil Motivational Quotes
தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Quotes in Tamil
யாரையும் அற்பமாக
நினைத்து விடாதீர்கள்..
சிறிய தீக்குச்சியின் வலிமை தான்
பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..!
தேவையற்ற எண்ணங்களை
நீ சுமக்கும் வரை உன் வாழ்வில்
நிம்மதி என்பது சாத்தியம்
இல்லாததாகவே இருக்கும்..!
வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்க
கற்றுக் கொள்.. நிம்மதியும்
நிறைவும் நிலைக்கும்..!
எல்லாவற்றையும் எல்லாரிடமும்
சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்கு
காதுகள் இருக்கும் புரிந்து
கொள்வதற்கு மனங்கள் இருக்காது..!
எதுவாக இருந்தாலும் அது
இருக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்
போன பிறகு அதை எண்ணி வருந்தாதே..!
ஒருவர் யார் என்பதை
புரிந்து கொண்ட பிறகு.. அவரோடு
பழகுவது என்பது இயலாத ஒன்று..
முதலில் பழகு காலப்போக்கில்
அவரே அவரை வெளிப்படுத்துவார்..!
தேவையில்லாமல் நீ தடுமாறும்..
ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..!
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத
தகுதிகளை வளர்த்துக் கொள்..
அதற்காகவே உன்னை தயார்படுத்து..
அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!
நீ செய்யும் ஒரு சில செயல்கள்
விரைவாய் செய்து முடிக்கப்பட
வேண்டியவை அல்ல.. நிறைவாய்
செய்து முடிக்கப்பட வேண்டியவை..!
ஒருவரின் முதிர்ச்சி அவர் எவ்வளவு
வயதில் உள்ளார் என்பதில் இல்லை..
எவ்வளவு அனுபவத்தையும்
அறிவையும் கொண்டிருக்கிறார்
என்பதில் தான் இருக்கிறது..!
வாழ்வில் அனைத்தையும்
இழந்த பிறகு உன்னோடு யார்
இருக்கின்றார்களோ.. அவர்களே
உனக்கானவர்கள்..!
தேவையற்ற எண்ணங்களில் இருந்து
நீ வெளி வா.. உன்னை மீறி நடக்கும்
நிகழ்வுகளுக்கு நீ எதை சிந்தித்தும்
பலன் இல்லை..!
சில இடத்தில் நீ வாய் திறந்தால்
மாட்டிக் கொள்வாய் அமைதியாக
இருக்க பழகி கொள்..!
சிலவற்றிற்காக காத்திருப்பதை விட
கடந்து செல்வது.. உனக்கு
நல்லதாக அமையும்..!
நீ அறிந்து கொள்ளாதவையும்..
நீ புரிந்து கொள்ளாதவையும்
உனக்கானது அல்ல..!
அதிக வலிகள் நிறைந்தது பிடித்த
உறவுகளின் பிரிவும் அவர்களின்
மௌனமும் தான்..!
எது ஒன்றையும் பார்த்து புலம்பாதே..
வேடிக்கை பார்க்கும் சில மனிதர்களிடம்
உன் வேதனைகளுக்கு
விடை இருக்காது..!
உன்னை புரிந்தவர்கள் பிரிந்து
சென்றால் அது உனக்கு வலி..
உன்னை புரியாதவர்கள் உன்னை
பிரிந்து சென்றால் அது தான்
உன் வாழ்விற்கான வழி..!
எதாவது சாதிக்க விரும்பினால்
அதை மற்றவர்களின் துணை
இல்லாமல் தனியாக செய்..
ஏனெனில் துணை என நினைக்கும்
சிலர் வாழ்விற்கு வினையாக
மாறக் கூடும்..!
எப்போதும் கலக்கமும்
குழப்பமும் கொள்ளாதே..
எதுவாக இருந்தாலும் கடந்து செல்..!
பொய்யாக இருந்தாலும் சிலவற்றை
நம்பித்தான் ஆக வேண்டும்..
உண்மையாக இருந்தாலும்
ஒரு சிலதை நீ உதாசீனம்
செய்து தான் வாழ வேண்டும்..!
மேலும் பதிவுகளை படியுங்கள்…