கன்பூசியஸ் பொன்மொழிகள்

Confucius Quotes In Tamil

இந்த பதிவில் உலக புகழ் பெற்ற சீன நாட்டு தத்துவ ஞானி “கன்பூசியஸ் பொன்மொழிகள்” காணலாம்.

  • கன்பூசியஸ் பொன்மொழிகள்
  • கன்பூசியஸ் தத்துவங்கள்
  • Confucius Quotes In Tamil

கன்பூசியஸ் பொன்மொழிகள்

1.தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.. தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு.

2. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

3. பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன் பாம்பை மனதில் வளர்க்கிறான்.

4. ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமை தான்.

5. ஒவ்வொன்றும் அழகுடையதே ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.

6. அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள்.. அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.

7. மனதைக் கடமையில் செலுத்துங்கள்.. ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. அன்புக்கு கட்டுப்படுங்கள்.. மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.

8. உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.

9. புகழைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால் புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

10. நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.

11. கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.

12. உங்களுக்கு எதை மற்றவர்கள் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள்.

13. உயர்ந்த குணமுள்ள மனிதன் தான் எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.

கன்பூசியஸ் தத்துவங்கள்

14. விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்ற முடியாது.

15. பெற்றோருக்கான தொண்டு மேலோரிடம் மரியாதை., நண்பர்களிடம் நல்லுறவு., நாட்டுக்கான அர்ப்பணிப்பு., கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவன் ஆவான்.

16. இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

17. தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது.

18. மனத்திடம் இல்லாத மனிதனால், வறுமையையும் சரி.. செல்வநிலையையும் சரி.. வெகுநாள் தாங்க முடியாது.

19. இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும் போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.

20. வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன்.

21. அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர்.. உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.

22. உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.

23. ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை.

24. சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.

25. எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.

26. துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறமோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்து விட்டோம் என்பது உறுதி.

மேலும் பதிவுகளை படியுங்கள்..

வாழ்க்கை தத்துவம் | Valkai Thathuvam

நற்சிந்தனை தமிழ் – Natsinthanai In Tamil

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal